சூப்பர் ஸ்டார்க்கு 10 ருபாய் …

விளம்பரங்கள்

பிரபல கண் மருத்துவர் காயத்ரி ஸ்ரீகாந்த் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு அவரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

அதில் எப்பொழுதும் எளிமையாக இருக்கும் ரஜினி பெங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்றார். அப்பொழுது கோவிலில் தரிசனம் செய்ய வந்த குஜராத் பெண் ஒருவர் அங்கு சுவற்றில் தலை சாய்ந்து அமர்திருந்த மனிதனை கண்டார்.

அவரை பிச்சைக்காரன் என நினைத்து 10 ருபாய் பிச்சையிட்டார்,முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் ஒன்றும் சொல்லாத ரஜினி பொறுமையாக கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பிறகு தன் காரை நோக்கி சென்ற ரஜினிஐ அடையாளம் கண்ட பெண் அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

அவரிடம் ரஜினி உலகில் எது நிரந்தரம் என கடவுள் தனக்கு அடிக்கடி உணர்த்துவதாக கூறியவர் தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் இல்லை என்பதை உங்கள் மூலமாக கடவுள் எனக்கு உணர்த்தியுள்ளார். என பொறுமையாக பதில் சொன்னார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: