செய்திகள்,முதன்மை செய்திகள் ஊட்டியை பரவசத்தில் ஆழ்த்திய ‘லிண்டுலேட்டியா அமோனா‘

ஊட்டியை பரவசத்தில் ஆழ்த்திய ‘லிண்டுலேட்டியா அமோனா‘

ஊட்டியை பரவசத்தில் ஆழ்த்திய  ‘லிண்டுலேட்டியா அமோனா‘ post thumbnail image
மெக்சிகோவை தாயகமாக கொண்ட ‘லிண்டுலேட்டியா அமோனா‘ என்ற மலர் செடி உள்ளது.. குளிர் பிரதேசங்களில் மட்டுமே பூக்க கூடிய லிண்டுலேட்டியா அமோனா என்ற மலரானது இப்பொழுது ஊட்டியில் பூத்துக்குலுங்குகிறது….

இந்த மலரை தேன்நிலவு மலர்கள் என்றும் கூறுவார்கள்… தேனிலவு தம்பதிகள் அதிகளவு வரும் சீசன் சமயத்தில் இந்த மலர் பூத்துக்குலுங்குவதால் தேனிலவு மலர் என்றும் கூறுவார்கள்…
தொலைவில் இருந்து காணும்போது இட்லி வடிவத்தில் காட்சியளிப்பதால் இட்லி பூ என்றும் அழைக்கப்படுகிறது…

‘லிண்டுலேட்டியா அமோனா‘ மலர்கள் அதன் அழகினால் சுற்றுலா பயணிகளை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது…பறவையினங்களை கவரும் வகையில் இதன் நறுமணம் இருக்கும்….
அபூர்வமான இந்த லிண்டுலேட்டியா அமோனா மலர் செடி கடும் குளிர் நிலவும் பனி காலமான நவம்பர் மாதத்தில் பூக்கும் தன்மையுடையது… தற்பொழுது ஊட்டி தாவரவியல் பூங்காவில், ‘லிண்டுலேட்டியா அமோனா‘ மலர்கள் பூத்துக்குலுங்குவது சுற்றுலா பயணிகளை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது…
அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் லிண்டுலேட்டியா அமோனா மலர்கள் ஊட்டியில் பூத்து குலுங்குகிறது..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி