பொங்கலின் வெடி:கோச்சடையன் ரஜினியுடன் மோதும் ஜில்லா மற்றும் வீரம்

விளம்பரங்கள்

பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படம் என்றாலே அனைத்து ரசிகர்களிடமும் ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும்… அது போலவே பொங்கலுக்கு வர இருக்கும் படமான கோச்சடையன் படத்திற்கும் மக்களிடையே தனி எதிர்பபார்ப்பு உள்ளது …

ரஜினி படத்துடன் வேறு எந்த படமும் சமீபகாலமாக போட்டி போடுவதில்லை … ஆனால் பொங்கலுக்கு திரையிடுவதற்காக தயாரான அஜித் மற்றும் விஜயின் வீரம் மற்றும் ஜில்லா படம் கோச்சடயனுக்கு போட்டியாக திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது..

கடைசி முறை ரஜினி அவர்களின் படத்தோடு போட்டியிட்ட மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் சச்சின் தோல்வியை தழுவியது…
அதனாலே சில காலமாக ரஜினியின் படத்திற்கு போட்டியாக 2,3 வாரங்களுக்கு எந்த படமும் வெளியிடுவதில்லை..

ரஜினியின் படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பிறகும், தனது வீரம் படத்தை அதே நாளில் களமிறக்கப் போவதாக அஜீத்தும் அவரது தயாரிப்பாளரும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

ஜில்லா படத்தையும் பொங்கல் அன்றே, அதுவும் கோச்சடையான் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ஜனவரி 10-ம் தேதியே வெளியிடப் போவதாக அதன் தயாரிப்பாளர் மகன் ரமேஷ் அறிவித்துள்ளார்..

காத்திருந்து பார்க்கலாம் கோச்சடையன் படம் மற்ற படங்களை தோற்கடிகிறதா என்று…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: