திரையுலகம்,முதன்மை செய்திகள் விஜய சேதுபதியின் நண்பேண்டா…

விஜய சேதுபதியின் நண்பேண்டா…

விஜய சேதுபதியின் நண்பேண்டா… post thumbnail image
விஜய சேதுபதி கைவசம் எட்டு படங்கள் இருப்பதாக ஒரு செய்தி. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு, தன்னுடைய நேரம் முழுதும் பல படங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் புதிய படங்களை ஏற்க தயங்கி வருகிறார்.

விஜய சேதுபதி படம் என்றால் நம்பி தியேட்டருக்கு செல்லலாம் என்று தமிழ் ரசிகர்கள் எண்ணும் அளவிற்கு வெகு வேகமாக ரசிகர்களின் நெஞ்சத்தில் புகுந்து விட்டார். ஆனால் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமால், ஒரு படம் வெற்றி பெற்றாலே வெட்டி பந்தா காட்டும் நடிகர்கள் மத்தியில் அவரை ஒப்பந்தம் செய்ய வரும் அனைவரிடமும் தன் நிலையை எடுத்து கூறி தனக்காக ஆண்டுக்கணக்கில் வீணாக காத்திருக்காமல், அந்த கதையை வேறு நடிகர்களை வைத்து படம் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறார். மேலும், தன் நட்பு வட்டார நடிகர்கள் சிலரையும் கைகாட்டி விடும் விஜய சேதுபதி, தன் படங்களில் நடித்த, சில வளர்ந்து வரும் கதாயகர்களுக்கு சிபாரிசு செய்து தமிழ் திரையுலகை அசத்தி வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி