அரசியல்,முதன்மை செய்திகள் போட்டது தவறான செய்தி இதில் பெருமை வேறு….

போட்டது தவறான செய்தி இதில் பெருமை வேறு….

போட்டது தவறான செய்தி இதில் பெருமை வேறு…. post thumbnail image
சமீபத்தில் ஒரு இணையதள செய்தியில் லோக்சபா தேர்தலில் பாஜக உடன் மதிமுக கூட்டணி அமைக்கப் போவதாக ஒரு செய்தி வந்திருந்தது. ஆனால் தான் அப்படி கூறவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

வைகோ வெளியிட்ட அறிக்கையில்கூறியிருப்பதாவது:-

அக்டோபர் 27ம் தேதி பாட்னா குண்டு வெடிப்பில் நரேந்திர மோடியின் உயிருக்கு குறிவைக்கப்பட்டதால் அச்சம்பவத்தில் நடக்கக் கூடாத விபரீதம் ஏற்பட்டிருந்தால் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட ரத்தக் களறிகளை விட நாம் கற்பனை செய்ய முடியாத வகுப்பு மோதல்கள் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் இருதரப்பிலும் கொல்லப்பட்டிருப்பார்கள். குண்டுகள் வெடித்த பின்னரும் மேடைக்குச் சென்ற நரேந்திர மோடி அதைப்பற்றி குறிப்பிடாமலேயே இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்திப் பேசியதும் பிரச்சினையை கையாண்ட விதமும் பாராட்டுக்குறியதாகும் என்று 28ம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தேன். இதில் கைது செய்யப்பட்ட நபர்கள் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய உளவு நிறுவனம் அறிவித்ததை ஊடகங்களும் ஏடுகளும் வெளியிட்ட போதிலும் அந்த அமைப்பின் பெயரைக் குறிப்பிடாமலேயே இக் கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் மீதும் பின்னணியில் இருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வன்செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் பாஜக உடன் வைகோ கூட்டணி அமைக்கப் போவதாக அறிவித்து விட்டதாக ஒரு தவறான செய்தி வெளியாகி உள்ளது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் அச்செய்தி பரவியுள்ளதால் பல நாடுகளில் இருந்து தமிழர்கள் நான் அப்படி அறிவித்து விட்டேனோ என்று அலைபேசிகளில் வினவுகின்றனர். கூட்டணி குறித்து நான் எதுவும் கூறவில்லை என்பதை தெளிவுபடுத்தவே இந்த அறிக்கையை அனுப்பியுள்ளேன் என்று தனது விளக்கத்தில் வைகோ தெளிவுபடுத்தியுள்ளார்.

வைகோ பாஜக உடன் கூட்டணி வைக்க போவதாக போட்ட செய்தியே தவறு…இதில் அந்த இணையத்தளம் வைகோவின் மறுப்பறிகைக்கு தாங்கள் தான் காரணம் என்று பெருமை அடித்து கொள்வதை என்ன வென்று சொல்வது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி