ஆரம்பம் திரைவிமர்சனம்…சிம்புவின் கூவல்…

விளம்பரங்கள்

உங்களுக்கு தான் தெரியுமே சிம்பு தல அஜீத்தின் தலையாய ரசிகர் என்று, அதை மீண்டும் நிருபிப்பது போல் சிம்புவின் ஆரம்பம் திரைப்பட விமர்சனங்கள் கணினி பறவை(ட்விட்டர்) வழியே ஊரெல்லாம் கூவி கொண்டிருகிறது.

அவரது முதல் கூவல் “எனது டிக்கெட்டைப் பதிவு செய்து விட்டேன். எனக்கு மட்டும் 31ந்தேதியே தீபாவளி. படத்தைப் பார்ப்பதற்குக் காத்திருக்க இயலவில்லை”

இரண்டாவது கூவல் “நாலு மணிக்கு ஷூட்டிங் முடிஞ்சதும், நேரா 5 மணிக்கு தியேட்டருக்கு செல்ல வேண்டும். விசிலடிக்கக் காத்துக் கொண்டிருக்க இயலவில்லை”‘

மூன்றாவது கூவல் “படம் நிச்சயம் ஹிட் ஆகும், யுவன் சங்கர் ராஜாவின் பிண்ணனி இசை சூப்பர்… காசி தியேட்டர் அட்டகாசம்…'”

திரைபடத்தை பார்த்து விட்டு வெளியே வந்தவுடன் வந்த கூவல் “கிட்டத்தட்ட தியேட்டரில் இருந்து வெளியே வர 30 நிமிடங்கள் ஆனது. ரசிகர்களின் அன்பிற்கு நன்றி. படத்தைப் பார்த்து விட்ட திருப்தியில் இனி போய் நிம்மதியாகத் தூங்கவேண்டும்”

இவரது கணினி பறவை(ட்விட்டர்) கூவல்களை கேட்டு நமக்கும் தலயின் ஆரம்பம் படத்தின் ஜுரம் பற்றி கொள்ளும் போல் இருக்கிறது

சிம்பு,தல,அஜீத்,ஆரம்பம்,திரைவிமர்சனம்,தமிழ் சினிமா,கோலிவுட்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: