முதன்மை செய்திகள்,விளையாட்டு பார்முலா 1 வெட்டல் 4வது முறையாக உலக சாம்பியன்

பார்முலா 1 வெட்டல் 4வது முறையாக உலக சாம்பியன்

பார்முலா 1 வெட்டல்  4வது முறையாக உலக சாம்பியன் post thumbnail image
பார்முலா 1 கார் பந்தயத்தில் முக்கியமாக இந்தியாவில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், தொடர்ந்து 3வது ஆண்டாக கோப்பையை கைப்பற்றிய ரெட் புல் அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல், 4வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த சீசனில் மொத்தம் 19 போட்டிகள் இவற்றில் 15 போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியன் வெட்டல் முன்னிலை வகிக்க, டெல்லி கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்தா சர்வதேச பந்தயக் களத்தில் 16வது போட்டி நேற்று நடந்தது. இதில் ரெட் புல் அணி வீரரும் நடப்பு சாம்பியனுமான செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) மிக அபாரமாக செயல்பட்டு முதலிடம் பிடித்ததுடன் உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். அவர் 60 சுற்றை ஒரு மணி 31 நிமிடம் 12.187 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். மெர்சிடிஸ் அணி வீரர் நிகோ ராஸ்பெர்க் 2வது இடமும், லோட்டஸ் அணியின் குரோஸ்ஜீன் 3வது இடமும் பிடித்தனர். பெராரி அணி நட்சத்திர வீரர் பெர்னாண்டோ அலான்சோ 11வதாக வந்து கார் பந்தய ரசிகர்களை ஏமாற்றதில் தள்ளியுள்ளார்.

விஜய் மல்லையாவின் போர்ஸ் இந்தியா அணி வீரர்கள் பால் டி ரெஸ்டா 8வது இடமும், அட்ரியன் சுடில் 9வது இடமும் பிடித்தனர். நடப்பு சீசனில் இதுவரை நடந்துள்ள 16 பந்தயங்களின் முடிவில் 322 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள வெட்டல், உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து சாதனை படைத்தார். டெல்லியில் 2011 மற்றும் 2012ல் நடந்த போட்டிகளில் கோப்பை வென்றிருந்த அவர் நேற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

தொடர்ந்து 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ள அவர் இந்த சாதனையை நிகழ்த்தும் மிக இளம் வீரர் (26) என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக, மேனுவல் பாங்கியோ மற்றும் மைக்கேல் ஷூமேக்கர் ஆகியோர் தொடர்ச்சியாக 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இந்த சாதனையை நிகழ்த்தும் 3வது வீரர் என்ற பெருமையும் வெட்டலுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த 10 வீரர்கள்

ரேங்க் வீரர் அணி புள்ளி
1 செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) ரெட் புல் ரேசிங் 322
2 பெர்னாண்டோ அலான்சோ (ஸ்பெயின்) பெராரி 207
3 கிமி ரெய்க்கோனன் (பின்லாந்து) லோட்டஸ் 183
4 லூயிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) மெர்சிடிஸ் 169
5 மார்க் வெப்பர் (ஆஸ்திரேலியா) ரெட் புல் ரேசிங் 148
6 நிகோ ராஸ்பெர்க் (ஜெர்மனி) மெர்சிடிஸ் 144
7 ரொமெய்ன் குரோஸ்ஜீன் (பிரான்ஸ்) லோடஸ் 102
8 பெலிப் மாஸ்ஸா (பிரேசில்) பெராரி 102
9 ஜென்சன் பட்டன் (இங்கிலாந்து) மெக்லாரன் 60
10 பால் டி ரெஸ்டா (இங்கிலாந்து) போர்ஸ் இந்தியா 40

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி