திரையுலகம்,முதன்மை செய்திகள் அரங்கு நிறைந்த…ஆரம்பம்

அரங்கு நிறைந்த…ஆரம்பம்

அரங்கு நிறைந்த…ஆரம்பம் post thumbnail image
தல அஜீத்தின் ஆரம்பம் திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியது. ஆரம்பம் திரைப்பட முன்பதிவிற்காக சில அடுக்குமாடி வணிகவளாக திரையரங்குகளில் தனியாக முன்பதிவுகளை ஆரம்பிதிருக்கிறார்கள். காலை 8 மணி முதலே ரசிகர்கள் முன்பதிவு அறைகளை மொய்க்க ஆரம்பித்து விட்டார்கள். வருகிற அக்டோபர் 31ந் தேதி ஆரம்பம் திரைப்படம் உலகெங்கும் தமிழ் ரசிகர்களுக்காக தீபாவளி விருந்து படைக்க வருகிறது.

நவம்பர் 5ந் தேதி வரைக்கும் முன்பதிவு முடிந்து விட்டதாக திரையரங்க மேலாளர்கள் அறிவித்துள்ளனர். உலகெங்கும் மற்றும் சென்னை அடுத்த பிற நகரங்களிலும் முன்பதிவு தொடங்கியது. எங்கும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று திரையரங்க சீட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜாலில் இதுவரை 24 காட்சிகளுக்கு அனைத்து காட்சிகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. முதல் நாளன 31ந் தேதி மட்டும் 70 காட்சிகள் மாயாஜாலில் திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதுதவிர பல அடுக்குமாடி வணிகவளாக திரையரங்குகளில் இணையதள பதிவுகள் தொடங்கியது. பல திரையரங்க சீட்டு இணைய தளங்கள் ஆரம்பம் திரைப்படத்திற்கென தனி பக்கத்தை துவக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது, அதிலும் வேக வேகமாக முன்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி