பிரபாகரன் இறந்ததாக முடிவே செய்துவிட்டார் கேப்டன்

விளம்பரங்கள்

சென்னை விமான நிலையத்தில் நேற்று விஜயகாந்த்தை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர்.

கேள்வி – காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே?
பதில் – நான் என்ன சொல்ல வேண்டும். கனடா கலந்து கொள்ளாது. ஆனால் அந்நாட்டு பிரதிநிதி பங்கேற்பார் என்றும், இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைக்கு எதிர்ப்பை பதிவு செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தற்போது பேசி என்ன நடக்கப்போகிறது?. என் தலைவன் பிரபாகரனையே கொன்றுவிட்டனர். இனிமேல் பேசி என்ன ஆகப்போகிறது?
கேள்வி – மாநகர ஸ்மால் பேருந்துகளில் இரட்டை இலை படம் வரையப்பட்டுள்ளதே…
பதில் – நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். ஜனநாயகத்தின் நான்காவது தூண் நீங்கள்தான்.
கேள்வி – தமிழகம் விரைவில் மின்மிகை மாநிலமாக மாற்றப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளாரே?
பதில் – அதை பொறுத்து இருந்துதான் பார்க்கணும். இப்பதான் அடுப்புல சோற்றை வைத்து இருக்கிறார். அது வெந்ததா? குலையுதா? என்பது மெதுவாகத்தான் தெரியும். இப்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது. அது முடிந்த பிறகுதான் தெரியும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: