உத்தம வில்லனின் பிடியில் சிக்கிய கதாநாயகி

விளம்பரங்கள்

நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் 2 வது பகுதியை முடித்த கையோடு உத்தம வில்லன் திரைபடத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் வருமான துறையினரிடம் சிக்கிய லிங்குசாமி சகோதரர்களின் திருப்பதி பிரதர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

இந்த திரைபடத்தில் ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாளை முதலில் அணுகினர் அப்போது நடிக்க மறுத்த காஜல் அகர்வால் இப்போது சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட நடிகரும் கமலின் உற்ற நண்பருமான ரமேஷ் அரவிந்த் தமிழில் முதல் முறையாக இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ரமேஷ் அரவிந்த் ஏற்கெனவே கமலை வைத்து கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு கமல்ஹாசனின் ஆஸ்தான வசன கர்த்தா கிரேஸிமோகன் திரைக்கதை, வசனங்களை எழுதுகிறார். இசைஞானி இளையராஜாவின் புதல்வர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் காஜல் ஆனால் இப்போது ஏன் இந்த மாற்றம் என்று அவரை அணுகியது போது “முதலில் அவர்கள் தேதி கேட்டது செப்டம்பரில். அப்போது என்னிடம் கால்ஷீட் இல்லை. ஆனால் இப்போது படம் நவம்பர் – டிசம்பருக்கு தள்ளிப் போயிருக்கிறது. அதனால் கால்ஷீட் கொடுத்துவிட்டேன்,” என்கிறார் காஜல்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: