திரையுலகம்,முதன்மை செய்திகள் வணக்கம் சென்னை – திரை விமர்சனம்

வணக்கம் சென்னை – திரை விமர்சனம்

வணக்கம் சென்னை –  திரை விமர்சனம் post thumbnail image
நம்ம நகைச்சுவை கதாநாயகன் “மிர்ச்சி சிவா” – வின் அடுத்த நகைச்சுவை படம் தான் இந்த “வணக்கம் சென்னை”. கதை என்னமோ சென்னை தான் ஆனா கதாநாயகன் வருவது தேனி பக்கத்தில ஒரு கிராமத்தில இருந்து அதே சமயத்துல லண்டன்ல இருந்து சென்னைக்கு வராங்க நம்ம கதாநாயகி ப்ரியா ஆனந்த், அவங்க ஒரு அக்மார்க் தமிழ் பொண்ணு என்பது குறிப்பிடதக்கது. இதுல என்ன நகைச்சுவை என்று கேட்காதீர்கள்… அங்க தான் படத்தோட இயக்குனர் திருமதி கிருத்திகா உதயநிதி ஒரு முடிச்ச போடுறாங்க… நம்ம கதாநாயகனும் கதாநாயகியும் சில பல காரணங்களால் ஒரே வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. முதலில் ஒருவரை ஒருவர் கடித்துக் கொள்வது போல் பயங்கர எதிரிகளாக பார்த்துக் கொள்கிறார்கள். நம்ம கதாநாயகன் சிவாவுக்கு கதாநாயகி ப்ரியா ஆனந்த் மேல மெல்ல மெல்ல காதல் அரும்பு பூக்கிறது, இங்க தான் இயக்குனர் இன்னொரு முடிச்ச போடுறாங்க அது என்னவென்றால், ப்ரியா ஆனந்த் ஏற்கனவே நிச்சயம் ஆன பெண். படத்தின் இடைவேளை வரைக்கும் சந்தானத்திற்கு ஓய்வு . இடைவேளைக்குப் பிறகு படம் முழுவதும் சந்தானம் தான்.

சிவா எப்பொழுதும் போல மொக்கை போடுகிறார். சிவகார்த்திகேயன் மாதிரி கொஞ்சம் நடிக்கவும் செய்யணும் என்பதை மறந்துவிட்டார் போல தெரிகிறது.

ப்ரியா ஆனந்த் சிரிக்கும் போது ஒரு அழகுதான். ஆனால் மற்ற ரசங்களில்(அதாங்க நவரசம்) கோட்டைவிடுகிறார். அவர் முகம் ஏன் எப்பொழுதும் எண்ணெய் வடிவது போல் தெரிகிறது என்று நமக்கு புரியவில்லை.

சந்தானத்திற்கு என்று ஒரு கணக்கு இருக்கிறது….மனுஷன் அதை வெகு சுலபமாக இந்த படத்திலும் செய்துவிட்டார். எவ்வளவு நாள் தாங்கும் என்று தெரியவில்லை…

இந்த திரை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. இந்தப் படத்தில் கதை கூட பரவாயில்லை ஆனால் திரைக்கதை தான் படு மொக்கை, திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு பெண் இயக்குனர் எடுத்துள்ளதால் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம், அந்த வகையில் இயக்குனர் கிருத்திகா உதயநிதியை பாராட்டலாம்.

இந்த திரைபடத்தை நீங்கள் மதிப்பிட இங்கே அழுத்தவும்!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி