உச்சநீதி மன்ற தீர்ப்பு…லாலு வரிசையில் யாரோ …

விளம்பரங்கள்

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளி வந்திருக்கிறது. இதனால் லாலு பிரசாத் எம்.பி. பதவி யை இழந்துள்ளார் 6 வருடங்களுக்கு அவர் தேர்தலில் நிற்க முடியாது. லாலு பிரசாத் முதல்வராக பதவி வகித்த காலத்தில் ரூ37.7 கோடிக்கு மாட்டு தீவன கொள்முதலில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிய பட்டு . கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஊழல் வழக்கில் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 30ந் தேதி பீகார் முன்னாள் முதலமைச்சர்கள் லாலுபிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 45 பேர் குற்றவாளிகள் தான் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வெளியானதும் லாலுபிரசாத் ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிபிஐ தரப்பில் அதிகபட்சம் 7 ஆண்டுகால தண்டனை விதிக்க வாதிடப்பட்டது ஆனால் அவருக்கு நோய்கள் அதிகம் இருப்பதால் குறைவான தண்டனையை நீதிபதிகள் கொடுத்துள்ளனர், 5 ஆண்டு கால சிறைத் தண்டனையும் ரூ 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னைய உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்றால் எம்.பி. எம்.எல்.ஏ பதவி வகிக்க முடியாது. தற்போது லாலுவுக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் தமது நாடாளுமன்ற எம்.பி. பதவியை இழக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: