தல அஜீத்தின் ஆட்டம் “ஆரம்பம்”

விளம்பரங்கள்


தல அஜீத் நடித்த ஆரம்பம் படத்தின் பாடல்களும் படத்தின் ட்ரைலரும் வெளியாகின. நம்ம தல’ யின் ரசிகர்களுக்கு இதனால் ஒரே நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ஆரம்பம் படத்தின் பாடல்கள் சக்கை போடு போடுகிறது.

பாடல்கள் முதலில் ஆப்பிளின் ஐட்யூன்ஸில் மட்டுமே வெளி வந்தது இதனால் பணம் செலுத்தி பாடல்களை டவுன்லோட் செய்வதில் மும்முரம் காட்டினர் தல ரசிகர்கள், படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்தையும் பா விஜய் எழுதியிருக்கிறார்.

பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். “அடடா ஆரம்பம்” பாடல் எடுத்த எடுப்பிலேயே ஹிட்டாகிவிட்டது. மற்றொரு பாடல் ஸ்டைலிஷ் தமிழச்சியும் செம ஹிட். படத்தின் ட்ரைலரை யூட்யூபில் வெளியிட்டனர். வெளியான சிலமணி நேரங்களில் 4 லட்சம் விசிட்களை நெருங்கிவிட்டது இந்த ட்ரைலர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: