சிம்பு இப்போதைக்கு சிங்கள் தான்

விளம்பரங்கள்

ஹன்ஷிகா – சிம்பு காதல் அறிவிப்பு பிறகு நடுவில் யார் யாரோ வைத்த வத்தியில் ஒரு சின்ன லடாய் ரொம்ப கஷ்டப்பட்டு இப்போது தான் மீண்டும் ஹன்ஷிகாவிடம் பேச ஆரம்பித்து இருக்கிறார் சிம்பு. மேலும் எப்படியும் அடுத்த ஆண்டு திருமணத்தை நடத்தி விட வேண்டும், அல்லது திரும்ப யாராவது புகுந்து குட்டையை குழப்பி விடுவார்கள் என்ற பயத்திலே இருக்கிறாராம் சிம்பு.

ஹன்சிகாவின் தாயாரிடம் சிம்பு-ஹன்சிகா திருமணம் குறித்து கேட்ட போது ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி கூறுகையில், “ஹன்சிகா கையில் 9 படங்கள் உள்ளன. அவர் தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் சுந்தர். சி.யின் அரண்மனை பட ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார் எனவே ஹன்சிகா நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால் இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை, 9 படம் முடியவும் மேலும் பேசிவரும் படங்களை ஒத்து கொண்டு முடிக்கவுமே 2 ஆண்டுகள் ஆகும், அது தான் ஏற்கனவே 5 ஆண்டுகள் ஆகும் என்று சொல்லிவிட்டோமே” என்கிறார்

மேலும் துபாயில் நடந்த சிமா விருது விழாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஹன்சிகா ஸ்ரீதேவியின் கையால் பெற்றுள்ளார். இதை பற்றி ஹன்சிகா சொல்கையில் “என் கனவு நடிகையான ஸ்ரீதேவியின் கையால் விருது வாங்கியதை நினைத்து நினைத்து பூரிக்கிறேன்” என்கிறார் ஹன்சிகா.

இதை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது இப்போதைக்கு சிம்பு-ஹன்சிகா திருமணம் நடப்பதாக தெரியவில்லை. சிம்பு பாடு திண்டாட்டம் தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: