ரஜினி கமல் முன்னிலையில் வெடிக்கப்போகும் பிரச்சனை…

விளம்பரங்கள்

நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் கூடுகிறது, ரஜினி, விஜயகாந்த், கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த முறை தவறாமல் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது. நடிகர் சங்க கணக்கு வெளியிடாத விவகாரம், நடிகர் சங்கக் கட்டட வழக்கு மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டி அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சங்க உறுப்பினர்கள் பலர் நடிகர் சங்கத்துக்கு மனுக்கள் அனுப்பி வைத்துள்ள மனுக்கள் என் பல பிரச்னைகள் இதில் வெடிக்க போகிறது.

பொது குழு கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் ராதாரவி, துணைத்தலைவர்கள் விஜயகுமார், கே.என்.காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நடிகர் நாசர் தலைமையில் அதிருப்தி நடிகர்கள் பொதுக்குழுவில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்புவார்கள் என்று தெரிய வருகிறது.

நடிகர் விஷால் உள்ளிட்ட இளம் நடிகர்கள் கூட சங்கத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறி எதிர்ப்பை வெளிப்படையாகப் பதிவு செய்யப் போவதாகக் கூறியுள்ளனர். இந்த பரபரப்புகளால் பொதுக்குழு கூட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சின்ன பரபரப்பும் கூடியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: