முதன்மை செய்திகள்,விளையாட்டு நம்ம ஜடேஜா தான் டாப்

நம்ம ஜடேஜா தான் டாப்

நம்ம ஜடேஜா தான் டாப் post thumbnail image
கிரிகெட் வீரர்களுக்கான ஐசிசி ஒரு நாள் தர பட்டியல் சமீபத்தில் அறிவிக்கபட்டது. ஒரு நாள் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் தொடருகிறார்.இன்னொரு இந்திய வீரரான விராத் கோஹ்லி, பேட்ஸ்மேன்கள் வரிசையில் 4வது வீரராக இருக்கிறார்.

கேப்டன் டோணி, பேட்ஸ்மேன் வரிசையில் 7வது இடத்தில்இருக்கிறார். சுரேஷ் ரெய்னா 16வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஆர் அஸ்வின், புவனேஸ்குமார் முறையே 18 மற்றும் 20வது இடத்தில் உள்ளனர். பந்து வீச்சாளர்களில் ஜடேஜாவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் மேற்கு இந்தியத் தீவுகளின் சுனில் நரேன். அதேசமயம்ஆல்ரவுண்டர்கள் வரிசையில் 4வது இடத்தில்இருக்கிறார் ஜடேஜா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி