திரையுலகம் வருத்தப்படாத கோலிவுட்….வருத்தப்படாத வாலிபர் சங்கம்..

வருத்தப்படாத கோலிவுட்….வருத்தப்படாத வாலிபர் சங்கம்..

வருத்தப்படாத கோலிவுட்….வருத்தப்படாத வாலிபர் சங்கம்.. post thumbnail image

வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் வாரத்தின் வார இறுதியிலேயே இப்படம் ரூ. 11.85 கோடியை வசூல் செய்துள்ளது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, அடுத்து எதிர்நீச்சல் என இரு ஹிட் படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன் இப்ப அடித்திருப்பது நம்ம கிரிக்கெட் கேப்டன் தோனி ஷாட்… வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வசூல், சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகப் பெரிய ஹிட் படம் என்று வர்த்தக ஆய்வாளர் திரிநாத் தெரிவித்துள்ளர்.

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே நல்ல ஓப்பனிங் கொடுத்த படம் இதுதான் மேலும் சிவகார்த்திகேயன் இதுவரை 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் இருப்பினும் அதற்குள் மக்களின் நடிகராக அவர் உயர்ந்துள்ளார். காமெடியை மையமாக வைத்து அவர் நடிப்பது அனைவரையும் ஈர்த்துள்ளது என்றும் திரைத்துறையினரால் விரும்பப்படும் நடிகராகவும் அவர் உயர்ந்துள்ளார் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி