இங்க பாருடா…தமிழுக்கு வந்த வாழ்வ…

விளம்பரங்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி தருண் விஜய், தமிழின் பெருமைகளை விளக்கிப் பேச நமது மாண்புமிகுகள் ஆடிப் போய்விட்டனராம். தருண் விஜய் பேசுகையில், வடக்கில் உள்ள எனது சகாக்கள் சிலரின் அடக்குமுறை, அராஜகம் மற்றும் பிடிவாதப் போக்கினால், உலகின் மிகச் சிறந்த மொழிகளில் ஒன்றான தமிழின் பெருமைகளை இந்தி பேசும் மக்களால் புரிந்து கொள்ளவே முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. ஏழு கடல்களையும் தாண்டிய பெருமை படைத்தது தமிழ் மொழி மட்டும்தான். அதன் தாக்கத்தை உலகம் முழுவதும் காணலாம். செம்மொழியான தமிழ் அத்தனை உச்சங்களையும் கொண்டுள்ள தனிப்பெரும் மொழி. காலங்கள் பலவற்றைத் தாண்டியும் இன்னும் சிறப்பாக உள்ள ஒரே மொழி தமிழ் மட்டும்தான். தமிழ் மொழியை கெளரவப்படுத்தும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உயர் கல்விநிறுவனங்களில் சிறப்பு இருக்கைகளை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். தமிழில் சிறப்பு பெறுவோருக்கு சிறப்பு பதவி உயர்வுகளை வழங்க வேண்டும். அதேபோல அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கு தனியாக இருக்கைகளை அமைக்க வேண்டும். அதேபோல அனைத்து வட இந்தியப் பள்ளி, கல்லூரிகளில் தமிழைப் பரப்ப மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக திட்டமிட வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ்ப் புலவர்கள், தமிழறிஞர்கள் வட இந்திய புனிதத் தலங்களான கேதார்நாத் உள்ளிட்டவற்றுக்கு அதிகம் வந்துள்ளனர். மேலும் வட இந்திய, தென்னிந்தியா இடையே நல்லுறவும் இருந்துள்ளது தேசியக் கவிஞராகப் போற்றப்படும் பாரதியார்தான் உண்மையிலேயே தேசிய ஒற்றுமையின் தலை சிறந்த அடையாளம். வட இந்தியர்களின் டர்பன் அணிந்து, கலாச்சாரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர் பாரதியார். தமிழ் மொழிக்கு மிகச் சிறந்த பெருமைகள் உள்ளன. ஆனால் அந்தத் தகுதிக்குரிய கெளரவத்தையும், மதிப்பையும் நாம் கொடுத்திருக்கிறோமா என்ற கேள்விக்கு இங்கு யாரிடமும் பதில் இல்லை என்று வருத்தத்துடன் முடித்தார் தருண் விஜய்.

அவர் பேச பேச நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றும் புரியவில்லை… அதுவம் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கூடுதலாக RSS-க்கு நெருக்கமானவர் இப்படி பேசியத்தை நம்ப முடியாமல் அதிசயித்தது போயுள்ளனர்.[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: