திரையுலகம்,முதன்மை செய்திகள் கமல்,விக்ரம்,சூர்யா வரிசையில்…நிற்க போகிறவர்

கமல்,விக்ரம்,சூர்யா வரிசையில்…நிற்க போகிறவர்



காணொளி:-

சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத ஒரு காரியத்தை செய்திருக்கிறார் நடிகர் ஷாம். படத்தின் கேரக்டருக்காக சில ஹீரோக்கள் தாடியும் நீண்ட தலை முடியும் வளர்த்து வித்தியாசம் காட்டுவார்கள். அல்லது, மொட்டை அடிப்பார்கள். உடம்பை ஏத்துவதும் இறக்குவதும் தவிர, சில சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் கூட எடுப்பார்கள். ஆனால் இதிலிருந்து வித்தியாசப்பட்டு நடிகர் ஷாம், கட்டையால் கண்ணுக்கு கீழே ஓங்கி அடித்தால் கண்கள் எப்படி வீங்குமோ அவ்வளவு பெரிதாக வீங்க வைத்து நடித்திருக்கிறார். ’6′ என்ற படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக தமிழ் சினிமாவில் யாரு எடுத்திராத ரிஸ்கை எடுத்திருக்கிறார் ஷாம்.
‘கிட்டத்தட்ட பத்து நாட்கள் தூங்காமல் இருந்து அந்த தோற்றத்தை கொண்டு வந்தேன்.. வி இசட். துரை இயக்கத்தில் இப்போது ”6 ” என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

ஆறு கெட் அப், ஆறு மாநிலங்கள், ஆறு மெழுகுவர்த்திகள் என்று ஆறு அர்த்தம் கொண்ட சம்பவங்கள் இடம்பெறும்.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக 89 கிலோ எடையிலிருந்து 72கிலோவாக எடையைக் குறைத்தேன். கிட்டத்தட்ட ஒருவருடம் தாடியும் நீண்ட முடியுமாக ஆறு மாநிலங்களில் சுற்றித்திரிந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

இதையும் தாண்டி படத்திற்கு இன்னும் எபெக்ட் தேவை என டைரக்டர் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்போதுதான் இயக்குனர் துரையிடம், நான் கண்களை இப்படி வீங்க வைத்து வருகிறேன். அதற்கு ஒரு பத்து நாள் தூங்காமல் இருக்கவேண்டும் என்றேன். அவர், அது முடியுமா? ஆபத்தாச்சே? மற்ற இடமென்றால் பரவாயில்லை.. கண்ணில் போய் ரிஸ்க் எடுக்க வேண்டுமா? வீக்கம் குறையாவிட்டால் வாழ்க்கை பூரா கண்தெரியாமல் போக நேரிடும். தவிர நீ ஒரு நடிகன். நடிகனுக்கு முகம் தான் முக்கியம் . அந்த அழகு இந்த படத்துக்கு பிறகும் வேண்டும். வேண்டாம் ஷாம் ரிஸ்க் என்றார். இருந்தாலும் இந்த படத்தில் என் முழு அர்ப்பணிப்பையும் காட்டி இருக்கேன். இந்த படம் எனக்கு ரொம்ப முக்கியம். அதனால் செய்தே தீருவேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டேன்.
இடையில் ஒருநாள் இயக்குனருக்கு போன் செய்து இன்னும் நான்கு நாட்கள் கழித்து ஷூட்டிங் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி வைத்துவிட்டேன்..

எல்லோரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாராக காத்திருக்க நான் போய் இறங்கினேன். என் கண்ணைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி. சில மணி நேரத்துக்கு என் கண்களைப் பார்க்கவே பயந்தார்கள். கடவுள் புண்ணியம் மீண்டும் என் கண்கள் பழைய நிலைக்கு ஒரு வாரம்[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.