ரஜினியை மொய்க்கும் பாலிவூட்

விளம்பரங்கள்

Dhoom 3 poster

காணொளி:-

யாஷ் ராஜ் பிலிம்ஸ் அமீர் கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப் உள்ளிட்டோரை வைத்து எடுக்கும் படம் தூம் 3. இதில் என்ன விசேஷம் என்றால் அந்த படத்தில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருகிறது, அமீர் கான் இந்த படத்தில் வில்லனாக நடிக்க போகிறார்.

இந்தி திரையலகில் நம்ம சூப்பர் ஸ்டாருக்கு நிறைய ரசிகர்கள் இருப்பாதாலும் அது மட்டும் இன்றி ரஜினி படங்கள் சர்வேதேச திரை சந்தையில் அதிக லாபம் அள்ளுவதாலும் தான் அமீர் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. ஏற்கனவே ஷாருகான் தனது படத்தில் எந்திரன் ரஜினியை அனிமேஷனில் பயன்படுத்தியது அனைவர்க்கும் நினைவிருக்கும்.

இன்றைய நிலவரப்படி ரஜினியுடன் சேர்ந்து நடிக்க பாலிவூட் நடிகர்கள் ரெடி ஆனால் ரஜினி தான் ஒகே சொல்லவேண்டும்….அவர் சரி என்று சொன்னால் கூடிய விரைவில் ரஜினியும் அமீர்கானையும் ஒன்று சேர்த்து பார்க்கலாம்.
அமீர் படத்திற்கே ஒரு மவுசு என்றால் சூப்பர் ஸ்டாரும் இணைந்தால் இந்திய மற்றும் இன்றி உலக அளவில் அந்த படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: