திரையுலகம்,முதன்மை செய்திகள் பில்லா – 2 மீடியாக்களுக்கு செம தீனி

பில்லா – 2 மீடியாக்களுக்கு செம தீனி

Tamil movies Billa and Saguni

காணொளி:-

அஜீத் நடிக்கும் பில்லா – 2 பற்றிய செய்திகளுக்கு இப்பொழுது தனி மவுசு. இந்த நாள் ரீலீசாகிறது அந்த நாள் ரீலீசாகிறது என்று தினம் ஒரு செய்தி…ஒரு படத்தின் ரீலிசை வைத்து ஒரு சடுகுடு ஆட்டமே நடந்து கொண்டிருக்கிறது. நாம கதைக்கு வருவோம்…நம்ம இனியதமிழ் தளத்தில் கடந்த 5 இம் தேதி நாம் வெளியிட்ட பில்லா -2 ரிலீஸ் செய்தி நமக்கே ஆப்பு வைத்துவிட்டது. பில்லா – 2 ரிலீஸ் கொஞ்சம் தள்ளிப்போயிருக்கிறது கார்த்தியின் சகுனி செய்த வேலை தான் அதற்கு காரணம். தல அஜீத்தை பார்த்து கொஞ்சமும் சகுனி பட யூனிட் பயந்ததாக தெரியவில்லை. ஒரு வேலை அஜீத்துடன் மோதுவதே ஒரு பப்ளிசிட்டி என்று நினைத்தார்களோ என்னவோ…

யாருக்காக யாரும் அஞ்சவில்லை, எல்லாம் விநியோகஸ்தர்களின் வேண்டுகோள்படிதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு முக்கியமான படத்திற்கு முதல் வார கலெக்ஷன் என்பது மிக மிக முக்கியமான விஷயம். பெரிய படங்கள் இரண்டு ஒரே நேரத்தில் வெளிவந்தால் ஹீரோக்களுக்குள் பலபரீட்சை நடக்குமோ, இல்லையோ? நிச்சயம் விநியோகஸ்தர்களையும் தியேட்டர்காரர்களையும் பொருத்தமட்டில் அது விஷப்பரீட்சை. இதற்காகதான் பில்லா-2 படத்தை அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போட்டார்களாம்.

ஆனால் ஏன் சகுனியை முன்னால் விட்டுவிட்டு பில்லா – 2 பின்னால் வருகிறது…அந்த ரகசியம் தான் புரியவில்லை…[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.