திரையுலகம்,முதன்மை செய்திகள் ஒவியாவிற்காக நடக்கும் நீயா நானா போட்டி

ஒவியாவிற்காக நடக்கும் நீயா நானா போட்டி

Actress Oviya

காணொளி:-

தமிழ் திரையுலகில் சென்டிமென்ட்டுக்கு பஞ்சமே இல்லை…மன்மதன் அம்புவில் சாப்பிடிறீங்களா…என்று ஒரு வசனத்தையே பேசி நடிகர் மாதவனையும் நம்மளையும் வெறுப்பேத்திய நடிகை ஓவியதான் அந்த சென்டிமென்டின் மையம். ஓவியா தான் வேண்டும் என்று ஒரு களவாணி விமலும் மனம் கொத்தி பறவை இயக்குனர் எழிலும் தான் அந்த நீயா நானா பார்ட்டிகள். ஓவியா விமலுடன் சேர்ந்து நடித்த இருபடங்களும் நல்ல ஹிட் அதை மனதில் வைத்துகொண்டு அவர் தான் வேண்டும் என்று விமல் ஒத்தைக் காலில் நிற்கிறாராம்.

மனம் கொத்தி பறவை படத்திற்கு பிறகு இயக்குனர் எழில் இயக்க இருக்கும் அடுத்து படத்தில் விமல் தான் கதாநாயகன், ஆனால் படத்திற்கு பூஜை ஆரம்பிப்பதற்குள் இந்த நீயா நானா போட்டி உருவாகி இருக்கிறது. தன்னுடைய படத்திற்கு ஓவியா தான் கதாநாயகி என்று விமலும், ஓவியா பெயரை சொன்னாலே பின்னங்கால் பிடரியில் அடிக்க எஸ்கேப் ஆகிறாராம் இயக்குனர் எழில்.

விமலுக்கு சினிமாவில் கதாநாயகன் அந்தஸ்த்து ஏற்படுத்தி தந்த படம் களவாணி. அதில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்து அசத்தி இருந்தார், படமும் சரியான ஹிட். அதேபோல் இப்போது வெளிவந்த கலகலப்பு படமும் நல்ல பெயரை வாங்கி தந்திருக்கிறது. அதனால் தான் தன்னுடைய அடுத்த படத்திலும் அவரை நடிக்க வைக்க சொல்லி எழிலை நச்சரிக்கிறாராம் விமல். கலகலப்பு படத்தில் ஓவியா அவர்க்கு ஜோடியாக நடிக்கா விட்டாலும் அவர் தான் நடிக்கும் படத்தில் இருந்தாலே படம் ஹிட்டகிவிடும் என்று உறுதியாக இருகிறாராம் விமல்….பல வருடங்கள் காத்திருந்து அடைந்த இடம் அல்லவே…சும்மா விடுவாரா…[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.