ரஜினி படத்திற்கு ஓகே. கமல் படத்திற்கு நோ

விளம்பரங்கள்

Kamal hassan Viswaroopam tamil movie

காணொளி:-

கமலின் பிரமாண்டமான படம் விஸ்பரூபம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது அதன் டீசரே அதற்கு எடுத்துக்காட்டு. இந்த படத்தில் நடிக்க பாலிவூட் நடிகை தீபகா படுகோனை அணுகி இருக்கிறார் தயாரிப்பாளர் ஆனால் ரஜினி படத்திற்கு ஓகே சொன்ன அதைவிட காத்திருந்த ஆவர் கமல் படத்தில் நடிக்க மறுத்து இருக்கிறார். இதை கமலே உறுதிபடுத்தி இருக்கிறார். “உண்மையில் அந்த வேடத்திற்கு தீபிகாவின் பெயரை நான் பரிந்துரைக்கவில்லை. எனது படத்தின் பைனான்ஷியர்தான் தீபிகா நடிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டினார்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழா சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது இந்த விழாவில் முதல் முறையாக கமலின் விஸ்வரூபம் திரையிடபட்டிருக்கிறது. படத்தை பார்த்த அத்தனை பேரும் வியந்து பாராட்டித் தள்ளி விட்டனராம் கமலஹாசனை. இந்த படம் மிகப் பெரிய அளவில் பேசப்படும் என்பதே படத்தைப் பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது. விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள், இப்படத்தில் முதலில் தீபிகா படுகோன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை, ஏன் என்று கேள்வி எழுப்பினர். .

“தீபிகா இப்படத்தில் இடம் பெறுவதாக இருந்தது. ஆனால் அவர்தான் நடிக்க மறுத்து விட்டார். நாங்கள் கேட்ட தேதிகளை அவரால் கொடுக்க முடியவில்லை. எனவே நாங்கள் அவரை விட்டு வி்ட்டோம்” என்பதே கமலின் பதிலாக இருந்தது. “உண்மையில் எனது படத்தின் பைனான்ஷியர்தான் தீபிகா நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். நான் அவரது பெயரை ஆரம்பத்திலிருந்தே பரிந்துரைக்கவில்லை” என்கின்ற விஷயத்தை கலைஞானி போட்டு உடைத்தார். “இருந்தாலும், இப்படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். இது எனக்கு பெரும் திருப்தி அளித்துள்ளது, மகிழ்ச்சி அளித்துள்ளது என்றார் கமல் அவருக்கே உரித்தான கம்பீரத்துடன்.[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: