நமீதாவும், சோனாவும் போட்ட பிறந்த நாள் ஆட்டம்

விளம்பரங்கள்

Tamil actress Sona Birthday Celebration

காணொளி:-

தமிழகத்தின் கவர்ச்சி புயல்கள் சோனாவும், நமீதாவும் கொஞ்ச நாளைக்கு முன்பு வரை முட்டி மோதிக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பாசத்துடன் கை குலுக்கிக் கொண்ட காட்சி தான் கோலிவுட்டை கலக்கி கொண்டிருக்கிறது. தமிழகத்தின் கவர்ச்சி பற்றாக்குறையை இவர்கள் தான் தீர்த்துக் கொண்டிருகிறார்கள். இவர்கள் இருவரும் கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருகின்றனர். இவர்கள் இருவரில் சோனாவை விட நமீதாவுக்கே ரசிகர்கள் கூட்டம் அதிகம். நமீதா ரசிகர்களின் கூட்டம் அவர் படம் வெளியாகும் போது பார்க்க வேண்டுமே….அப்படி ஒரு கட்டுக்கடங்கா ரசிகர் கூட்டத்தை தன் பக்கம் வைத்திருப்பவர் நமீதா. “மச்சான்ஸ்” என்கின்ற அவரின் கொஞ்சலுக்கு ஒரு கூட்டம் எப்போதுமே அலையடிக்கும்.

நமீதாவுக்கு, சோனா ஒன்றும் குறைச்சல் இல்லை ஆனால் என்னோவோ தெரியவில்லை நமீதா வைத்திருக்கும் அளவிற்கு ரசிகர் கூட்டம் சோனாவுக்கு இல்லை, இதனால் இடையில் இருவருக்கும் மோதல் முற்றிக் கொண்டு, சரமாரியாக இருவரும் கலாய்த்துக் கொண்டனர். நமீதாவைப் பார்த்து திமிர் பிடித்தவர் என சோனாவும், “சோனான்னா இன்னா” என்று நமீதாவும் மாறி மாறி பகைமை வளர்த்துக் கொண்டனர். ஆனால் சமீபத்தில் சோனா தனது பிறந்த நாளையொட்டி கொடுத்த சரக்கு பார்ட்டியில் நமீதா விசிட் அடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டார்.

திரையுலகின் இன்றைய இளம் நடிகர் நடிகையர் உள்பட பலரும் திரண்டு வந்து சோனாவை வாழ்த்தி அவரை மொய்த்துவிட்டனர். இந்த விழாவில்தான் நமீதாவும் தன பங்குக்கு சோனாவை பற்றி நாலு வார்த்தை பாராட்டி அனைவரயும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். சோனா தயாரிப்பில் இருவரும் சேர்ந்து ஒரு குத்தாட்டம் போட்டாலும் ஆச்சர்யம் இல்லை…[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: