எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்

விளம்பரங்கள்

[rps]

Magaram Raasi Logo

பிற ராசிகளுக்கு
1. குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்
2. குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்
3. குருபெயர்ச்சி பலன் 2012 – மிதுனம்
4. குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்
5. குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்
6. குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி
7. குருபெயர்ச்சி பலன் 2012 – துலாம்
8. குருபெயர்ச்சி பலன் 2012 – விருச்சிகம்
9. குருபெயர்ச்சி பலன் 2012 – தனுசு
10. குருபெயர்ச்சி பலன் 2012 – கும்பம்


பேரன்புள்ள மகரராசி அன்பர்களே! வணக்கம்!! வாழி நலம்!!!

நவக்கிரகங்களில் சந்தோஷ சாம்ராஜ்யம் மிக்க செய்திடும் ஸ்ரீசனி பகவானை ராசியாதி பதியாகவும், ஆட்சிகிரகமாகவும் கொண்டு வீடாகவும் அமையப்பெற்ற உங்கள் ராசிக்கு 3,12 க்குடைய த்ருதீய விரயாதிபதியும்,ஜெயஸ்தானாதிபதியுமான ஸ்ரீPகுருபகவான் இது வரையில் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி உங்கள் ராசிக்கு சுகஸ்தானமும் நான்காமிடமுமான மேஷராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இவர் ஸ்வஸ்;திஸ்ரீ ஸ்ரீநந்தன நாம ஆண்டு வைகாசி மாதம் 4ஆம்தேதி ஆங்கிலம் மேமாதம் 17ஆம் தேதி 2012 ஆம்ஆண்டு (17-5-2012) வியாழக்கிழமை அன்று மாலை 6-18 மணியளவில் பெயர்ச்சியாகி ராசிமாறி உங்கள் ராசிக்குபூர்வபுண்ணியஸ்தானமும், தனபஞ்சமாதிபதியும் ஐந்தாமிடமுமான ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து 27-5-2013 ஆண்டு வரை ஒராண்டு காலம் அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.

குணநலன்கள்

உங்கள் ராசிநாதன் சனி என்பதால், நியாயத்திற்கும், நேர்மைக்கும் நீங்கள் துணை போவீர்கள். நிலத்தில் வியர்வை சிந்தி பாடுபட்டால் தான் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்று சொல்வீர்கள். பேச்சில் கடுமை இருந்தாலும், பழகுவதில் இனிமை இருக்கும். நிர்வாகத் திறமை மிக்கவர்களாக விளங்குவீர்கள். உழைப்பில் அதிக நம்பிக்கை வைத்திருப்பீர்;கள். விஞ்ஞானத்துறையிலும், மெஞ்ஞானத்துறையிலும் அக்கறை கொண்ட நீங்கள் எதையும் வீணாக்க விரும்ப மாட்டீர்கள். நமக்கும் ஒரு நேரம் வரும் என்ற நம்பிக்கை அதிகம் வைத்திருப்பீர்கள். கர்வமும், லட்சியமும், இணைந்தே உங்களிடம் குடி கொண்டிருக்கும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருப்பீர்கள்.குடும்பத்தினர் மகிழ்ச்சி ஒன்றே முக்கிய குறிக்கோள் என்று பரபரப்பு காட்டாமல், தான் உண்டு, தனது தொழில் உண்டு என்று பொறுமையாக முன்னேற்றத்தை கண்டு வருபவரே!

நல்லது எது? கெட்டது எது? என்பதை சீர்; து{க்கி பார்க்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு, நீங்கள் பேசும் வெளிப்படையான பேச்சுக்களே உங்களுக்கு எதிர்ப்புகளை உருவாக்கும். உங்கள் மனதில் எது சரியென்று படுகிறதோ, அதைத்தான் செய்வீர்கள். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டாலும், கடைசி முடிவாக உங்கள் முடிவையே நீங்க வைத்துக் கொள்வீர்கள். பின் விளைவைப் பார்த்த பிறகு மீண்டும் ஆலோசனை கேட்கும் வழக்கம் உங்களுக்கு உண்டு.பழமையான வேர்கள் பலமாக இருந்தால்தான் புதிய இலைகளும் பூக்களும் காய்களும் கனியும் என்பதை அறிந்த நீங்கள், கோபுரத்தில் இருந்தாலும் அஸ்திவாரத்திற்கு அடிக்கடி நன்றி கூறுவீர்கள்.

பொதுப்பலன்கள்

ஐந்தில் குரு சஞ்சாரம் அற்புதமாய் யோகப்பலன் தரும்
தொட்டது துலங்கிடும் அதிர்ஷ்டமான திருப்பம் தெரியும்
பாம்புகிரகங்களால்சோதனைகளைவென்றுசாதனைபடைத்திடும்வசந்த காலம்
பத்தாமிட பொல்லாத சனியானாலும் நல்ல மாறுதல்களான திருப்பம் தெரியும்

– இதுவரை சுகஸ்தானமெனும் நான்காமிடத்திலிருந்த ஸ்ரீகுரு பகவான், இப்போது பூர்வ புண்ணியஸ்தானமெனும் ஐந்தாமிடத்திற்குப் பெயர்ச்சியாகி இருக்கிறார். ஐந்தாமிட குரு அற்புதங்களை செய்வார் என்கிறது ஜோதிட நூல்கள்.கூடவே முக்கிய கிரகமான சனியும், நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களும், குருவுடன் கூடி இருவரும் உங்களுக்கு சிறப்பான பலன்களை தந்து செயல்பட இருக்கிறார்கள்.இதனால் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்கிற அளவுக்கு மேன்மைஅடைய போகிறீர்கள். எல்லா வகையிலும் அதிர்ஷ்டகரமான அற்புதமான யோகம் உங்களை நாடிவரப்போகிறது. இனி என்ன உங்கள் ஒளிமயமான எதிர்கால வாழ்க்கை இனி தூள் பறக்கத்தான் போகிறது.

ஸ்ரீகுருபகவான் உன்னதமான உகந்த அற்புதமான ஐந்தாமிடத்திற்கு வருகிறார். ஐந்தாமிடம் அதிர்ஷ்ட கரமான இடம் என்பதோடு இங்கே குருவுக்கு உச்சபலம் என்பது இன்னொரு அதிர்ஷ்டம். எனவே இந்தக் குருப்பெயர்ச்சி மிகப்பிரகாசமாக – பரவசமாக ஓரளவு விசேஷமான அதிர்ஷ்டகரமான பலன்களுடன் தான் சந்தோஷம் தரும் யோக சாம்ராஜ்யமாக ஆரம்பமாகிறது. இனி ஓர் பிரமிக்கத்தக்க நல்ல மாறுதல்களுடன் கூடிய அற்புதமான திருப்பம் ஏற்பட்டு உங்கள் புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு செல்வ நிலை. எல்லாமே உயரப்போகிறது. நீங்கள் எதைத் தொட்டாலும் வெற்றி நிச்சயம். ஒரேயடியாய் உயரப்போகிறீர்கள். எனவே குருவருளால் நீங்கள் குறைகளின்றி வளமுடன் வாழலாம்.

ஸ்ரீ சனி பகவானின் சஞ்சார நிலவரம்

முக்கிய கிரகங்களின் சஞ்சார நிலவரத்தை அனுசரித்துப் பார்க்கையில் உங்கள் ராசிக்கு 1,2 ஆகிய இடங்களுக்குரியவரும், அதிபதியும், தனஸ்தானாதிபதியுமான ஸ்ரீ சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஜீவனஸ்தானமென்னும் தொழில்ஸ்தானமான வீட்டில் பத்தாமிடத்தில் தொடர்ந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்.இந்த சனியின் சஞ்சாரம் ஜீவனம் சம்பந்தப்பட்ட அடுத்த காலகட்டத்தை அதாவது இன்னும் இரண்டரை ஆண்டுகாலத்திற்கு பொல்லாத சனியின் பிடியில் இருந்து தான் ஆக வேண்டும்.எனவே இவரது இரண்டரை ஆண்டுகால சஞ்சாரப்பலன்கள் பற்றி ஜோதிட சாஸ்திரங்களும் ஜோதிட சுவடிகளும் கூறுவதைப் பற்றி சிறிது ஆராய்வோம்.

ஸ்ரீ சனி பகவான் பத்தில் வரும் போது ஜாதகனுக்கு தொழிலோ,வேலையோ கிடைக்கும். ஆனால் பொருள் அழியும் கல்வி தோல்வியாகும். புகழ் குறையும் எல்லா விதத்திலும் கஷ்டமே உண்டாகும். யவனேஸ்வரர் கொள்கைப்படி மேஷ_ரணே வ்யாத்யப கீர்த்திக் ருத்ஸஸ்ச்ச அதாவது சனி பத்தில் பழியை உண்டாக்குகிறான். பலவித நோய் நொடிகள் உண்டாகின்றன. பயம் திகில் மனைவி மக்களுடன் மனஸ்தாபம், வியாபார நஷ்டம் நோயால் கடுந்துன்பம் ஆகியவை கூடும் என்றாகிறது.

முடவன்தான் ஜென்மம் தன்னில் முன்னிய இரண்டு நான்கில்
திடமறு எட்டுபத்தில் சேர்ந்த பன்னிரெண்டில் நின்றால்
உடன் மன்னர் பொருள் மாடோடு பெண்டனி மக்கள் தேசம்
அருமையும் பதியை விட்டே அரசரால் அரிச்சலாமே

– என்ற வருஷாதி நூல் வாக்குப்படி ஸ்ரீ சனி பகவான் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் போது பொருட்சேதம்.பெண் உறவினர் மனைவி தன் குழந்தைகள் இவர்களுக்கு கண்டம், பிறருக்கு அடிமையாதல், அரசாங்கத்தால் கெடுபிடி, வீண் அலைச்சல், திரிச்சல், அலைக்கழிப்பு, மனைவி மக்களைப் பிரிதல் ஊரை விட்டு கட்டாயமாக வேண்டாத இடத்திற்கு சென்று வாழ வேண்டி வருதல் போன்ற கெடுபலன்கள் உண்டாகும் என்று மேலே உள்ள பாடல் குறிப்பிடுகிறது.

பொதுவாக ஸ்ரீ சனிபகவானின் பத்தாமிடத்தின் சஞ்சாரம் காரணமாக சஞ்சலங்களும், சங்கடங்களும் தீவிரப்படவே செய்யும் என்பதற்கு மேலும் ஒரு பாடல் –

பத்திலே சனியும் நிற்கில் பதி குலைந்தலையச் செய்யும்
செத்திடும் ஆடுமாடு சிலுகுடன் மனிதர் கேடாம்
பொற்றிடும் விளைவு குன்றும் பொருளெலாம் சேதமாகும்
சுற்றியே படுத்தும் அந்த சுகனமாஞ் சனியின் வாறே

– என்று ஜாதகாலங்காரம் கெடுபலன்களையே கூறுகிறது.

எனவே இந்த சனிசஞ்சாரங்களைப் பற்றி நீங்கள் கொஞ்சம்கூட கவலையோ, கலக்கமோ படவேண்டியதில்லை என்று தான் சொல்லவேண்டும். பத்தாமிட சஞ்சாரத்திற்கு வேதஸ்தானம் பத்தாமிடம்தான். எனவே தற்போது நடந்துக்கொண்டிருக்கும் பலன்களே தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும்.உங்களைக் கீழே தள்ளவில்லை.

ஸ்ரீராகு-கேது பகவான்களின் சஞ்சார நிலவரம்

மேலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான பாம்பு கிரகங்களான நிழல் கிரகங்கள் ராகு கேதுக்களின் சஞ்சார நிலவரத்தை அனுசரித்துப் பார்க்கையில் இந்த ராகு-கேது சஞ்சாரம் தொடர்ந்து கேதுவால் அலைச்சலுடன் காரியத்தடைகள் இருந்து வந்தாலும் அவைகள் முறியடித்து வளமான வசதி வாய்ப்புகள் அதிர்ஷ்டகரமான ராஜயோகப் பலன்கள் உங்களை அசத்திடும்.இந்த ஸ்ரீராகு-கேது சஞ்சாரம் மாறுதலாக, ஆறுதலாக அற்புதமாகவும் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த நாம் சொன்ன ராஜயோகம் நிச்சயமாக வந்து விடும்.

வாக்கிய பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் கார்த்திகை மாதம் 17ஆம்தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 2ஆம்தேதி 2012 ஆம் ஆண்டு (2-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10-53 மணியளவில் ஸ்ரீ ராகுபகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி துலாம் ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் பெயர்ச்சியாகி ராசிமாறி மேஷ ராசிக்கும் 11-31 நாழிகைக்குள் பிரவேசித்து ஒன்றை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஆனால சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் மார்கழி மாதம் 8ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீராகுபகவானும்,அதேநேரம் ஸ்ரீகேது பகவானும் பெயர்ச்சியாகி ராசி மாறி முறையே துலாம் ராசிக்கும், மேஷ ராசிக்கும் பிரவேசித்து ஒன்னரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

மொத்தத்தில் இருபஞ்சாங்கங்களின் சித்தாந்தப்படி உங்களுக்கு சோதனையாக இருக்காது. சாதனையாகவும் இருக்காது. வெற்றிகளைத் தேடுவதை விட தோல்விகளைத் தூள் தூளாக்குவதிலேயே உங்கள் கவனம் இருக்க வேண்டும். சோதனைகளை சாதனைகளாக்குவீர்கள் என்றாலும் சந்தர்ப்பம் பார்த்துத் தான் செய்ய வேண்டும் அகலகால் வைக்காமல் இருந்தால் அளவோடு பலன்களைப் பெற்று வளமாக வாழ்வீர்கள்.

ஸ்ரீகுருபகவானின் சஞ்சாரம்

ஆரம்பத்திலேயே உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லி வைக்கிறேன். இந்த குருப்பெயர்ச்சியால் நீங்கள் அருமையான-பெருமையான பலன்களையெல்லாம் அனுப விக்கப் போகிறீர்கள் என்பது தான், சந்தோஷம்தானே! எனவே இந்த குருமாறுதல் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமும், அக்கறையும் அதிகம்தான். ஐந்தாமிடம் ஸ்ரீகுருபகவானின் சஞ்சாரத்திற்கு அருமையான இடமாயிற்றே. எனவே உங்களுக்கு யோகக்காலம் ஆரம்பமாகப்போகிறது. ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் ஸ்ரீகுருபகவான் அற்புதங்களைச் செய்வார்.ஒருசின்ன வெளிச்சத்தைக் காட்டப் போகிறார்.

ஸ்ரீகுரு பகவான் பூர்வபுண்ணியஸ்தான அற்புதமான ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பது செம விசேஷமாகும்.எனவே உங்களுக்கு பல வகையிலும் முன்னேற்றமாகவே இருக்கும். நீங்கள் அடையமுடியாத பாக்கியஸ்தானங்கள் எதுவாக இருப்பின் அது நிறைவேறும். உங்கள் பூர்வபுண்ணியம் கூடுவதால் உங்கள் புகழும்,பெருமையும், செல்வாக்கும், சொல்வாக்கும் பல மடங்கு பெருகும். நீங்கள் யார் என்பது இந்த உலகிற்கே தெரிய வரும். ஆக குரு மாற்றம் உங்களுக்கு ஒரு சூப்பரான ஏற்றத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதும் மட்டும் நிஜம். இனிமேல் உங்களது கண்கட்டுகளை அவிழ்த்துப் பார்வையைத் தெளிவாக்குவார். நடக்கிற பாதையை ஒழுங்குபடுத்துவார். கைகோர்த்து நீரில் மூழ்கி விடாமல் தன் கைகொடுத்து இழுத்து உங்களைப்பத்திரமாக கரைசேர்ப்பார். உங்களுக்கு சோதனைக் காலம் முடிந்து இப்போது சாதனைக் காலம் வருகிறது. இனி முன்பிருந்த நிலைமை இப்போது இல்லை. கவலையே பட வேண்டாம். உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டகரமான யோகப்பலன்களே இனி நடக்கும். இக்காலம் உங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். வாழ்க்கைப் பாதையில் வசந்த காற்று வீச ஆரம்பிக்கும் நேரமிது. கோபுரம் போல் வாழ்க்கை உயரும். ஜோதிட சாஸ்திரங்களில் ஐந்தாமிடக் குரு என்ன செய்வார் என்று சொல்லப் பட்டிருக்கிறதோ அத்தனையும் செய்வார். நிஜமாகத்தான் செய்வார்? உறுதியாகத் தான் செய்வார். ஸ்ரீகுருபகவானின் கருணை மிக அற்புதமானது.அதிர்ஷ்டகரமானது அட்டகாசமானது என்பது நிஜம்.

ஜோதிட சாஸ்திரங்களும் – ஜோதிடச் சுவடிகளும்

இது பற்றி முன்னோர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம். அஞ்சிலே பொன்னவன்-நெஞ்சிலே மன்னவன் என்ற முன்னோர்கள் கூற்றுபடி புத்தி ஸ்தான மாகிய பூர்வ புண்ணியஸ்தானமான ஐந்தாமிடத்தில் வந்து சஞ்சரிக்கும் பொன்கிரகமும், தனகார கனுமான ஸ்ரீகுருபகவானால் மனத்திலே இருந்த பயம் கவலை, கலக்கம், விலகி மன்னனைப் போல நெஞ்சை நிமிர்த்தி செயல்படுகின்ற தைரியமும், துணிச்சலும், தன்னம்பிக்கையும், யுக்தி, புத்தியுடன் கூடிய சாதுர்யமும், சாமர்த்தியமும் வந்துவிடுமே.

புத்ரோத் பத்திம் உபைதி ஸஜ்ஜன யுதிம் ராஜ்யானுகூல்யம் ஸ_தே
– என்பது பலதீபிகையில் மந்திரேஸ்வரர் என்னும் மகானின் வாக்கு.

மக்கள் செல்வமும், அவர்களை முன்னிட்ட பல வகையான முன்னேற்றங்களும், அபிவிருத்திகளும்,பெரியவர்கள், மகான்கள் நல்லிணக்கமான தொடர்பும், அரசாங்கம் சம்பந்தமான அனுகூலங்கள் உண்டாகும் என்பது இதன் பொருள்.

மந்திரி பன்னொன்றன்பான் வளம் பெற ஏழிலஞ்சில்
வந்திரண்டிடத்தில் நிற்கில் மன்னர்க்கு நல்லவனாவன்
சுந்தர மனைவி மக்கள் சோபனஞ்சிவிகையுண்டாம்
தந்திரத்துடனே பூமி ஆளவும் தலைவனாமே

– என்று ஜாதகாலங்காரப் பாடலும் அருமையான பல பெருமையான நன்மைகளையே அலங்காரமாக அற்புதமாக சொல்லுகிறது.

ஸ்ரீகுருபகவான் ஐந்தாமிடம் போன்ற சில அனுகூலமான இடங்களில் சஞ்சரிக்கின்ற போது, அரசாங்கத்தில் அரசியல் பதவி களிலும், அரசு துறை நிர்வாகத்திலும் உள்ளவர்களுக்கு அனுகூல மானவனாக இருந்து நன்மைகளை சாதித்துக் கொள்வான். அழகிய மனைவி மக்கள் அமைவார்கள். இன்பமான அனுபவங்களும், வண்டி, வாகன வசதிகளும், உண்டாகும். சாமர்த்தியத்துடன் பூமிக்கு சொந்தக்காரனாவான். தலைமை பொறுப்பு, முக்கிய பதவி போன்ற வற்றால் தன்னுடைய தகுதியை உயர்த்திக் கொள்வான் என்னும் பலன்களை இந்த பாடலிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

இது பற்றிய தெம்பும் தரக்கூடிய சந்தோஷகரமான மற்றொரு பழம்பெரும் ஜோதிடப் ;பாடல் ஒன்று உங்களது அதிர்ஷ்டகரமான யோகப்பலன்களுக்கு அச்சாரம் கூறுகிறது.

குருபதினொன்றாடத் ஒன்பான் கூறுமைத் திரண்டில் நிற்க
திருமகள் கிருபையுண்டாம் தீர்த்த யாத்திரையும் உண்டாம்
தந்தையால் உதவியுண்டாம் அருமையும் பெருமையுண்டாம்
அரசர்சேவை யுமுண்டாம்

– திருமகள் கிருபை அதாவது செல்வத்துக்கு அதிபதியாகிய மகாலட்சுமியின் தனலட்சுமி கடாட்சமும், கடைக்கண் பார்வையும், உங்கள் மேல் படுகிறது என்பதே சிறப்பான பிரமாதமான விசேஷமாயிற்றே. இது மட்டுமா…. கோட்சார சிந்தாமணி குதூகலமானத்தகவல்களை தெரிவிக்கிறது. முதலில் இந்தப் பாடல் என்ன சொல்கிறது என்று பாருங்களேன்……

பாரப்பாகுருவேதன்இரண்டுஐந்தேழ் பரிவாகும் நலத்தோடு பதினொன்றில்தான்
சீரப்பா நின்ற பலன் செப்பக்கேளும் சிவிகையோடு கரிபரி கல்யாணம் கூடும்
நேரப்பா பூஷணமும் மறையோர் நேயம் நிலையாகும் அரசருடன் பேட்டிகளும்
கூறப்பாசுகமெல்லாம்கொடுக்கும்மெத்தக்குடும்பமதுதான்செழிக்கும்கீர்த்திஓங்கும்

– சிவிகை என்றால் பல்லக்கு. கரி என்றால் யானை. பரி என்றால் குதிரை. இவையெல்லாம் அந்த காலத்துக் கேற்றது என்றாலும் இந்த காலத்தில் வண்டி, வாகனயோகமும், கால்நடை விருத்தி என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். இது தவிர திருமணம் போன்ற சுபகாரியங்களும், பொன், பொருள், சேர்க்கையும், அறிஞர்கள், நட்புறவும், அரசாங்கத்தின் மதிப்பும், முக்கியத்துவமும், சுகசௌகர்யங்களும் என்பது இந்த பாடலில் கருத்தாகும்.

இதோ இன்னொரு பாடலும் போனசாக உங்களுக்கு-

ஆமெனவேவியாழனுமேஇரண்டுஐந்தேழ் அடுத்த ஒன்பது பதினொன்றில் வாழ
தாமெனசெல்வமொடு குதிரைஉண்டாம்தழைக்குமேகுடைதர்ம தானம் ஓங்கும்
நாமெனத்தாய்தகப்பன்புதல்வராலேநன்மையாம்அருமையோடுபெருமைஉண்டாம்
போமென அரசர்க்கு நல்லோனாக்கும் புகழ் சோபனம் நடக்கும் பூமி ஆள்வன்

– இப்படி தெம்பும், உற்சாகமும், தரும் இப்பாடலை ஜாதக சித்தி கூறுகிறது.

பூபதியும் ஐந்தில் ஏற பிரபுக்கள் சேவை கீர்த்தி புனிதன்
பெண்பிள்ளை உண்டு பாங்கி நேசமுள்ளவண்டி தாயே

– என்கிறார் புலிப்பாணி முனிவர்.அதாவது ஸ்ரீகுருபகவான் ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் போது நல்லவர்களின் தொடர்பும், அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பும், வசதி படைத்தவர்களின் அனுகூலமும், ஆதாயமும் போன்ற பல நன்மைகள் ஏற்படலாம்.

முயற்சிக்கும், காரியங்களில் முன்னைவிட மதிப்பும், மரியாதை யும், செல்வாக்கும், சொல்வாக்கும், கௌரவமும், அந்தஸ்தும், மேலோங்கும். எண்ணங்களில் தெளிவும், மனத்தில் தெம்பும், தைரியமும், ஊக்கமும் அதிகரிக்கும். ஏடாகூடமாக வரும் பிரச்சினைகளை லாவகமாக, முறியடித்து சாதனை புரிவீர்கள். வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரங்களில் வெற்றி உண்டாகும்.

பொருளாதாரத்தில் இனிமேல் நல்ல மாறுதலான அபிவிருத்தியான திருப்பம் நிச்சயமாக உண்டாகக் கூடும். இதுவரையில் இருந்து வந்த பிக்கல், பிடுங்கல், சிக்கல், சிரமம், நெருக்கடி, கெடுபிடிகளுக்கு விடுதலை கிடைக்கும். வருமானம் சரளமாகவும், தாராளமாகவும், கணிச மாகவும், தட்டுத்தடங்கல், இன்றி புரளும். வெளியில் முடக்கமான தொகையும் கைக்கு தக்க சமயத்தில் ஆச்சர்யப்படும்படியாக வந்து சேரும். கொடுக்கல், வாங்கல் சுலபமாக, லாபகரமாக நடக்கும்.

செய்தொழில், வியாபாரம், வணிகம் மற்றும் ஜீவனம் சம்பந்தப்பட்ட வகைகளில் எதுவா னாலும் ஏற்கெனவே பட்ட கஷ்ட, நஷ்டங்கள் எல்லாம் மளமளவென்று விலகும். இருந்து வந்த தொந்திரவுகளும்,உபத்திரவங்களும் நெருக்கடிகளும், கெடுபிடிகளும் மறையும். காரியங்களில் இருந்து வந்த குறைகோளாறுகளும்,குழப்பம்குளறுபடிகளும்,சிக்கல், சிரமங ;களும் சூரியனைக்கண்ட பனிபோல விலகி விடும். இனி அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்.

களத்திரஸ்தானத்திற்கும் அதிபதி என்பதாலும் தனகாரகனான ஸ்ரீPகுருபகவான் அற்புதமாக சஞ்சரிப்பதால் ஏற்கெனவே அடமானத்திலிருந்த நகை, நட்டுகள் மீட்கப்படும். புதிய பொன் நகைகளும் சேரும்.பூர்வீக சொத்துக்களின் மூலமும் சிலருக்கு பணம் கிட்டிடும்.பூர்த்தியாகாமல் போன வீடு முடிக்கப்பட்டு புதுமனை குடிபோகவும் ஞாயமுண்டு. சிலர் புதுமனை அல்லது சொந்தமாகவே வீடு வாங்கும் யோகமும் உள்ளது.

உத்தியோகஸ்தர்களுக்கு:- உங்களது யுக்தி, புத்தியாலேயும் திறமையாலேயும் எதையும் சமாளித்து மேலிடத்தின் நம்பிக்கையையும் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு:- கல்வியில் ஏற்றமும், முன்னேற்றமும் உண்டாகும். அறிவுக்கூர்மையும், ஆர்வமும், அக்கறையும், கவனமும் நல்லவிதமாக அமையும்.

வியாபாரிகளுக்கு:- நல்ல அபிவிருத்தியுடன் பிரமாதமான மாறுதலுக்கு லாபகரமான வருமானத்தை அதிகரித்திடும். கடன்கள் வசூலாகும்.

தொழிலாளர்களுக்கு:- உங்களது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுதல்களை பெறுவீர்கள். இருந்த பிரச்சினைகளும், முட்டுக்கட்டைகள் விலகும்.

கலைஞர்களுக்கு:- சிறந்த திறமையாலும், யூகமான எண்ணங்களாலும், புதிய ஒப்பந்தங்களாலும், பொன், பொருள் ,வருமானமும் பல மடங்கு உயரும்.

அரசியல்வாதிகளுக்கு:-எந்த விதமான எதிர்ப்புகளும் போட்டி, பொறாமைகளும் ஒன்றும் செய்திடாது என்றாலும் பகைவரை வளர்க்க வேண்டாம்.

பெண்களுக்கு:- உள்ளம் தெளிவோடு தெம்பும், உற்சாகமாகவும் இருந்திடும். முகத்திலே தேஜஸ் பளிச்சென்று எடுத்துக்காட்டி மகாலட்சுமி மாதிரி ஜொலிப்பீர்கள்.

ஸ்ரீகுருபகவானின் அருட்பார்வைகளினால் ஏற்படும் நன்மைகள்

ஸ்ரீ குருபகவான் தமது ஐந்தாம் பார்வையால் இந்த ராசிக்கு ஒன்பதாம்இடமான கன்னியில் பார்ப்பதால் பிரமாதமான பலன்கள் உண்டாகும். இதுவரை பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு ஒரு நிவாரணமோ அல்லது தீர்வதற்கு வசதி வாய்ப்புகளோ உண்டாகும். முயற்சிக்கும் காரியங்களில் எல்லாம் சாதகமாக கைகூடும். அரசாங்க மூலமாக மேன்மையும், அதிர்ஷ்ட கரமான பணவரவோ, கூட அவரவர் ஜாதக யோகப்படி அமையும். ஏற்கெனவே தற்காலிகமாக இருக்கும் உத்தியோகமோ வேலையோ நிரந்தரமாகும்.

ஸ்ரீ குரு பகவான் தமது ஏழாவது பார்வையால் இந்த ராசியின் பதினொராம் இடமான விருச்சிகத்தில் பார்ப்பதால் பலவிதத்திலும் ஆதாயமும், அனுகூலமும் உண்டாகும். பொன், பொருள், கணிசமாக கிட்டிடும். வீடு, நிலம் மனை போன்ற ஸ்திர சொத்துக்களுடன் புதிய வசதிகளும் பெருகும்.அரசாங்கத்தில் உத்தியோக வாய்ப்பு ஒரு சிலருக்கு கிட்டிடும். செய்தொழில், வியாபாரம் எதுவானாலும் சுயமாக இருந்தாலும், கூட்டாக செயல்பட்டாலும் கணிசமான லாபகரமான வருமானப் பெருக்கம் இருந்து வரும். சிலருக்கு செய்தொழிலில் புதிய முயற்சிகளும் கைகூடும். சிலருக்கு கலப்பு திருமணம் நடைபெறவும் ஞாயமுண்டு.

ஸ்ரீ குரு பகவான் தமது ஒன்பதாம் பார்வையால் உங்கள் ஜென்ம ராசியான மகரத்தில் பார்ப்பது மிகவும் விசேஷமாகும். புத்துணர்ச்சியும், செயல் முறைகளில் மறுமலர்ச்சியும், வாழ்க்கையில் நல்ல மாறுதலான திருப்பத்தையும் ஏற்படுத்தும். புது மனிதராகவும், தெளிவும், தெம்பும், உற்சாகமும் தோற்றத்திலே பளபளப்பும், முகத்திலேமலர்ச்சியும். உள்ளத்திலே குளிர்ச்சியும் நிறைந்து காணப்படுவீர்கள். முயற்சிக்கும் காரியங்களில் முழு வெற்றி கிட்டிடும். உபரியாகவே பணவசதியுடன் முக்கியத்துவமும் மேலோங்கும்.

நட்சத்திரப்பலன்கள்

உத்திராடம் நட்சத்திரம் 2,3,4-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு

சூரியனின் ஆதிக்கம் பெற்ற உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது. உங்களுக்கு நியாமாக கிடைக்க வேண்டியவை கிடைத்துக் கொண் டிருக்கும். நற்பலன்களைத் தரும். திட்டமிட்ட பணிகள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும்.செய்தொழில்,வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும்.பாக்கிகள் வசூலாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

தெய்வ பக்தியும், தேச பக்தியும் நிறைந்ததோடு விஷ்ணுவுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் சிறப்பாக இருக்கும். இழந்தவை களைத் திரும்ப பெறுவீர்;கள்.புதிய முயற்சிகளும் கை கொடுக்கும். தொழில் வியாபாரத்த்pல் தடைகள் நீங்கி முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும்.

அவிட்டம் நட்சத்திரம் 1,2-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு

பொன் பொருள் சேர்க்க அஸ்திவாரமிடும் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் பழைய பிரச்சினைகள் குறைந்திருந்தாலும் புதுப் பிரச்னைகள் வரலாம். எதையும் அதன் போக்கில் விட்டுப் பிடிப்பது தான் நல்லது. செய ;தொழில் வியாபாரத்தில் மாறுதல்கள் எதுவும் இருக்காது. மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.உத்தியோக ஸ்தர்களுக்கு மகிழ்ச்சி குறைந்திருக்கும். ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.

மாதவாரியாகப் பலன்கள்

மே-17-5-2012 முதல் 31-5-2012 வரை -இந்தக்காலக்கட்டம் ஆதாயமும் கூட, உங்கள் செல்வாக்கு,சொல்வாக்கும் அதிகரித்துவிடும். மீண்டும் பழைய மிடுக்கோடு வளைய வருவீர்கள்.குடும்பவாழ்வு பூரிப்பாகவும்,சுபீட்சமாகவும்குதூகலமாகவும் இருக்கும்.

ஜூன்-1-6-2012 முதல் 30-6-2012 வரை – இந்தக் காலக்கட்டம் வெற்றி வாய்ப்புகள் பரவாயில்லை. கூட்டுத் தொழில், வியாபாரத்தில் மேன்மையும், உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும், பணவரவு கணிசமாகும்.பழைய கடன்கள் வசூலாகும். வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரங்கள் சுமூகமாக தீர்வு காணும். உபரியாகவும் வருமானம் கிட்டிடும்.

ஜூலை – 1-7-2012 முதல் 31-7-2012 வரை- இந்தக்காலக்கட்டம் சிறிது மந்தமாகத்தான் இருக்கும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. மனக்குழப்பம் அதிகரிக்கும். தீவிரமாக யோசனை செய்வீர்கள். யாரைப் பார்த்தாலும் சந்தேகப் ;படுவீர்கள். யாரை நம்புவது. யாரை நம்பக்கூடாது பலமாக-தீவிரமாக சிந்திப்பீர்கள். செய் தொழில், வியாபாரம் தங்கு, தடையின்றி நடைபெறும்.

ஆகஸ்ட்-1-8-2012 முதல் 31-8-2012 வரை – இந்தக்காலக்கட்டம் செய்தொழில், வியாபாரம், சீராக நடைபெறும். புதிய முயற்சிகள் இருக்காது. திட்டமிட்ட பணி களில் போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் சமாளிக்கும்படி இருக்கும். சிலரின் குடி இருக்கும் வீடு மாறுதல் இருக்கும். முயற்சியில் வெற்றி பணவசதியில் ஏற்றம், வாழ்வில் மாற்றம் சுபகாரியங்களில் நினைத்தப் படி திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

செப்டம்பர்-1-9-2012 முதல் 30-9-2012 வரை – இந்தக்காலக்கட்டம் சாதனைகள் நிறைந்ததாகவே இருக்கும். சோதனைகள் என்பதே இருக்காது. முயற்சிக்கும் காரியங்களில் முன்யோசனையும் அவசியமாகும். செய்தொழில், வியாபாரம் மந்த நிலை அகன்று விடும். பாக்கிகள்வசூலாகும். வழக்கு, வியாஜ்ஜியங்கள், கோர்ட் விவகாரங்களில் வெற்றிகள் கிடைத்திடும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாறுதல் உண்டு.

அக்டோபர் -1-10-2012 முதல் 31-10-2012 வரை – இந்தக்காலக்கட்டம் திருப்தி கரமான நற்பலன்கள் ஏற்படக்கூடும் எனலாம். தேவைக் கதிகமாகவே பணப்புழக்கம் இருந்து வரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் பேரும், புகழும் உண்டாகும். முயற்சிக்கும் காரியங்களில் தன்னம்பிக்கையும், ஊக்கமும அதிகரிக்கும்.

நவம்பர் 1-11-2012 முதல் 30-11-2012 வரை – இந்தக்காலகட்டம் உங்கள் பேச்சிலேயே விவகாரங்கள் தோன்றும். வாக்கு கொடுப்பது, வாக்கு வாதங்களில் ஈடுபடுவது தவிர்க்க வேண்டியவை. தெளிவான மனத்துக்கு நினைத்த காரியங்களில் வெற்றி ஓரளவு எதிர்பார்த்த வகையில் கணிசமாக தொகையோ அல்லது அனுகூலமான தகவலோ கிட்டும். மனைவி வகையில் நன்மையோ, அனுகூலம் பொருள் வரவோ ஏற்படலாம்.

டிசம்பர் -1-12-2012 முதல் 31-12-2012 வரை – இந்தக்காலக்கட்டம் சோதனை, வேதனைகள், நெருக்கடி, கெடுபிடிகள்,குறைந்துவிடும்.எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். செய்தொழில், வியாபாரம் சீராக நடைபெறும்.பணரொட்டேஷன் சரளமாக, தாராளமாகஇருந்துவரும். புதியமுயற்சிகள் மாறுதல்கள் எதுவும்வேண்டாம்.

ஜனவரி -1-1-2013 முதல் 31-1-2013 வரை- இக்காலக் கட்டங்களில் உங்களை தலை நிமிர வைக்கும். மீண்டும் அனுகூலங்களை எதிர்பார்க்க முடியும். எதிர்பார்த்த பணம்கைக்கு கிட்டிடும்.எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.செய்தொழில், வியாபாரங்களில் நல்ல மாறுதலான திருப்பங்கள், ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், பாராட்டுதல்களும் கிடைக்கும். முயற்சிக்கும் காரியங்களில் முழுவெற்றிக் கிட்டிடும்.

பிப்ரவரி -1-2-2013முதல் 28-2-2013 வரை – இந்தக்காலகட்டம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். நீங்கள் திட்டமிட்டவை எல்லாம் நடக்கும். இழந்தவைகளைத் திரும்பப் பெறலாம். பொருளாதார நெருக்கடிகள், தீர்ந்துவிடும். செய்தொழில், வியாபாரத்தில் தடைகள், அகன்றுவிடக்கூடும். கடன்கள் நிவர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

மார்ச்-1-3-2013 முதல் 31-3-2013வரை – இக்காலக்கட்டம் உற்சாகமாகவே இருக்கும். சாதனைகள் நிறைந்ததாகவே இருக்கும். சோதனை என்பதே இருக்காது. முயற்சிக்கும் காரியங்களில் சாதனை புரிவீர்கள். பொருளாதார நிலையில் உயர்வும், செல்வாக்கும், சொல்வாக்கும் அற்புதமாக இருக்கும்.திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும்.செய்தொழில், வியாபாரம், சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் நிறைந் திருக்கும்.

ஏப்ரல் 1-4-2013 முதல் 30-4-2013 வரை – இக்காலக்கட்டம் அற்புதமாகவே இருக்கும்.முயற்சிக்கும் காரியங்களில் இருந்து வந்த தடைகளைத்தகர்த்தெறிந்து சாதனைப்புரிவீர்கள்.உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவை எல்லாம் எதுவாக இருந்தாலும் எந்த தடையுமின்றி கிடைத்துவிடும்.வம்பு, வழக்கு,வியாஜ்ஜியம்,கோர்ட் விவகாரங்களில் நல்லமாறுதலானதிருப்பம் ஏற்படவும் ஞாயமுண்டு.

மே 1-5-2013 முதல் மே 27-5-2013 வரை- இந்தக்காலக்கட்டம் செலவுகளை காரணமறிந்து செய்வது நலமாகும். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. இந்தக்காலக்கட்டம் அளவற்ற மகிழ்ச்சியையும், நிறைவான சந்தோஷத்தையும் ஏற்படுத்தித் தந்திடும். செய்தொழில், வியாபாரம், வணிகம், ஜீவனம், சம்பந்தப்பட்ட வகைகளில் அமோகமான லாபமும், ஆறுதலாகவும் மாறுதலாகவும் இருக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு ஆதாயமாகவும், அனுகூலமாகவும் இருக்கும்.

குரு வாழ்க! குருவே துணை!![rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: