எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – தனுசு

விளம்பரங்கள்

[rps]

Dhanushu Raasi

பிற ராசிகளுக்கு
1. குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்
2. குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்
3. குருபெயர்ச்சி பலன் 2012 – மிதுனம்
4. குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்
5. குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்
6. குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி
7. குருபெயர்ச்சி பலன் 2012 – துலாம்
8. குருபெயர்ச்சி பலன் 2012 – விருச்சிகம்
9. குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்
10. குருபெயர்ச்சி பலன் 2012 – கும்பம்


பேரன்புள்ள தனுசு ராசி அன்பர்களே! வணக்கம்!! வாழிநலம்!!!

நவக்கிரகங்களில் பொன்கிரகம்,தனகாரகன் என்றழைக்கப்படும் ஸ்ரீகுருபகவானை ஆட்சி கிரகமாகவும், வீடாகவும், ராசியாதிபதியாகவும் அமையப் பெற்ற உங்கள் ராசிக்கு 1,4க்குடைய ஜென்மாதிபதியும், சுகாதிபதியுமானஸ்ரீகுருபகவான் இதுவரையில் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணியஸ்தானமும், தனபஞ்ச மாதிபதியும் ஐந்தாமிடமுமான மேஷராசியில் இதுவரையில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இவர் ஸ்வஸ்;திஸ்ரீ ஸ்ரீநந்தன நாம ஆண்டு வைகாசி மாதம் 4ஆம்தேதி ஆங்கிலம் மேமாதம் 17ஆம் தேதி 2012 ஆம்ஆண்டு (17-5-2012) வியாழக்கிழமை அன்று மாலை 6-18 மணியளவில் பெயர்ச்சியாகி ராசிமாறி உங்கள் ராசிக்கு ருணரோக சத்ருஸ்தானமும் ஆறாமிடமுமான ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து 27-5-2013 ஆண்டு வரை ஒராண்டு காலம் அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.

குணநலன்கள்

நீங்கள் குருவின் ஆதிக்கம் பெற்றவர்கள். எனவே, எப்பொழுதும் உங்கள் சொல்லுக்கு ஒரு தனி மதிப்பிருக்கும். வாழ்க்கையின் நடுப்பகுதி தான் உங்களுக்கு வசந்தகாலம். உறவு பகையாவதும், பகை நட்பாவதும் உங்களுக்கு வாடிக்கை.அசுர குரு சுக்ரன் உங்கள் ஆறாமிடத்துக்கு அதிபதியாக இருப்பதால், இணையும் வாழ்க்கைத் துணை இனியதாக அமைந்தால் தான் பணியில் தொய்வு இருக்காது. பார்போற்றும் வாழ்க்கை அமையும்.முன்கோபத்தை நீங்கள் குறைத்துக் கொள்ளும்பொழுது தான், உங்களுக்கு முன்னேற்றங்கள் வந்துசேருகின்றன. நண்பர்களை நம்பி ஏமாறு வதில் நாற்பது சதவீதம் பேர் தனுசு ராசிக்காரர்களாகவே இருக்கிறார்கள். எனவே, பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கின்ற பொழுது, யோசித்து செய்வதே நல்லது.;

எவ்வளவு சம்பாதித்தாலும் அலட்டிக் கொள்ளாதவர்களே. உயர்ரக வாகனம், விமானம் என மாறி மாறி பயணித்தாலும் பழைய மிதிவண்டி பயணத்தை மறக்காதவர்களே. பெருந்திரளாக உங்களைச் சுற்றி ஒர் கூட்டமே இருக்கும். காரணம் சிக்கல்களை தீர்க்க நீங்கள் முன் வருவதால் தான். பாச உணர்வு உங்களுக்கு அதிகம் உண்டு. பழகுபவர்களுக்கு உங்களை விட்டுப் பிரிய மனம் வராது. சுறுசுறுப்பு உங்கள் உடம்பில் குடி கொண்டிருக்கம். சுலபமாக வெற்றியடையும் ஆற்றலும் உங்களுக்கு உண்டு. ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் நீங்கள்.

பொதுப்பலன்கள்

ஆறில் வரும் குருவால் ஆதரவும் ஆற்றலும் குறைந்தபோதும்
நேரில் தரிசித்தால் மனநிம்மதியும் குடும்ப அமைதியும் பெற்றிடலாம்
ராகு-கேது சஞ்சாரம் அதிரடி மாற்றங்கள் அசத்தலான அதிர்ஷ்டகாற்று வீசும்
லாபசனி விபரீத ராஜ யோக பொற்கால அதிர்ஷ்டம் தரும் வாழ்வு அமையும்

இதுவரை பூர்வ புண்ணியஸ்தானமென்னும் ஐந்தாமிடத்தில் சஞ்சரித்த ஸ்ரீகுரு பகவான் இப்போது ரோகஸ்தானமென்னும் ஆறாமிடத்திற்கு வருகிறார். ஆறாமிடம் என்பது குருவுக்கு உகந்த இடமா? இல்லவே இல்லை. ஐந்தாமிடத்தில் குரு இருந்த காலத்தில் நீங்கள் அனுபவித்த நன்மைகள் நிறையவே இருந்தன. இல்லையா? நீங்கள் செய்த நற்தருமங்கள் உங்களை நல்ல பாதையில் வழி நடத்திச் சென்றது இல்லையா, உங்கள் திட்டமெல்லாம் கை கூடி கனவுகள் நினைவானது இல்லையா?

ஸ்ரீகுருபகவான் ஆறாமிடமான ருணரோக சத்ருஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல தில்லை.உகந்த இடமுமில்லை.நீங்கள் எண்ணற்ற மாற்றங் களை இக்காலத்தில் காணப் போகிறீர்கள். நிறைந்த வாழ்க்கைத் தொடரும். என்றாலும் இனி அந்த மாதிரி நன்மைகள் கிடைப்பது பாதியாகக் குறையுமென்றோ அல்லது கிடைக் காமலேயே போகலாமென்றோ கூட சொல்ல லாம். ஆறுக்குடையவன் ஆறில் மறைகையில் மறைமுகமாக அனுகூலங்களைத்தான் செய்வார் என்றாலும்நீங்கள் அதிகமாக முயற்சிக்க வேண்டாம். அதிரடியாய் எதையும் செய்ய வேண்டாம். போனால் போகட்டும் போடா என்றிருங்கள். சரி ஆறில் மறைந்த குரு என்னதான் செய்வார்? என்று பார்க்கலாம்.

ஸ்ரீ சனி பகவானின் சஞ்சார நிலவரம்

முக்கிய கிரகங்களின் சஞ்சார நிலவரங்களை அனுசரித்துப் பார்க்கையில் உங்கள் ராசிக்கு 2,3க்குடைய அதிபதியும் தனாதிபதியும், சகோதரஸ்தானாதிபதியுமான ஸ்ரீ சனிபகவான் லாபஸ்தானமான துலாம் ராசியில் தொடர்ந்து சஞ்சரிப்பது இவர்களுக்கு அற்புதமாக-அதிர்ஷ்டகரமாக அமோகமாக அமைகிறது.இந்த ராசியினருக்கு யோக கோச்சார காலம் ஆரம்பமாகிவிடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த காலக்கட்டத்தில் இந்த ராசி நேயர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் நல்ல மாறுதலான – நன்மையான – திருப்பங்கள் வாழ்க்கையில் உண்டாகி வளமும், செழிப்பும், சந்தோஷமும் தரும் வகையில் சுபயோக சுபபலன்களை ஸ்ரீசனிபகவான் வாரி வழங்கும் வள்ளலாக இருந்திடுவார் என்று சொன்னால் அது மிகையாகாது. எனவே இவரது இரண்டரை ஆண்டுகால சஞ்சாரம் பற்றி சிறிது சிந்தித்து ஆராய்ந்து பார்க்கலாம்.

இந்த ராசியினருக்கு பதினொறாமிடத்தில் சஞ்சரிக்கும் போது உண்டாகும் பலன்கள் பற்றிய ஜோதிட பாடல் ஒன்றைப் படியுங்கள்.

அறையவே சனியவனும் மூன்றாறோடுஆனபதினொன்றினிலே அமர்ந்திருக்க
நிறையவே பாக்கியம் கீர்த்தி செல்வம்நீடும் வாகனமிடம் பொருளும் ஏவல்
உறையவே லட்சுமி கடாட்சம் உண்டாம் உறுதியாய் எடுத்த காரியங்களாகும்
மறையவேவெற்றிதண்டிகையினோடுமகிழ்ச்சியாம்குதிரையும்உண்டாம்என்னே!

இந்தப்பாடலில் உள்ள சாதகமான-சத்தான-அதிர்ஷ்டம் தரக்கூடிய நன்மையான சமாச்சாரங்களை படிப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறதல்லவா…

ஸ்ரீ சனி பகவான் லாபஸ்தானமான பதினோரமிடத்தில் சஞ்சரிப்பதால் இனிமேல் இவர்களுக்கு பலவகையிலும் வளமான செழிப்பும், சுபீட்சமும் நிறைந்த அதிர்ஷ்டகரமான யோகப்பலன்களும், புகழும் பெருமையும் பொருளாதார நிலையில் உயர்வும், வருமான வசதி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு வெற்றி வாய்ப்புகள் கை கூடும். சிறப்பான அந்தஸ்தும், மரியாதையும் உயர்ந்திடும்.

கனமுள்ள நவமாறு லாபம் மூன்று கதிர் மகன் தானிருக்க விதியும் தீர்க்கம் தனமுண்டுபிதிர்தோஷம் சத்ரு பங்கம் தரணிதனி;ல் பேர்விளங்கும் அரசன் லாபம்

என்று புலிப்பாணி சித்தர் பாடல்படி சனி 11ல் வரும்போது ஒருவனுக்கு ஆயுள் நீடிக்கும். அதாவது மாரக தசை நடந்தாலும், மாரகம் நேராது. பித்ருவுக்கு இது சமயம் தோஷம் உண்டு. தனவிருத்தி, நல்ல புகழ்(தன் திறமை போற்றப்படல் முதலியன ) இதுவும் நிலைத்து நிற்கும். அரசனால் அதாவது அரசாங்கத்தால் லாபம் உண்டாகும் எனக் கூறுவதும் அறியத்தக்கது. இதனால் இம்முறை ஸ்ரீ சனி பகவானின் சஞ்சாரத்தால் இவர்கள் எந்த கஷ்டமும் இன்றி அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பில் இருப்பார்கள்.

ஸ்ரீராகு-கேது பகவான்களின் சஞ்சார நிலவரம்

மேலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான பாம்பு கிரகங்களான நிழல் கிரகங்கள் யோகக்காரகனான ஸ்ரீ ராகு பகவான், ஞானக்காரகனான ஸ்ரீ கேது பகவான் சஞ்சார நிலவரங்களை அனுசரித்துப் பார்க்கையில் இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரி;த்து வந்த ராகு இப்பொழுது விரயஸ்தானத்திலும் ஏழாமிடத்தில் சஞ்சரித்து வந்த கேது இப்பொழுது ஆறாமிடத்திலும் தொடர்ந்து சஞ்சரிக்கிறார்கள். இதனால் எண்ணற்ற நன்மை தரும் மாற்றங்களை நீங்கள் சந்திக்கப் போகிறீர்;;கள். வாக்கிய பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் கார்த்திகை மாதம் 17ஆம்தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 2ஆம்தேதி 2012 ஆம் ஆண்டு (2-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10-53 மணியளவில் ஸ்ரீ ராகுபகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி துலாம் ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் பெயர்ச்சியாகி ராசிமாறி மேஷ ராசிக்கும் 11-31 நாழிகைக்குள் பிரவேசித்து ஒன்றை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள். ஆனால் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் மார்கழி மாதம் 8ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீராகுபகவானும்,அதேநேரம் ஸ்ரீகேது பகவானும் பெயர்ச்சியாகி ராசி மாறி முறையே துலாம் ராசிக்கும், மேஷ ராசிக்கும் பிரவேசித்து ஒன்னரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

மொத்தத்தில் இருபஞ்சாங்கங்களின் சித்தாந்தப்படி உங்கள் ராசிக்கு 12மிடமும் விரயஸ்தானமுமான விருச்சிக ராசியில் யோகக்காரகனான ஸ்ரீராகுபகவானும், உங்கள் ராசிக்கு 6மிடமும் ருணரோக சத்ருஸ்தானமுமான ரிஷப ராசியில் ஞானக்காரகனான ஸ்ரீகேது பகவானும் சஞ்சரித்துக் கொண்டிருந்த நிழல்கிரகங்களான பாம்பு கிரகங்கள் இரண்டும் அன்று பெயர்ச்சியாகி பின்னோக்கி நகர்ந்து ராசி மாறி யோகக்காரகனான ஸ்ரீராகு பகவான் உங்கள் ராசிக்கு 11-மிடமும், லாபஸ்தானமுமான துலாம் ராசியிலும், அதே நேரம் ஞானக்காரகனான ஸ்ரீகேது பகவானும் உங்கள் ராசிக்கு 5மிடமும், பூர்வபுண்ணிய ஸ்தானமுமான மேஷ ராசியில் பிரவேசித்து இரண்டு சர்ப்பகிரகங்களும் 26-12-2012 வரையில் ஒன்னரை ஆண்டுகாலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.எனவே இனி கஷ்டகாலம் சோதனை காலம் நீங்கிவிட்டது என்றே கூறலாம்.

ஸ்ரீகுருபகவானின் சஞ்சார நிலவரம்

இப்போது ஸ்ரீகுருபகவான் ராசிமாறுதல் எப்படி இருக்கிறது? கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது அல்லவா? இக்கரைக்கு அக்கரை பச்சை என்றுதான் சொல்ல வேண்டும். நல்லதிலும் கெட்டது நடக்கும். கெட்டதிலும் நல்லது நடக்கும். ஜெனன ஜாதகமும் தெசாபுத்தியும் அனுகூலமாக இருந்தால் கெடுபலன்களை சாதுர்யமாக சாமர்த்தியமாக தாக்குப்பிடித்தும் முறியடித்தும் சமாளித்துவிடலாம் என்பது உறுதி. உங்கள் ஆற்றல் மீண்டும் பளிச்சிடும். கேள்விக்குறியாக இருந்த எதிர்காலம் ஆச்சரியக்குறியாக மாறும். இனி அட்டாக் என்பது உடம்பில் மட்டுமில்லாது எடுக்கின்ற முயற்சியில் கூட தலைகாட்டாது. புது முயற்சியில் யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது சிந்தியுங்கள்.

ஸ்ரீகுருபகவான் ஒரு சுபக்கிரகம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஜோதிட விதிப்படி முழுசுபக்கிரகம் ஆவார். அதனால் எல்லா நன்மைகளுக்கும் சகல சௌபாக்கியங்களுக்கும் சுபகாரியங்களுக்கும் ஆதாரமானவராக இருக்கிறார். குறிப்பாக தனகாரகன் என்பதால், பணவருமான வசதிகளுக்கும் அவரே பொறுப்பேற்றுக் ;கொண்டிருக்கிறார். இப்பேர்ப்பட்டவர் பகை, ருணரோக சத்ருஸ்தானம் என்கிற கெட்ட இடத்தில் முடங்கிவிடுவதால் தான் நன்மைகள் தடங்கல் படும். பணவசதி பாதிக்கும் என்று பொதுப்பலனாகப் பெரியவர்கள் பாடி இருக்கிறார்கள். ஆனால் இதரப் பல காரணங்களால் உங்களுக்கு பணவசதி பெருகும். அதே சமயம் குருபலம் குறைந்து சஞ்சரிப்பதால் உண்டாகிற குறை பாடுகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். தொட்ட காரியங்கள் துளிர்விடவும், தொழில்களால் லாபம் கிடைக்கவும், பிணி அகலவும், வெற்றி வாய்ப்புகள் வீடு வந்து சேரவும், வியாழன்தோறும் விரதமிருந்து குரு தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். குருவருளும், திருவருளும் உங்களுக்கு இணைந்தால் குதூகலமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

ஜோதிட சாஸ்திரங்களும்-ஜோதிடச் சுவடிகளும்

பகை, ருணரோக ஸ்தானமான ஆறாமிடத்தில் ஸ்ரீகுருபகவான் சஞ்சரிப்பது பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் நல்ல அபிப்பிராயம் கிடையாது. பொதுவாக ஆறாமிடத்து ஸ்ரீகுருபகவானின் சஞ்சாரம் பற்றி ஜோதிடசாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

சஷ்டே குரூர் பந்து விவாத வைர த்ராத் ப்ரசேஷ்டா பல ஹானி காரீ
– என்பது மந்திரேஸ்வரர் என்னும் மகான் பல தீபிகையில் சொல்லிய ஸ்லோகம் இது.ஆறாமிடத்தில் ஸ்ரீகுருபகவான் சஞ்சரிக்கும் போது உறவினரும் பகையாளி யாவார்கள். பிறரால் வேண்டாத அச்சம் உண்டாகும். பல காரியங்களும் கைகூடாமல் கஷ்டநஷ்டமும் கொடுக்கும். வீண் விவாதங்களும் விவகாரங்களும் நிகழும். வேண்டாத பீதி, பயணம், கலக்கம், உண்டாகும் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

ஜாதக சித்தி நூல் என்ன சொல்கிறது என்று ஆராய்வோம்.

சொல்லவே பொன்னவனும் ஜென்மம் மூன்று சுகமான நாலாறு எட்டுப் பத்து
வல்லவே பன்னிரெண்டிலிருந்து வாழ வலைச்சலோடு சத்ரு நிஷ்டூர வாதம்
புல்லவே சகோதரர்,தாய்,மனையாள்புத்திரனின்நலம்கெடும் பொருளும் போகும்
அல்லவே மன்னவரால் பதியும் சேதம் அரிவையர் தங்களால் வியாதியாமே

– என்று அடுக்கடுக்காகவே அடுக்கு மாளிகையைப்போல் கெடுபலன்களையேதான் அடுக்குகிறது. பாடல்கள் மட்டுமல்ல, பொதுவாகவே ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ஸ்ரீகுருபகவான் பொருளாதாரத்தில் அதிருப்தியான பலன்களை அதிகம் கொடுப்பார் என்றுதான் அனுபவமும் எடுத்துக் காட்டுகிறது.

மனைவியும், மக்களும் பகையாவார்கள்- என்கிறது பிரஹத்சம்ஹிதை
அல்லலும், அலைக்கழிப்புமான பலன்களைத்தான் தருவார் ஆறாமிடத்துக்குரு என்று பிருகு சூத்திரம் கூறுகிறது.

சத்திய மாமுனி ஆறிலே இருகாலிலே தலை பூண்டதும்
-என்று மற்றொரு ஜோதிடப் பாடல் ஒன்று உண்டு. அந்த முனிவருடைய ராசிக்கு ஆறாமிடத்தில் ஸ்ரீகுருபகவான் சஞ்சரித்த போது சந்தர்ப்பங்கள் செய்த சதியால் அவரை காட்டுச்செடிகள் சூழ்ந்து இருகாலில் விலங்கிட்டது போலக்கட்டிவிட்டனவாம்.எனவே இதுபோன்ற சிக்கில் சிரமமான பிரச்னைகளில் மாட்டிக் கொண்டு கட்டி போட்டது போன்று ஆகாமல் எதிலும் கவனமும்அக்கறையுடன்எச்சரிக்கையாகவும் இருத்தல் அவசியமாகும்.

ஆறில் ஸ்ரீகுருவின் சஞ்சாரம் பற்றி புலிப்பாணி முனிவர் என்ன கூறுகிறார் பார்ப்போம்!

கேளப்பா குருபதியும் ஆறில் ஏற கெடுதி மிகச் செய்வான் மாபலியாம் மன்னன்
சீரப்பா சிறைக்கூடம் சென்றாரப்பா, சிவசிவா தேவர்களின் கொடுமையாமே
ஈரப்பா ராஜபயம் கலகம் துன்பம் இல்லதனில் களவும் போம் கிலேசம் மெத்த
வீரப்பாவெகுபயமாம்சர்ப்பதோஷம்,வேந்தன்நின்றபதியறிந்துவினையைமூட்டே

– என்று இப்பாடலில் தேவர்களின் சதியால் மாபலி மன்னன் சிறையிலடைக் கப்பட்டான்.அரசாங்கவகையில் அல்லல் உண்டு. துன்பம், துயரமெல்லாம் மட்டுமல்ல வீட்டில் திருட்டு, அதிகமான மனக்கவலை, சர்ப்பதோஷம், ஆகியவையெல்லாம் ஏற்படக்கூடும் என்று புலிப்பாணி முனிவர் கூறுகிறார்.

பொதுவாக ஜோதிட சாஸ்திர விதிப்படி எல்லா ராசிக்காரர்களுக்குமே ஆறாமிடம் கெட்ட இடம் தான். பகை, பிணி, கடன் போன்ற பாதிப்பான கெடுபலன்களைத் தரக் கூடிய இடம் அதுதான்.சுபக்கிரகமும்,தனகாரகனுமான ஸ்ரீகுருபகவான் அங்கே சஞ்சரித் ;தால் நன்மையான பலன்கள் முடக்கப்படும்.அவரால் உயர்வு உண்டாகக் கூடிய நல்ல பலன்கள் எல்லாம் தடுக்கப்படும் என்கிற அடிப் படையான காரணத்தை மையமாகக் கொண்டுதான் முன்னோர்களும், மாமுனிவர் களும் ஏடுகளில் எழுதி வைத்துள்ளனர்.

ஸ்ரீகுருபகவானால் முயற்சிக்கும் காரியங்களில் தைரியமும், தன்னம்பிக்கையும் கவனம் ஊக்கத்தோடு உருப்படியான காரியங்களை சாதிப்பீர்கள். எதிரிகளின் பலம் கூடு தலாகும். உங்களது வலிமை குறையும். வாக்கு, நாணயம் காப்பாற்ற திணறக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

பொருளாதாரமான பண விஷயத்தில் பல அதிருப்தியான பிரச்சினைகளை சந்தித்துத்தான் ஆகவேண்டியிருக்கும். வழக்கமாக வரும் வருமானம் தட்டுத்தடங்கல் தட்டுத்தடங்கல் பட்டு எதிர்பாராத விதமாக சுணக்கமாகும். கணிசமாக பண உதவி கிடைப்பதற்கு ஏதாவது புரட்டிக் கொள்ள நெருக்கடியாக இருப்பது சர்வ சாதாரணமாக இருந்திடவும் ஞாயமுண்டு. இந்த குருமாறுதலால் இஷ்டத்திற்கு பணத்தை வாங்கிக் கஷ்டம் இல்லாமல் செலவு செய்து கொள்வதற்கு முடியாது என்பது மட்டும் தெரிகிறது.

ஜீவன சம்பந்தமான வகையில் செய்தொழில், வியாபாரம், வணிகம், உத்தியோகம் எதுவானாலும் பழக்க வழக்கமெல்லாம் சரிபடாதது மட்டுமல்ல.கைக்காசைக் கரைப் பதாகவும் இருக்கும்.புதிய முயற்சியை தவிர்ப்பது நல்லது. யாருடனும் கூட்டுச் சேரக் ;கூடாது. அரசாங்க, வகையில் கவனமும், எச்சரிக்கையும் அவ சியம் தேவை. ஸ்திர சொத்துக்களினால் நஷ்டமும், கஷ்டமும் ஏற்படும். சிலர் வீட்டை விற்றோ தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியும் நேரலாம். வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரங்களில் அலைச்சல், திரிச்சலோடு மனத்திலே நிம்மதியும் இழக்க செய்திடும்.

குடும்பத்தில் தேவைகளையும், பிரச்சினைகளையும் ஓரளவு சமாளித்து கொள்ளலாம். தேவைகளுக்கு தகுந்தாற்போல் பணம் புரளும். நகை நட்டுகள் சம்பந்தமான சஞ்சலங்களும், சங்கடங்களும் இருந்திட ஞாயமுண்டு. வரவுக்கு அதிகமாக செலவுகள் இருப்பதால் சிக்கனமோ சேமிப்போ முடியாது. விரயஸ்தானமும் குருபார்வை பெறுவதால் திருமணமும், சுபகாரியங்கள் சம்பந்தமான செலவினங்களும், இருந்திடவும் ஞாயமுண்டு.

உத்தியோகஸ்தர்களுக்கு:-வேலை நிலவரத்தில் கடும்சோதனையும், வேதனையும் இருந்திடும். சக ஊழியர்களுடன் எச்சரிக்கையாக பழகுவது நல்லது.

மாணவர்களுக்கு:- இது ஒரு சோதனையான காலமாகும். படிப்புக்கு பாதகம் ஏற்படும். முயற்சியோடு நம்பிக்கையோடும் ஊக்கத்தோடும் படித்தால் வெற்றி நிச்சயம்.

வியாபாரிகளுக்கு:- செயல் அளவில் நல்ல முன்னேற்றம்தான். பணத்தைப் பொறுத்த வரையில் அதிகமாக வெளியில் முடங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.

தொழிலாளர்களுக்கு:- உழைப்புக்கேற்ப ஊதியமும் படும் பாட்டிற்கேற்ப பலனும் கிட்டிடும். திட்டமிட்டு வேலைகளை செய்வதன் மூலம்அனுகூலம் கிட்டிடும்.

கலைஞர்களுக்கு:- கடுமையாக பாடுபட வேண்டி இருக்கும். ஒப்பந்த விஷயம், கூட்டுமுயற்சி, பணம் வசூலிப்பதில் நீங்கள் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு:- பணத்தை தேற்றிக் கொள்வதில் மட்டுமே குறியாக இருப்பீர்கள். எதிலேயும் மாட்டிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.

பெண்களுக்கு:- ஒட்டிக்கு ரெட்டியாக செலவாகுவதுடன் கைபணமும் சேமிப்பும் கரையவும் கூடும். பொறுப்புடன் வேலைகளை செய்து முடிப்பதில்; நிதானம் வேண்டும்.

ஸ்ரீகுருபகவானின் அருட்பார்வைகளினால் ஏற்படும் நன்மைகள்

ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ஸ்ரீ குருபகவானின் மூன்று பார்வைகளில் ஒரு பார்வையான ஐந்தாம் பார்வை, உங்கள் ராசிக்கு ஜீவனஸ்தானமும் பத்தாமிடமுமான கன்னியில்; பார்ப்பதால் பழைய விவகாரங்களும், கூட்டு குத்தகைகள் சம்பந்தப்பட்ட காரியங்களும் வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். இருந்து வந்த தொல்லை துயரங்கள், நெருக்கடி, கெடுபிடி, உபத்திரவம் விலகும். முயற்சிக்கும் அடிப்படையான விஷயங்களில் பணவசதி அதிகரிக்கும்.

ஸ்ரீகுருபகவானின் இன்னொரு பார்வையான ஏழாம் பார்வை உங்கள் ராசிக்கு விரயஸ்தானமும் பன்னிரெண்டாமிடமுமான விருச்சிகத்தில்; பார்ப்பதால் முயற்சிக்கும் காரியங்களில் நல்ல வாய்ப்புகள் தோன்றும்.செய்தொழில்களில் லாபகரமான வருமானப் பெருக்கமும் கூடுதலாகும். எதிர்பாராத நல்ல அதிர்ஷ்டங்களும் எங்கும், எதிலும் திறமையே நிறைந்து காணப்படும். பொருளாதார வசதியில் தேவைக்கேற்ப பணம் புரளும்.

அடுத்ததாக ஸ்ரீ குரு பகவானின் மற்றொரு பார்வையான ஒன்பதாம் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான மகரத்தில் பதிவதால் விசேஷமான நன்மையான பலன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். வீடு, நிலம், மனை போன்ற ஸ்திரசொத்துக்கள் ஏற்படுதலு முண்டாம். வம்பு,வழக்கு,வியாஜ்ஜியம்,கோர்ட் விவகாரங்களில்அனுகூலமான போக்கு விலகும். ஜீவனகாரியம் சம்பந்தப்பட்ட செய்தொழில் வகைகளில் முடக்கப்படும் முதலீடு அபிவிருத்தியுடன் அதுவே சொத்தாகவும் மாறிடும் வாய்ப்புள்ளது. பொருளாதார நிலையில் பணவசதி பெருகி உயர்ந்து காணப்படும். கடன்கள் நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.

நட்சத்திரப்பலன்கள்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

ஞாலம் போற்றும் புகழ்மிக்க வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் மூல நட்சத் ;திரத்தில் பிறந்தஉங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் சாதாரணமாகத்தான் இருக்கும். திட்டமிட்ட பணிகள் மிகுந்த சிரமத்தின் பேரில் தான் நடக்கும். தொழில், வியாபாரத்தை அதன் போக்கில் விட்டுப்பிடிப்பது தான் நல்லது. உத்தியோகஸ்தர்கள் அவசர முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் மனதிற்குப் பிடிக்காத காரியங்கள் நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

போராடி முடிவில் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் சோதனைகள் நிரம்பியதாக இருக்கும். எந்தக் காரியமும் தீவர முயற்சி செய்தால் மட்டுமே நடக்கும். எதிர்பார்த்தது எதுவும் உடனே கிடைத்துவிடாது. செய்தொழில் வியாபாரத்தில் திடீர் முட்டுக்கட்டைகள் ஏற்படலாம். இதனால் குடும்பத்தில் நிம்மதி குறையும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்கத் தயாராகி விடுவீர்கள். சிறிதளவு ஆறுதலாக இருக்கும் பாலைவனத்தில் திரிந்தவனுக்கு குளிர் நீர்; கிடைத்த மாதிரி இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு

சூரியன் ஆதிக்கத்தில் பலம் பெற்ற உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் ஒரளவு சாதகமாகவே இருக்கும். திடீர் முயற்சி செய்து வழக்கமான பணிகளை முடித்து விடுவீர்;கள். தொழில் வியாபாரம் திடீர் திருப்பம் ஏற்படும். முன்னேற்றமாக நடக்கும். வருமானமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் அகலும். உங்களுக்கு யோககாலம் என்று தான் சொல்ல வேண்டும். திடீர் அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்கலாம். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்..நீங்கள் நினைத்தது யாவும் நடக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் குறைந்து சுபகாரிய பேச்சு வார்த்தை நடக்கும்.

மாதவாரியாகப்பலன்கள்

மே-17-5-2012 முதல் 31-5-2012 வரை- இந்தக்காலக் கட்டம் சிக்கல், சிரமங்கள், பிக்கல், பிடுங்கல்கள் நிறைந்த காலமாகும். செய்தொழில்,வியாபாரங்களில் பாதிப்பு ஏற் படுவதுபோல் தோன்றினாலும் கடைசியில் எதுவும் நடக்காது.வரவேண்டிய வருமானங் ;கள் வந்துக்கொண்டுதான் இருக்கும். புதிய முயற்சிகள் அவ்வளவாக கை கொடுக்காது. உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாமல் பயந்து கவலைப்பட தேவையில்லை.

ஜூன்-1-6-2012 முதல் 30-6-2012 வரை – இந்தக்காலக்கட்டம் மிக அனுகூலமாக இருக்குமென்று சொல்வதற்கில்லை. சிலசோதனைகளுக்கு நடுவில் சாதனைகளும் இருக்கும். திட்டமிட்ட பணிகள் கடும் முயற்சியும், உழைப்பின் மீதும்தான் நடக்கும். செய்தொழில், வியாபாரம் உங்கள் கட்டுபாட்டிற்குள் வந்துவிடும். ஓட்டைகளைச் சரி செய்துவிடுவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு வழக்கம்போல் போராட்ட நிலைமையே!

ஜூலை – 1-7-2012 முதல ;31-7-2012 வரை – இந்தக்காலக்கட்டம் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். முயற்சிக்கும் காரியங்களில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். செய்தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் கூடுதலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சுதந்திரம் பறிபோனது மாதிரி இருக்கும். குடும்பத்தில் புதிய பிரச்னையை சமாளிக்க வேண்டி இருக்கும்.

ஆகஸ்ட்-1-8-2012 முதல் 31-8-2012 வரை- இந்தக்காலக்கட்டம் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். உங்கள் இஷ்டம் போல் எதுவும் செய்துவிடக்கூடாது. அதிக அளவில் நன்மைகள் கிட்டாது. பண நிலையில் மந்தப்போக்கும் எதையும் பலமுறை முயற்சித்தே சாதிக்க முடியும். வருமானம் தாமதமாகும் கடன்கள் பயமுறுத்தும். செய்தொழில், வியாபாரம் சீராக நடைபெறும். புதிய முயற்சிகள் வேண்டாம்.

செப்டம்பர்-1-9-2012 முதல் 30-9-2012 வரை- இந்தக்காலக்கட்டம் மந்தமாக தான் இருக்கும். தெரிந்தே தவறுகளை செய்துவிட்டு அதற்காக வருந்துவீர்கள். எப்போதும் சிந்தனை வயப்பட்ட நிலையில்தான் இருப்பீர்கள். பணப்பிரச்னை சமாளிக்கும்படி இருக்கும். செய்தொழில், வியாபாரத்தில் டென்ஷன் அதிகரித்த படியே இருக்கும். மூன்றாம் மனிதர்களின் தலையீடு அதிகமாகி விடும். புதிய முயற்சிகள் ஏமாற்றத்தையே அளிக்கும்.

அக்டோபர் -1-10-2012 முதல் 31-10-2012 வரை- இந்தக்காலக்கட்டம் தவறுகள் எங்கே? ஏன்? நடக்கிறது என்பதைத் கண்டுபிடித்துவிடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளும் சமாளிக்கும்படியாகத்தான் இருக்கும். செய்தொழில், வியாபாரங் களில் பிரச்னைகள் இருந்தாலும் வருமானம் குறையாது. திடீர் பணவரவால். சிலருக்கு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும்.

நவம்பர் 1-11-2012 முதல் 30-11-2012 வரை – இந்தக்காலக்கட்டம் சோர்வு சோம் பல்கள் அதிகரிக்கும் எனலாம். சிறு விபத்துக்கான அறிகுறி தென்படுவதால் கவனம் தேவை.இனம் புரியாத மனோவியாக்கூலம் உண்டாகலாம். திருமண முயற்சி தள்ளிப் ;போகும். கொடுக்கல், வாங்கலில் குழப்பம் உண்டாகலாம். சுக சௌகரியங்கள் குறையும்.

டிசம்பர் -1-12-2012 முதல் 31-12-2012 வரை – இந்தக்காலக்கட்டம் சந்தோஷமான தகவல்கள் வரும். திட்டமிட்ட பணிகளும், தடைபட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணப்பிரச்னை ஓரளவு குறைந்திருக்கும். செய்தொழில், வியாபாரத்தில், கெடுபிடிகள், நெருக்கடிகள் நீங்கும். பாக்கிகள் வசூலாகும்.உத்தியோகஸ்தர்களுக்கு சந்தோஷ சம்பவங்கள் நிகழும்.

ஜனவரி -1-1-2013 முதல் 31-1-2013 வரை – இக்காலகட்டங்களில் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் நடக்காது.வழக்கமான பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கும். ஒன்று மில்லாத விஷயத்துக்கெல்லாம் தீவிரமாக யோசனை செய்துக் கொண்டிருப்பீர்கள். செய் தொழில்,வியாபாரம் சீராக நடந்து வரும் மாற்றங்களை ஏற்படுத்த நினைக்கக்கூடாது. கொடுக்கல்,வாங்கல்சீராகஇருந்து வரும்.குடும்பத்தில் எல்லாமே தலைக்கீழாக நடந்திடும்.

பிப்ரவரி -1-2-2013முதல் 28-2-2013 வரை – இந்தக்காலகட்டம் ஓரளவு அனு கூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு சம்பந்தமில்லாத தெரியாத வேலைகளில் ஈடுபடுவது நல்லதல்ல. தீவிர முயற்சியின் பேரில் தான் எந்தப் பணியும் நடக்கும். தேவைக்கேற்ப பணம் புரளும். செய்தொழில், வியாபாரத்தைப் பொறுத்தவரையில் மாறுதல் எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம்.

மார்ச்-1-3-2013 முதல் 31-3-2013வரை – இக்காலகட்டத்தில் ஆறாமிடத்து குருவின் பலன்கள் குறையும். பாதிப்புகள் மறையும். அனுகூலப்பலன்கள் அதிகரிக்கும். இக்கட்டு, இடர்பாடுகள் இருக்காது. அன்றாட வாழ்க்கை எந்த விதத்திலும் பாதித் திடாது. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு இனம்புரியாத கவலைகள் இருக்கும். திருமணம் போன்றவற்றில் அவசரம் வேண்டாம்.

ஏப்ரல் 1-4-2013 முதல் 30-4-2013 வரை – இக்காலகட்டத்தில் யோகமுடைய பலன்களாகவே இருக்கும். விட்டதைப் பிடித்து விடுவீர்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம். தைரியமும், தன்னம்பிக்கையும், மேலோங்கும். முயற்சிக்கும், காரியங்களில் எழுச்சிமிக்கதாக இருக்கும். செய்தொழில் வழியில் பெரும் மாறுதலாகி நல்ல திருப்பம் உண்டாகும். பணம் திடீரென்று வரும். கடன்கள் அடையும்.

மே 1-5-2013 முதல் மே 27-5-2013 வரை – இந்தக்காலக் கட்டம் உங்கள் செல்வாக்கு, சொல்வாக்கு இரண்டுமே சிறப்பாக இருக்கும். முயற்சிக்கும் காரியங்களில் இருந்த கேள்விக்குறிகள் ஆச்சரியக் குறிகளாக மாறி உங்களை சந்தோஷக்கடலில் மிதக்க வைக்கும். பணப்பிரச்னை என்பதே இருக்காது. செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் கூடவே வருமானமும் வருகிறது என்று தானே அர்த்தம்.

பொதுவில் இந்தகுருமாறுதல் மாற்றங்களும் இல்லை. ஏமாற்றங்களும் இல்லை என்று சொல்லுகின்ற அதே நேரத்தில் எதிர்பாராத யோகங்கள் உங்களை வந்தடையும்.உங்கள் வேண்டுதலுக்கு தகுந்த பலன்கிடைக்குமென்றும் சொல்லலாம். சகலசௌபாக்கியங் களையும் வாரி வழங்கிக்கொண்டிருந்த ஸ்ரீகுருபகவான்; அடுத்து பெயர்ச்சியாகி ராசி மாறி சஞ்சரிக்கும் காலம் உங்களுக்கு மனத்தெளிவை ஏற்படுத்தும். இனி எதிர்;காலம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கும்.அதிர்ஷ்டகாற்று உங்கள் பக்கம் வீசும்.ஆகா!கேட்கவே சந்தோஷமாக இருக்கிறதேஎன்கிறீர்களா! இது நிஜம் தான்.

குரு வாழ்க! குருவே துணை!![rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: