செருப்பால் அடிவாங்கிய ரஜினி நண்பர் சிரஞ்சீவி

விளம்பரங்கள்

Telugu Super Star Chiranjevi

காணொளி:-

ஆந்திராவில் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும் வருகின்ற ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் கடும் முயற்சி செய்து கொண்டுள்ளது ஆனால் தேர்தல் நிலவரம் காங்கிரஸக்கு சாதகமாக இல்லை, தற்போதைய நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸே வெற்றி பெரும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. நேற்று கர்னூல் மாவட்டம் எம்மிகலூரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்தனர்.

சிரஞ்சீவி பேசிக் கொண்டிருந்தபோது மைக் சரியாக வேலை பார்க்கவில்லை. இதனால் அவர் பேசுவது தொண்டர்களுக்கு சரியாக கேட்கவில்லை. இதனால் தொண்டர்கள் காதில் சரியாக விழவில்லை என்று கோஷமிட்டனர். சத்தமாக பேசுமாறு மீண்டும் மீண்டும் சத்தம் போட்டனர். இதனால் மிகுந்த கோபத்திற்கு ஆளான சிரஞ்சீவி, யாரும் கோஷம் போடக் கூடாது, சத்தம் போடக் கூடாது. சத்தம் போட்டால் நான் பேச மாட்டேன், போய் விடுவேன் என்று சத்தமாக கத்தினார்.

சிரஞ்சீவியின் கோபத்தால் கடும் அதிருப்திக்கு ஆளான தொண்டர்களும், பெண்களும் காலில் போட்டிருந்த செருப்புகளை கழற்றி சரமாரியாக சிரஞ்சீவி மீ்து வீசி எறிந்தனர். சரமாரியாக ஏவுகணை போல வந்து விழுந்த செருப்புகளால் அதிர்ச்சிக்கு உள்ளன சிரஞ்சீவி செருப்புகளைத் தடுக்கப் பார்த்தார் ஆனால் முடியவி்ல்லை. சீறி பாய்ந்து வந்த சில செருப்புகள் உயர்திரு ஆந்திர முதல்வர் மீதும் வந்து விழுந்து அசிங்க படுத்தின. இதையடுத்து பிரசாரம் நிறுத்தப்பட்டு ஆந்திர முதல்வரும், சிரஞ்சீவியும் அங்கிருந்து தப்பி ஓடாத குறையாக வெளியேறினர். அறிவுப்பு:- கார்த்தியின் சகுனி திரைப்பட பாடல்கள் MP3 Songs download…Click here…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி