குஷ்பூ இடுப்பை கிள்ளியது யார்…

விளம்பரங்கள்

Tamil actress Kushboo

காணொளி:-

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி அவருடைய 89 -வது பிறந்த நாள் அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனையடுத்து, அவர் வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவித்தில் மரியாதை செலுத்தினார்.

அதனையடுத்து காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார். திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்படியும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகை குஷ்பு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் கருணாநிதி அங்கு இல்லை அவர் ஏற்கனவே , அங்கிருந்து புறப்பட்டு அறிவாலயம் சென்றுவிட்டார். இதனால் குஷ்பு அறிவாலயம் வர வேண்டியதாகிவிட்டது. ஆனால் குஷ்பூவுக்கு நேரம் சரியில்லை என்றே தெரிகிறது அங்கும் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத குஷ்பு மாலை 6 மணிக்கு கே.கே. நகர் பேருந்து நிலையம் அருகே நடந்த கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் முதல் வரிசையில் நடிகை குஷ்பு வந்து அமர்ந்திருந்தார். அந்த பொதுக்கூட்டம் முடிந்து குஷ்பு வெளியேற முன்ற போது, அவரது இடுப்பை யாரோ மர்ம ஆசாமி கிள்ளிவிட்டதாக கூறப்பட்டுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்து அதே இடத்தில் சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் குஷ்புவை பத்திரமாக அவரது காருக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விவகாரத்தை விவகாரமாக்கினால் அது கருணாநிதி பிறந்த நாள் பொது கூட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் என்று திமுக நிர்வாகிகள் எடுத்து கூறியதால், குஷ்பு சாந்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி கேட்டு திமுக தலைமை கடும் கோபத்திலும், சங்கடத்திலும் உள்ளது. ஆனால் இந்த விசயமே நடக்கவில்லை என்று குஷ்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அறிவுப்பு:- கார்த்தியின் சகுனி திரைப்பட பாடல்கள் MP3 Songs download…Click here…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி