ரஜினியின் கோச்சடையான் பேசப் போகும் மொழிகள்

விளம்பரங்கள்

Super Stars Rajini Kanth's Kochadaiyaan Movie First Look Wallpapers

காணொளி:-

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ரஜினியின் கோச்சடையான் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் துவங்கியது. ரஜினி உடல் நலம் சரியான பிறகு எடுக்க படும் முதல் படம் இது, லண்டனில் இருபது நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் பெரும் பகுதி காட்சிகள் படமானது.

ஹாங்காங்கில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்த கையேடு டப்பிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மிக்சிங், ரீ-ரிக்கார்டிங் பணிகள் தற்பொழுது நடந்து வருகின்றன. லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், ஊடங்காங் ஸ்டூடியோக்களில் இப்பணிகள் தனி தனியாக நடந்து வருவதாக படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், படத்தை வெளியிடுவதற்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் இந்த வருடம் இறுதிக்குள் படம் வெளியாகி விடும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஒரு சிறப்பு தகவல் கோச்சடையான் திரைப்படம் ஜப்பான், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டும் இல்லாமல் பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: