எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – விருச்சிகம்

விளம்பரங்கள்

[rps]

viruchigam Raasi

பிற ராசிகளுக்கு
1. குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்
2. குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்
3. குருபெயர்ச்சி பலன் 2012 – மிதுனம்
4. குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்
5. குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்
6. குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி
7. குருபெயர்ச்சி பலன் 2012 – துலாம்
8. குருபெயர்ச்சி பலன் 2012 – தனுசு
9. குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்
10. குருபெயர்ச்சி பலன் 2012 – கும்பம்பேரன்புள்ள விருச்சிக ராசி அன்பர்களே! வணக்கம்!! வாழிநலம்!!!

நவக்கிரகங்களில் தைரியக்காரகன் என்றழைக்கப்படும் ஸ்ரீசெவ்வாய்பகவானை ஆட்சி கிரகமாகவும்,வீடாகவும், ராசியாதிபதியாகவும் அமையப்பெற்ற உங்கள் ராசிக்கு 2,5க்குடைய தனஸ்தானாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியும், தனபஞ்சமாதிபதியுமான ஸ்ரீகுருபகவான் இதுவரையில் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி உங்கள் ராசிக்கு ருணரோக சத்ருஸ்தானமும் ஆறாமிடமுமான மேஷராசியில் இதுவரையில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இவர் ஸ்வஸ்;திஸ்ரீ ஸ்ரீநந்தன நாம ஆண்டு வைகாசி மாதம் 4ஆம்தேதி ஆங்கிலம் மேமாதம் 17ஆம் தேதி 2012 ஆம்ஆண்டு (17-5-2012) வியாழக்கிழமை அன்று மாலை 6-18 மணியளவில் பெயர்ச்சியாகி ராசிமாறி உங்கள் ராசிக்கு களத்திரஸ்தானமும் ஏழாமிடமுமான ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து 27-5-2013 ஆண்டு வரை ஒராண்டு காலம் அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.

குணநலன்கள்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால், ஸ்ரீ முருகப்பெருமானின் அருளுக்கும், அருள்மிகு அம்பிகையின் அருளுக்கும் முழுமையாக பாத்திரமானவர்களாக விளங்குவீர்கள். வாக்கு பலிதமும், கனவு பலிதமும் உங்கள் வாழ்க்கையை வழி நடத்தி செல்கிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொள்வீர்கள்.ஆண்டவனை பற்றியும், ஆண்டு கொண்டிருப்பவர்களை பற்றியும் அடிக்கடி சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் நீங்கள் தான். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்தவர்கள் வாழ்க்கையின் வெற்றி படிக்கட்டின் விளிம்பில் ஏறி நிற்பதால், உங்களைச் சுற்றி ஒரு பெரும் கூட்டமே இருக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசும் நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள். சட்ட திட்டங்களை சரியாக பின்பற்றும் நீங்கள், வரம்பு மீறி பழக மாட்டீர்கள். இலவசமாக எதையும் பெறமாட்டீர்கள். நீதி நியாயத்திற்காக குரல் கொடுக்கும் நீங்கள், அடிபட்டவர்களை அரவணைப்பீர்கள். தளராத தன்னம்பிக்கையால் தடைகளையும் படிக்கட்டுகளாக்கி பயணிப்பவர்களே! மிக முக்கியமாக தெய்வீக சிந்தனையும், ஜோதிட ஞானமும் தெரிய வரும். ஒரு சிலருக்கு வாக்கு பலிதம் யோகமும் இருந்து வரும். ஆனால் இது மற்றவர்களுக்கு பொருந்துமே தவிர உங்களுக்கு சரியாக வராது. கடினமாக உழைத்து தான் முன்னேற்றத்தைக் காண முடியும்.

பொதுப்பலன்கள்

குதூகலம் தரும் ஏழாமிடத்து குரு எண்ணற்ற நற்பலன்களை கொடுக்கும்
யோகங்கள் வந்து சேரும், வளமான வாழ்வில் வசந்தம் வீசும்
பாம்பு கிரகங்களின் சஞ்சாரம் முன் பாதி சிக்கல் பின் பாதி நிம்மதி
ஏழரை சனியாக விரயத்தில் சஞ்சரிப்பது யோகமுடன் நல்லதே நடக்கும்

– உங்கள் ராசியை வெற்றிகரமாக நடத்தி செல்லும் முக்கிய கிரகமாக இருக்கப் போவது ஸ்ரீ குருபகவான் என்றால் மிகையல்ல. இந்த குருமாற்றத்தால் நல்ல வழி தென்படுமா? வாழ்க்கைப்பயணம் சுலபமாகவும், சௌகர்யமாகவும், வளமாகவும், செழிப்பாகவும், சுபீட்சமாகவும் இருக்குமா? இந்தக் கேள்விகளுக்கு நல்ல பதில்கள் அனுபவப்பூர்வமாக, சந்தோஷமாக அறிந்து கொள்ளத்தான் போகிறீர்கள். ஏழாமிடத்திற்கு வந்து சஞ்சரிக்கும் ஸ்ரீகுருபகவான் உங்கள் வாழ்க்கை பயணத்தை முன்னேற்றகரமான வழியில் திசை திருப்பி விடுவார். உங்கள் வாழ்நாளில் இதுவரையில் கிடைத்திராத அதிர்ஷ்டகரமான யோக பாக்கியங்களுடன் அதிர்ஷ்டக் காற்றை சுவாசித்துக் கொண்டு ஆனந்தமாக வலம் வருவீர்கள் என்று எதிர்பார்க்கலாம். இதுவரை கரடுமுரடான பாதையில் பயணித்துக் கொண்டிருந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சிக் காலம் அமர்க்களமாக அதிர்ஷ்டகரமாக ஆனந்தமாக அதிரடியாக ஆரம்பமாகிறது. சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்ததுப் போல் பல்வேறு நற்பலன்களை வாரி வழங்கும். பொருளாதார நிலை உயர்ந்து போற்றுகிற அளவிற்கு வாழ்க்கை சக்கரம் சுழலும்.

ஸ்ரீ சனி பகவானின் சஞ்சார நிலவரம்

முக்கிய கிரகங்களின் சஞ்சார நிலவரங்களை அனுசரித்துப் பார்க்கையில் உங்கள் ராசிக்கு 3.4 ஆகியஇடங்களுக்கு உரியவரும் சகோதரஸ்தானாதிபதியும், சுகஸ்தானாதிபதி யுமான ஸ்ரீ சனி பகவான் தொடர்ந்து துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச்சனியில் விரயச்சனியின் காலம் ஆகும். எனவே ஸ்ரீசனிபகவான் இரண்டரை ஆண்டுகாலம் விரயச் சனியில் சஞ்சரிக்கிறார்.ஆனால் ஸ்ரீசனிபகவானுக்கு சந்திரன் நட்புகிரகம் என்பதால் கெடு பலன்களை விட அனுகூலமான பலன்களை தரக்கூடியவர் ஸ்ரீசனிபகவான் என்பது நிஜம்.

இனி விரயஸ்தானமான 12ல் சனி சஞ்சரிக்கும் ஏழரை சனி ஆரம்பகால இரண்டரை ஆண்டுகளின்பலன்கள் பற்றிசிறிது சிந்தித்து ஆராய்ந்து பார்க்கலாம்.வராகிமிஹிரர் கூறுவது:-

அன்த்யே ப்ராப்னோத்யபி சோகோர்மி மாலாம்
– அதாவது 12ல் சனி அளவுக்கு மீறி துக்கம், சோகம், சோதனை, வேதனை வரும் என்பதால் யவனசார்யா த்வாதஸஸ்து சேஷ்டானத புண்ய கீர்த்தி த்யுதிமாயஹர்த்தா முயற்சி வீணாகும், திறமைக்கும் பெருமைக்கும் பங்கம் ஏற்பட்டு பேரும் புகழும் கெடும் உருவம் பொலிவிழக்கும் மானபங்கம் ஏற்படும் என்று கூறுகிறார்.

உயர்ந்த கார்யாத்வகஹ்ருதி மரிபி ஸ்திரி சுதவ்யாதி மந்த்யே
– என்று மந்த்ரேஸ்வரர் பலிதீபிகையில் கூறியதாவது 12ல் சனி வரும் போது ஒரு வீண் பயனற்ற வேலைகளில் ஈடுபடுகிறான் அவன் செல்வம் பகைவர்களால் பறித்துக் கொள்ளப்படும். அவனது மனைவி மக்கள் பலவகை நோய் நொடிகளால் பாதிக்கப்பட்டு துன்புறுவார்கள் என்பதாம்.இதானல் ஸ்ரீ சனிபகானின் பன்னிரெண்டாமிட சஞ்சாரத்திற்கு பல வகையிலும் நன்மை இல்லை என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு இடத்த்லும் நிம்மதியாக இருக்க முடியாமல் அலைய வேண்டி வரும் என்கிறது.எனவே இப்போது விரயஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஸ்ரீசனிபகவானால் இனிமேல் பொதுவாக அதிருப்திகரமான பலன்களைத் அதிகமாக சந்திக்க வேண்டி இருக்கும்.

ஸ்ரீராகு-கேது பகவான்களின் சஞ்சார நிலவரம்

மேலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான பாம்பு கிரகங்களான நிழல் கிரகங்கள் யோகக்காரகனான ராகு உங்கள் முதல் ராசியும், ஜென்ம ராசியுமான விருச்சிகத்திலே அதே நேரம்; ஞானக்காரகனான ஸ்ரீ கேது பகவானும் அதே போன்று தொடர்ந்து சஞ்சாரம் செய்கிறார்கள். உங்கள் ராசிக்கு ஏழாமிடமும் சப்தகளத்திரஸ்தானமுமான ரிஷப ராசியில் ஜென்ம ராகுவும் சரி, 7மிட கேதுவும் சரி, உங்களுக்கு எந்த நன்மைகளையும் செய்ய முடியாது தான். வேறு எதையும் ஒரு மனதான முடிவு எடுத்துச் செய்ய முடியாது. இந்த ராகு-கேது உங்களுக்கு அனுகூலமாக இல்லை,அனுசரனையாகவும் இல்லை, ஆதரவாகவும் இல்லை. அதனால் எங்கும் எதிலும் கவனமும், பொறுமையும், நிதானமும் எச்சரிக்கையும் தேவை. நிழல் கிரகங்களான இவ்விரண்டு பாம்பு கிரகங்களும் இதுவரை இருந்த இடமும் சரி, இனி இருக்கப்போகிற இடமும் சரி-சரியான இடங்களே அல்ல. உடல் நலமும் அவசியம் கவலைப்ப பட வேண்டியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வாக்கிய பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் கார்த்திகை மாதம் 17ஆம்தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 2ஆம்தேதி 2012 ஆம் ஆண்டு (2-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10-53 மணியளவில் ஸ்ரீ ராகுபகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி துலாம் ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் பெயர்ச்சியாகி ராசிமாறி மேஷ ராசிக்கும் 11-31 நாழிகைக்குள் பிரவேசித்து ஒன்றை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் மார்கழி மாதம் 8ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ ராகு பகவானும், அதே நேரம் ஸ்ரீ கேது பகவானும் பெயர்ச்சியாகி ராசி மாறி முறையே துலாம் ராசிக்கும், மேஷ ராசிக்கும் பிரவேசித்து ஒன்னரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

மொத்தத்தில் இருபஞ்சாங்கங்களின் சித்தாந்தப்படி இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரி;த்து வந்த ராகு இப்பொழுது விரயஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். ஏழாமிடத்தில் சஞ்சரித்து வந்த கேது இப்பொழுது ஆறாமிடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். இதனால் எண்ணற்ற மாற்றங்களை நீங்கள் சந்திக்கப் போகிறீர்;;கள்.ஆக இந்த ராகு-கேது சஞ்சாரம் உங்களுக்கு அமோகமாக அதிர்ஷ்டகரமாகவே ;ஆரம்பிக்கிறது. தெய்வ அருளால் இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்று சொல்லுமளவிற்கு உங்கள் இலட்சியங்கள் ஈடேறி கனவுகள் நினைவாகி ஒரு அதிர்ஷ்ட சூழலில் சந்தோஷமாக-ஆன்மீக அரவணைப்போடு அற்பதமாக வாழப்போகிறீர்;கள். வாழ்க்கைப் பாதையில் தென்றல் வீச ஆரம்பிக்கும். நன்மையான அதிர்ஷ்டக்காற்றை அளவோடு சுவாசிப்பீர்கள்.

ஸ்ரீ குரு பகவானின் சஞ்சார நிலவரம்

ஸ்ரீ குரு பகவான் ராசிக்கு ஏழில் சஞ்சரிப்பதோடு உங்கள் ராசிக்கு இது ஒரு சூப்பரான அமைப்பு அட்டகாசமான அமைப்பு. குரு மாறினால் குதூகாலம் நிரம்பி வழியும் என்பது உங்களைப் பொறுத்தவரை மிகச் சரியாகவே இருக்கும். இப்பொழுது ஸ்ரீகுருபகவான் சப்தமஸ்தானத்தில் உங்கள் ராசியை பார்க்கப்போகிறார். இதுவரை கேள்விக் குறியாக இருந்த உங்கள் வருங் காலம் இனி ஆச்சரியக்குறியாக மாறும். ஸ்ரீகுருபகவானின் அன்பான அக்கறையும், முழுக்கவனமும் உங்கள் மீது திரும்பிவிடுகிறது. முக்கிய கிரகங்களின் மாற்றங்களினால் ஜீவன வகையில் ஒரளவு லாபகரமான காலமாகத்தான் இருக்கும். உங்கள் தகுதியும், வாழ்க்கைத் தரமும், மதிப்பும், மரியாதையும், செழிப்பும் உயரும். உன்னதமான காலம். எங்கும்,எதிலும் இனி வெற்றிக்கொடிக்கட்டி வாழ்வாங்கு வாழ்வீர்கள். ஆன்மீக பலமும் அதிகரிப்பதால் நீங்கள் திறந்த மனதுடன் தீர்க்கதரிசியாகத் திகழ்வீர்கள். எனவே இந்த காலம் மட்டுமல்ல இனிவரும் ஆண்டுகளும் உங்களுக்கு சாதனை ஆண்டாகத்தான் இருக்கும்.

ஜோதிட சாஸ்திரங்களும்-ஜோதிடச் சுவடிகளும்

ஸ்ரீகுருபகவானின் சஞ்சாரத்திற்கு ஏழாமிடம் எழில்மிகு ஏற்ற இடம்தான். அதைப்பற்றி பெரியோர்கள் பெருமையாக சொல்லி இருப்பதை பார்ப்போம்.

செல்வம் சேரும், தகுதி உயரும் என்கிறார் மகான் மந்திரேஸ்வரர்
வாட்டம் போகும் வசதிகள் பெருகும்

– என்பது வராகமிகிரரின் வாக்கு. எனவே ஏழாமிடம் உங்களுக்கு உன்னதமான ஏற்றம்தான். இனி எல்லாம் ஏறுமுகம்தான்.

குருபதினோன்றேழ் ஒன்பான் கூறுமைந்திரண்டில் நிற்க
திருமகள் கிருபையுண்டாம் தீர்த்த யாத்திரையும் உண்டாம்
தருமதானங்கள் உண்டாம், தந்தை தாய் உதவியுண்டாம்
அருமையும், பெருமையுண்டாம், அரசர் சேவையுண்டாமே

– என்ற பழம்பெரும் பாடல் ஏழாமிடத்து குருவைப் பற்றி ஓகோவென்று புகழ்ந்திருக்கிறது.அஷ்டலட்சுமிகளின் மொத்த உருவமான மகாலட்சுமியின் கடாட்சம் உண்டு. அதிர்ஷ்டமும் ஜஸ்வர்யமும் புரளும். கோயில் திருப்பணி,தான தருமங்கள்,செய்து வள்ளல் என்ற பேரும், புகழும் பெறக்கூடும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும், அரவணைப்பும், உதவியும் கிட்டு தலுமுண்டாம். உங்கள் அருமை பெருமைகள் மற்றவர்களால் புரிந்து கொள்ளும் வகையில் உங்களது சிறப்பான திறமைகள்,தகுதிகள் வெளிப்படும். அரசு சம்பந்தமான பதவிகளும், உத்தியோகம்,அல்லது நன்மைகள் ஆகியவை கைகூடும் என்பது இதன் பொருள். செல்வ வளமும் சுவையான உணவும், வாசனை திரவியங்கள், ஆடை அலங்கார பொருட்கள், வண்டி,வாகனவசதிகள் பெண்களால் உண்டாகும். சந்தோஷம், சயனசுகம், போன்றவற்றையும் செய்வார்என்பது ப்ருஹத் சம்ஹிதையின் அர்த்த புஷ்டியான நன்மைகள் தரும் கருத்து.

பூபதி ஏழில் நிற்கப் புனிதன் காமி-ராஜகன்னியால் லாபம் அன்றும்
புரவி கன்று காலியுண்டு யோகதாரன் என்றுரைத்தேன் தாயே

-என்று பாடியிருக்கிறார் புலிப்பாணி முனிவர்.

பூமிக்கு அரசன் போன்ற ஸ்ரீகுருபகவான் ஜென்ம ராசிக்கு ஏழாமிடத்தில் வந்து சஞ்சரிப்பதால் அந்த ஜாதகர் நல்லவன் என்று பெயர் பெறுவான். இன்பங்களில் விருப்பமுடையவனாக இருப் பான். உயர்ந்த இடத்துப் பெண் களால் ஆதாயம் அடைவான். குதிரை,பசு,கன்று போன்ற கால்நடைகள் விருத்தி யாகும். சௌபாக்கிய யோகமுள்ள மனைவி அமைவாள் என்பதுதான் இப்பாடலின் கருத்து.

ஆமெனவே வியாழனுமே இரண்டு ஐந்தேழ்அடுத்தஒன்பதுபதினொன்றில் வாழ
தாமென செல்வமொடுகுதிரைஉண்டாம்தழைக்குமே குடை தர்மதானமோங்கும்
நாமெனத்தாய்தகப்பன்புதல்வராலேநன்மையாம்அருமையோடுபெருமையுண்டாம்
போமென அரசர்க்கு நல்லோனாக்கும் புகழ் சோபனம் நடக்கும் பூமி ஆள்வன்

– என்று ஜாதக சித்தியும் ஏழாமிட உள்பட மேற்கண்ட இடங்களில் ஸ்ரீகுருபகவான் சஞ்சரிக்கும் போது செல்வம், வாகனம், கால்நடை, உயர் தகுதி, நன்மதிப்பு, தானதர்மம், பெற்றோர் உதவி, புத்திர பாக்கியம், அருமை, பெருமை, திருமணம் போன்ற சுப காரியங்கள், பூமி, புகழ், சேர்க்கை ஆகி யவை கைகூடும் என்று அற்புதமான அதிர்ஷ்டகரமான நன்மைத்தரக்கூடிய யோகப்பலன்கள் எல்லாம் தெரிகிறது.

பாரப்பாகுருவேதான்இரண்டுஐந்தேழ்பரிவாகும்நவத்தோடு பதினொன்றில் தான்
சீரப்பா நின்ற பலன் செப்பக்கேளும் சிவிகையொடு கரிபரி கல்யாணங்கூடும்
நேரப்பா பூஷணமும் மறையோர் நேயம் நிலையாகும் அரசருடன் பேட்டி காணும்
கூறப்பா சுகமெல்லாம் கொடுக்கும் மெத்தக் குடும்பமது தான் செழிக்கும்

– கீர்த்தியோங்கும் -என்று கோட்சார சிந்தாமணி குதூகலமாக பாடியிருக்கிறது.

மந்திரி பன்னொன்றென்பான் வளம் பெற ஏழிலஞ்சில்
வந்திரண்டிடத்தில் நிற்கில் மன்னர்க்கு நல்லனாவன்
சுந்தர மனைவி மக்கள் சோபனம் சிவிகை உண்டாம்
தந்திரத்துடனே பூமி ஆளவும் தலைவனாமே.

– என்ற பழமொழி பாடலுக்கேற்ப பிரமாதமான இடத்தில் சஞ்சரிக்கும் ஸ்ரீகுருபகவானால் அபரிமிதமான பலன்களையெல்லாம் விசேஷமாக எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான நன்மைகள் அதிகரித்திடும் என்பது மட்டும் நிச்சயம்.

முயற்சிக்கும் காரியங்களில் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கூடுதலாகும். இழுபறியாக இருந்தவைகளெல்லாம் சாதகமாக்கி வெற்றி கொள்வீர்கள். பேச்சுவார்த்தைகளால் காரியங்களை எல்லாம் சுலபமாக செய்து முடிப்பீர்கள். முக்கியத்துவங்களை உயர்த்தக் கூடிய முயற்சிகளையும் கூட மும்முரப்படுத்துவீர்கள். வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரங்க ளெல்லாம் சாதகமாக முடியும்.

பொருளாதாரம் முன்னேறிவிடும் ஏழிலே குரு என்பதால் இந்த ஆண்டு வருமானம் அதிகரித்து அதனால் பணவசதி கூடுதலாகும். உபரி வருமானம், வர வேண்டியது, கைவிடப்பட்டது, வெளியிலே முடக்கமானது. எதிர்பார்த்த, எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வகையிலே பொருள் வரவு வந்து கொண்டிருக்கும். கொடுக்கல், வாங்கல் சுலபமாக நடக்கும். கடன்கள் நிவர்த்தி யாகும். ஏராளமாக பணம் சேமிப்பு அதிகரிக்கும்.

செய்தொழில், வியாபாரம், வணிகம் எதுவானாலும் லாபகரமான வருமானம் பெருக்கம் கூடுதலாகும். பெரும் தொகையாகவும் ஒதுக்கிக் கொள்ளவும் ஞாயமுண்டு. புதிய ஒப்பந் தங்களும் புதிய முயற்சிகள் வகையில் கூடுதலான ஆதாயமும் கிட்டிடும். சுயத்தொழில் செய்யும் படித்து பட்டம் பெற்ற பட்டதாரி களுக்கு முன்னேற்றமான அபிவிருத்தி உண்டாகும். மனைவியின் பெயரில் புதிய தொழில் உருவாக்கினால் நல்லது.

குடும்பாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியுமான ஸ்ரீகுருபகவான் களத்திர ஸ்தானத்தில் ராசியின் மேல் பிரமாதமாக சஞ்சரிப்பதாலே குடும்பத்தில் சுக சௌகர்யங்களும் சுபீட்சங் களும் அதிகரிச்சுடும். பணவசதியிலே தேவைக்கதிகமாக பணம் புழங்கும். கடன்கள் பைசலாகும். ஒளியைக்கண்ட இருள்போல் விலகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு – முக்கியத்துவமும் அதிகரிக்கும். மறைமுக வருமானங் ;களும் கூடுதலாகும். இனி வாழ்க்கையிலே மறுமலர்ச்சியான புதிய திருப்புமுனை ஏற்படும்.

மாணவர்களுக்கு – கடின உழைப்போடு கவனமும், அக்கறையும் கொண்டு படித்தால் உயர்படிப்பும், மேல்படிப்புக்கும் கூட பக்குவமாவார்கள் என்பதும் உறுதி.

வியாபாரிகளுக்கு – வியாபாரம் செழித்து விறுவிறுப்பாக நடப்பதோடு கணிசமான லாபகர மான வருமானப் பெருக்கமும் அதிகரித்திடும். அகலக்கால் வைக்க வேண்டாம்.

தொழிலாளர்களுக்கு – ஊக்கம் அதிகரித்து உழைப்பு சரியான வகையில் பயன்பட்டு இனிமேல் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

கலைஞர்களுக்கு – தைரியமும், தன்னம்பிக்கையும், தலையெடுக்கும். முயற்சிகள் மும்முரமாகும். புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்துப் போடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு – இப்போது நல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகள் எதிர்நோக்கியுள்ளன. பட்டம், பதவியெல்லாம் அவரவர் ஜாதகதுக்கு தக்கபடி கிடைக்கும்.

பெண்களுக்கு – வெளிப்பார்வைக்கு உங்களிடம் நல்ல மாறுதல் தெரியும். தோற்றத்தில் வசீகரமும், உள்ளத்தில் குளிர்ச்சியும் நிறைந்து பளிச்சென்று ஜொலிப்பீர்கள்.

ஸ்ரீகுருபகவானின் அருட்பார்வைகளினால் ஏற்படும் நன்மைகள்

ஸ்ரீ குரு பகவானின் குளிர் பார்வைகளில் ஒரு பார்வையான ஐந்தாம் பார்வை உங்கள் ராசிக்கு லாபஸ்தானமும் பதினொறாமிடமான கன்னியில் பதிவதால் பலவிதமான ஆதாயங் களும், பணவசதிகளும், வண்டி, வாகன வசதியும்; உண்டாகும். சிலர் புது வீடு கட்டவும் கூடும்.வம்பு,வழக்கு,வியாஜ்ஜியம்,கோர்ட் விவகாரங்களில் நன்மை கிட்டிடும்.

அடுத்ததாக ஸ்ரீ குரு பகவானின் மற்றொரு பார்வையான ஏழாம்பார்வை உங்க ளுடைய ஜென்ம ராசி விருச்சிகத்தில் மீது பதிவதால் உங்களுக்கு எந்த விதத்திலாவது முன்னேற்றத்தைக் கொடுக்கும். தடைப்பட்ட சுணக்கமான மணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். சிலருக்கு பாகப்பிரிவினையாகி தாய் தந்தை வழி பூர்வீகச் சொத்துக்கள் கிட்டிடும். வீடு, நிலம், வண்டி, வாகனம் போன்றவற்றில் சில பிரச்சினைகள் உண்டாகிடக்கூடும். இதனால் கவலையும் மனோவியாக்கூலமும் ஏற்படுதலுமுண்டாம்.

அடுத்ததாக ஸ்ரீ குருபகவானின் மற்றொரு பார்வையான ஒன்பதாம் பார்வை உங்கள் ராசிக்கு மூன்றாமிடமான மகரத்தில்; பதிவதால் தைரியம், தன்னம்பிக்கை, துணிச்சல், ஊக்கம், முயற்சியின் வேகம் கூடுதலாகும். முயற்சிக்கும் காரியங்களில் வெற்றி கிட்டிடும். பணவரவு, அடிப்படை வசதிகள், சுபீட்சம், சுபகாரியம், சந்தோஷம், கௌரவம் எல்லா அம்சங்களுமே அமையும்.பொதுவாக இவ்வளவுதான் ஸ்ரீகுருபகவானால் நன்மைகள் கிட்டிடும் என்று எல்லைகட்டிவிடமுடியாது. இந்த குரு மாறுதலால் உங்களுடைய சுகங்களும், சௌகர்யங்களும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நட்சத்திரப்பலன்கள்

விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு

பார்வையால் நல்ல பலன்களை கொடுக்கும் குருவின் ஆதிக்கம் பெற்ற விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் ஒரளவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நீடிக்கும். பண நெருக்கடி குறையும். சாதனையாகவும் சோதனையாகவும் இருக்கும். என்றாலும் நீங்கள் தொட்டது துலங்கும். விட்டதைப் பிடிக்கலாம். செய்தொழில் வியாபாரத்தில் ஏதாவது பிரச்னைகள் இருக்கவே செய்யும். எனினும் சமாளிக்கலாம். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

ஸ்ரீசனி பகவானின் ஆதிக்கம் பெற்ற அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் மிகவும் அனுகூலமாகவே இருக்கும். இழந்தவைகளை திரும்பப் பெற்று விடுவீர்கள். செய்தொழிலில் இதுவரை இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கிவிடும். உத்தியோகத்தில் பழைய நிலையை இடத்தை மீண்டும் தொட முடியும். இருந்தாலும் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். எதையும் ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்துசெய்வது நல்லது. எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.அவசர முடிவுகள் ஆபத்தையே தரும். குடும்பத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கலாம்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

கோட்டை கட்டுவதற்கும், கோட்டை விடுவதற்கும் இலக்காக இருக்கும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். மழை விட்டும் தூவானம் விடாத கதை நீடிக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சமயத்தில் கிடைக்காது.செய்தொழில் வியாபாரத்தில் உங்கள் சுதந்திரம் குறைந்து விட்ட மாதிரி இருக்கும். நிறைய லாபங்களை எதிர்பாhக்க முடியாது. உத்தியோகஸ்தர்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் இருக்கும்.பிரச்னைகளை சுலபமாகச் சமாளிப்பீர்கள்.ஆனால் பண நெருக்கடி இருக்காது. உங்கள் புத்தி சாதுர்யம் பன்மடங்கு பளிச்சிடும்.புதிய திட்டங்களை வெற்றிகரமாக அறிமுகப்படுத்துவீர்;கள்.

மாதவாரியாகப்பலன்கள்

மே-17-5-2012 முதல் 31-5-2012 வரை – நீங்கள் பலருக்கு தெரிந்த முகமாகிவிடுவீர்கள். செய்தொழில், வியாபாரம் மூலம் கணிசமாக பெருந்தொகை யாக அடைய வாய்ப்பிருக்கும். முயற்சிக்கும் காரியங்களில் துணிச்சலாக திட்ட மிட்டு எதிலும் ஈடுபட்டு வெற்றியை அடைவீர்கள். அரசாங்க ஆதரவும் கிட்டும். உத்தியோகஸ்தர் களுக்கு வசதிகள் அதிகரிக்கும். தற்காலிகமான வேலை நிரந்திரமாகும்.

ஜூன்-1-6-2012 முதல் 30-6-2012 வரை – இந்தக் காலக்கட்டம். நீங்கள் யோகக்காரர்தான். குருபலன் இருப்பதால் திருமண பிராப்தியும் உண்டு. தெளிவான திட்டங்களால் வெற்றி பெறுவீர்கள். கலைஞர்களும், அரசியல்வாதிகளும் வெற்றி பெறு வார்கள்.பழையகடன்கள் வசூலாகும்.கோர்ட்விவகாரங்கள் சுமூகமாக தீர்வுகாணும். உபரி வருமானமும் கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத வெளிநாட்டுப் பயணமும் கிட்டிடும்.

ஜூலை – 1-7-2012 முதல ;31-7-2012 வரை – இந்தக் காலக்கட்டம் செய்தொழில், வியாபாரத்துறையில் நல்ல முன்னேற்றம். கோர்ட் விவகாரங்களால் பணச்செலவு, சஞ்சலம், சங்கடம் நேரிடலாம். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சாதனை ஒரு பக்கம் இருந்தாலும் சோதனை இன்னொரு பக்கம் இருக்கத்தான் செய்யும். எந்த வம்பிலும் சிக்கிக் கொள்ளாதிருங்கள்.

ஆகஸ்ட்-1-8-2012 முதல் 31-8-2012 வரை- இந்தக்காலக்கட்டம் ஒரு சாதனைக் காலமாகவே இருக்கும். விரும்பியதை அடையலாம். விண்ணைத் தொடும் அளவிற்கு உயரலாம். உற்சாகம் கரைபுரண்டு ஓடுமளவிற்கு மகிழ்ச் சிகள் உங்களை நோக்கி வந்த வண்ணம் இருக்கும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடாதீர்கள். முயற்சிக்கும் காரியங்களில் வெற்றி, எண்ணியதெல்லாம் நிறைவேறும்.

செப்டம்பர்-1-9-2012 முதல் 30-9-2012 வரை- இந்தக் காலக்கட்டம் நீங்கள் எழுந்து நிற்கின்ற காலமிது. முயற்சிக்கும் காரியங்களும், திட்டமிட்ட காரியங்களும் உடனுக்குடன் நடைபெறலாம். செய்தொழில், வியாபாரத்தில் புதிய சாதனையைப் படைக்க விருக்கிறீர்கள். உத்தியோகத்திலுள்ளவர்களுக்கு சந்தோஷமான தகவல் வரும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புதிய மனிதர்களைச் சந்திப்பீர்கள்.

அக்டோபர் -1-10-2012 முதல் 31-10-2012 வரை – இந்தக்காலக்கட்டம் அற்புத மான காலம். மற்றவர்கள் பெருமையும், பொறாமையும் படுகிற அளவுக்கு உங்கள் செல்வாக்கு, சொல்வாக்கு அந்தஸ்து உயர்ந்து விடும். செய்தொழில், வியாபாரத்தில் மேலும் முன்னேற்றம் இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர் களுக்கு விரும்பிய மாறுதல்கள் கிடைக்கும்.அதிகமாக வருமானம் புரண்டுக்கொண்டிருக்கும்.

நவம்பர் 1-11-2012 முதல் 30-11-2012 வரை – இந்தக் காலக்கட்டம் முயற்சிக்கும் காரியங்களில் அபரிமிதமான வெற்றி உண்டாகும். தைரியம், தன்னம்பிக்கை, ஊக்கம், திடச்சிந்தனை, அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் நடக்கும். பணவசதி, சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து சம்பந்தமான வகையிலும் ஆதாயம் அதிகமாக கிடைக்கும்.

டிசம்பர் -1-12-2012 முதல் 31-12-2012 வரை – இந்தக்காலக்கட்டம் திருமண ஏற்பாடுகள் சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும்.நீங்கள் எதிர்பார்த்தது, திட்டமிட்டது எல்லாம் நடக்கும். கொடுக்கல், வாங்கல் லாபகரமாக நேர்மையாக நடைபெறும். இன்ப அதிர்ச்சியொன்றும் இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல், சிரமங்கள் விலகி அனுகூலமும், பாகப்பிரிவினையால் லாபமும் கிட்டிடும்.

ஜனவரி -1-1-2013 முதல் 31-1-2013 வரை- இக்காலக்கட்டங்களில் சாதனை ஒரு பக்கமும், சோதனை இன்னொரு பக்கமும் இருந்திடக்கூடும். எந்த வம்பிலும் சிக்கிக் கொள்ளாதிருங்கள். நீங்கள் அதிகம் நம்புகிறவர்களே உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். செய்தொழில், வியாபாரம், சிறிது மந்தமாகத்தான் நடைபெறும். இதற்கு சோர்ந்து போய்விடக் கூடாது. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்தால்போதும்.

பிப்ரவரி -1-2-2013முதல் 28-2-2013 வரை – இந்தக்காலக்கட்டம் முன்னேற்ற மாகவும்,சுறுசுறுப்பாகவும் இருக்கும்.எதிர்பார்த்த பணிகள் நடக்கும்.செய்தொழில், வியாபா ரத்தில் அபிவிருத்தியும், வருமானமும் கைகூடும். சுபசெலவுகளும், குடும்பத்தில் மங் களகரமான சுபகாரியங்கள் சந்தோஷமான சம்பவங்களும் நடக்கும். வருமானப் பெருக்கமும் பொருளாதார வசதி உயர்வோடு மேன்மையும் உண்டாகும்.

மார்ச்-1-3-2013 முதல் 31-3-2013வரை – இக்காலக் கட்டத்தில் ஓரளவு சாதகமாகவும், அனுகூலமாகவும் இருக்கும். தவறுகளைக் கண்டு பிடித்து விடுவீர்கள். இதன் மூலம் செய்தொழில், வியாபாரத்தில் ஓரளவு இருந்து வந்த மந்த நிலை நீங்கிப் புது சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்து வந்த வீண் பழிகள் விலகும். விட்டதைப் பிடிப்பதற்கான வழிவகைகள் புலப்படும்.

ஏப்ரல் 1-4-2013 முதல் 30-4-2013 வரை- இக்காலக்கட்டத்தில் பழைய பிரச்னைகளோடு புதிய குழப்பங்கள், குளறுபடிகள் வரும். இதனால் தேவையில்லாமல் குழம்பிக் கொண்டிருப்பீர்கள். செய்தொழில், வியாபாரத்தில் சிறிது மந்த நிலை இருந்தாலும் சீராகவே நடக்கும். போட்டி, பொறாமை, எதிர்ப்புகளை சமாளித் துத்தான் ஆகவேண்டும். குடும்பத்தில் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் மன நிம்மதியை கெடுத்துவிடும்.

மே 1-5-2013 முதல் மே 27-5-2013 வரை- இந்த காலக்கட்டத்தில் தெய்வபக்தி மேலோங்கும் ஆன்மீக விவகாரங்களில் ஈடுபடுவீர்கள். உபரியான வருமானத்தை இதற்காக செலவு செய்வீர்கள். மனதில் நிம்மதியும் குடும்ப வாழ்வு சந்தோஷமாகவும் அமையும். பணவசதியில் சகல சௌகர்யங்களும் கூடும்.தடைபட்ட திருமணங்கள் கைகூடும். வெளிநாடு பயணமும் உண்டு.

மொத்தத்தில் இந்த ஏழாமிடத்து ஸ்ரீகுரு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு ஏற்றமாகவும், வளமாகவும், நன்மைதரும் மாற்றமாகவும் தான் இருக்கும். அதிர்ஷ்டக் ;காற்று உங்கள் பக்கம் எக்கச்சக்கமாக வீசும். இதனால் ஒரு ராஜகம்பீரவாழ்க்கை அனுபவிக்க ராஜபாட்டை அமைத்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து வெற்றி மீது வெற்றி கனிகள் குவிப்பீர்கள். இனி அடுத்து வரும் ஸ்ரீகுருபகவான் ராசி மாறும் காலம். உங்களை சிந்திக்கவைப்பதாகவே இருக்கும். இப்போது அற்புதமான பலன்களைக் கொடுக்கிற ஸ்ரீகுருபகவான் பின்னால் கொடுப்பாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

குரு வாழ்க! குருவே துணை!![rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: