எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – துலாம்

விளம்பரங்கள்

[rps]

Thulam Rassi logo

பிற ராசிகளுக்கு
1. குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்
2. குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்
3. குருபெயர்ச்சி பலன் 2012 – மிதுனம்
4. குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்
5. குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்
6. குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி
7. குருபெயர்ச்சி பலன் 2012 – விருச்சிகம்
8. குருபெயர்ச்சி பலன் 2012 – தனுசு
9. குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்
10. குருபெயர்ச்சி பலன் 2012 – கும்பம்


பேரன்புள்ள துலாம் ராசி அன்பர்களே! வணக்கம்!! வாழிநலம்!!!

நவக்கிரகங்களில் அசுரகுரு என்றழைக்கப்படும் ஸ்ரீசுக்ரபகவானை ஆட்சி கிரக மாகவும், வீடாகவும், ராசியாதிபதியாகவும் அமையப்பெற்ற உங்கள் ராசிக்கு 3,6 க்குடைய தைர்ய வெற்றிஸ்தானாதிபதியும்,சகோதரஸ்தானாதிபதியுமான ருணரோக சத்ருஸ்தானா திபதியும் தனாதிபதியுமான ஸ்ரீகுருபகவான் இதுவரையில் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி உங்கள் ராசிக்கு களத்திரஸ்தானமும் ஏழாமிடமுமான மேஷராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இவர் ஸ்வஸ்;திஸ்ரீ ஸ்ரீநந்தன நாம ஆண்டு வைகாசி மாதம் 4ஆம்தேதி ஆங்கிலம் மேமாதம் 17ஆம் தேதி 2012 ஆம்ஆண்டு (17-5-2012) வியாழக்கிழமை அன்று மாலை 6-18 மணியளவில் பெயர்ச்சியாகி ராசிமாறி உங்கள் ராசிக்கு அஷ்டமஸ்தானமும் எட்டாமிடமுமான ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து 27-5-2013 ஆண்டு வரை ஒராண்டு காலம் அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.

குணநலன்கள்

உங்கள் ராசிநாதனாக சுக்ரன் விளங்குவதால், எல்லாவிதமான சுகங்களையும் நீங்கள் அனுபவிக்க ஆசைப்படுவீர்கள். அறிமுகமானவர்கள் மட்டுமல்லாமல், அறிமுகமில்லாதவர் கள் கூட உங்களிடம் நெருங்கிப் பழக துடிப்பார்கள். காரணம், உங்கள் அணுகுமுறை மற்றவர்களை கவருவது தான்.சுக்ர பலம் பெற்ற மனைவி உங்களுக்கு வாய்க்கும் பொழுது தான், வாழ்க்கையில் சந்தோஷங்களை மட்டுமே நீங்கள் சந்திக்க முடிகிறது.நீதிக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் பாதிக்கும் பொழுது மட்டுமே பயபக்தியோடு சாமி கும்பிடுவீர்கள். அந்த வழிபாட்டில் அதிக கவனம் செலுத்தினால் தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.

விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பும் நீங்கள், எதிர்நீச்சல் போட்டு பழகியவர்கள். அருவி நீர்போல அதிர்ந்து பேசாமல் பனித் துளிபோல பாசமாய் பேசுவீர்கள். உரியவர்களை, உரிய நேரத்தில் உரிய விதத்தில் பயன்படுத்திக் கொள்பவர்கள் நீங்கள். முன்னோர்களை பற்றி பெருமையாக அடிக்கடி சொல்வீர்கள். தாராள குணமும் இருக்கும். தக்க சமயத்தில் சிக்கனத்தையும் கையாண்டு சிறப்படைவீர்கள். நட்பு வட்டம் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். நாகரீக மோகத்தில் லயித்து நாளும் உடை அலங்காரங்களை மாற்றுவதில் உங்களுக்கு இணை யாருமில்லை என்றே சொல்லலாம்.எனவே எதிலும் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட்டால் தான் வெற்றிகளை எளிதில் சமாளிக்க முடியும்.

சிறு வயதில் இருந்தே தெய்வீக சிந்தனை, பக்தி மார்க்கம், பழங்கால நிகழ்வுகளை ஒடிச்சென்று தெரிந்து கொள்வது, படித்து உணர்வது என்ற ஆர்வம் மிக்கவராக வளர்ந்து வந்து கொண்டு இருப்பவர்களே!

பொதுப்பலன்கள்

எட்டில் குரு வந்தால் எண்ணற்ற மாற்றம் வரும்
தொட்டு வரும் விரயங்கள் தொடர்கதையாய் மாறிவிடும்
வளமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கும் ராகு-கேது
ஜென்மசனி காலம் வாழ்வில் சிரமமும், வசந்தமும் கலந்தே இருக்கும்.

இந்த குருப்பெயர்ச்சியில் ராகு, கேது, சனி, குரு ஆகிய நான்கு முக்கிய கிரகங்களும் உங்கள் ராசிக்குசெயல்படப் போகிறார். மே17ந் தேதிக்குப் பிறகு குரு எட்டாமிடத்தில் அஷ்டமத்து குருவாக சஞ்சரித்தாலும் சனி ஜென்மச் சனியாக இருந்தாலும் விபரீத ராஜயோக அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுக் கதவை தட்டும். மண்ணைக் கூட கயிறாய் திரிக்கும் ஆற்றல் படைத்த உங்களுக்கு இது போதாதா நீங்கள் வாழ்வில் முன்னேற.இதுவரை களத்திர ஸ்தானமெனும் ஏழாமிடத்திலிருந்த ஸ்ரீகுருபகவான் இப்போது ஏடாகூடமான எட்டாமிடத்திற்கு வந்திருக்கிறார். எந்த இடத்திலிருந்தாலும் அளவுக்கதிகமான கெடுபலன்களைச் செய்ய முடியாதவரான குருவுக்கு எட்டாமிடத்தில் மட்டும் கைகள் கட்டுப் போட்ட மாதிரி இருக்கும்.

ஸ்ரீ குருபகவான் எட்டாமிடமும்,அஷ்டம ஸ்தானமுமான ரிஷப ராசியில் சஞ்சரிப்பது சரியில்லை. அது உகந்த இடமுமல்ல இதனால் கஷ்டங்களையும்-நஷ்டங்களையும் கொடுப்பவர் என்று கேள்விப்பட்டால் மனதுக்கு, சஞ்சலமும், சங்கடமும் ஏற்படாதா? பொதுவிதியின்படி பார்த்தால் இப்படி எட்டாமிடத்துலே ஸ்ரீ குருபகவான் சஞ்சரிப்பதைப்பற்றி யாருமே நல்ல விதமாகப்பலன்கள் சொல்லுவதில்லை. எட்டாமிடமென்பது குருவுக்கு உகந்த இடமல்லை என்று தான் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இக்காலம் எதிர்காலத்தைப் பற்றிய பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கும். உள்ளுக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் வெளிப் பார்வைக்கு உயர்ந்தவர்களாகத் தெரிந்த நீங்கள் இனி ஒரு படி கீழே இறங்கி விடுவீர்கள். ஆனால் எழுந்திருக்க முடியாத அளவுக்கு விழ மாட்டீர்கள் என்பதும் உண்மை. அதைச் செய்யலாம். இதைச் செய்யலாம் என்று நிறைய திட்டங்களை வைத்த்ருந்த நீங்கள் அவையாவும் கறிக்கு உதவாத ஏட்டுக் சுரைக்காயாக இருப்பதை உணர்வீர்கள். பண நெருக்கடி அதிகரித்து விடும். வரவேண்டியதைக் கேட்க முடியாது. கொடுக்க வேண்டியதை இழுத்தடிக்க முடியாத சூழ்நிலை உருவாகலாம். கவரிமான் மாதிரி இருந்த நீங்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். எட்டாமிடக் குரு ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் போல தெரிகிறதே என்று கவலைப்படுகிறவர்களுக்கு மட்டும் ஆறுதலாக ஒரு வார்த்தை நீங்கள் தெய்வ பலம் மிக்கவர்கள் என்பதால் எந்த பிரச்னையும் உங்களை அதிகமாக பாதிக்காது. உங்கள் சகஜ வாழ்க்கை எப்போதும் போலத்தான் இருக்கும்.

ஸ்ரீ சனி பகவானின் சஞ்சார நிலவரம்

முக்கிய கிரகங்களின் சஞ்சாரநிலவரத்தை அனுசரித்துப் பார்க்கையில் உங்கள் ராசிக்கு 4,5 ஆகிய இடங்களுக்கு அதிபதியும்,சுகாதிபதியும்,பூர்வபுண்ணியாதிபதியுமான ஸ்ரீ சனி பகவான்இப்போது உங்கள் ஜென்ம ராசிக்கு தொடர்ந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது ஏழரைச் சனியின் காலக் கட்டத்தில் நடுப்பகுதியாகிய ஜென்ம ராசியில் ஸ்ரீ சனி பகவான் சஞ்சரித்தாலும் பொதுவாகவே ஜென்ம சனியைப் பற்றி ஜோதிட சாஸ்திரங்களில் உயர்வாகவோ சிறப்பாகவோ சொல்லவில்லை என்பது உண்மைதான்.சென்மம் என்று சொல்லப்படுகிற ஜென்ம ராசியில் ஸ்ரீ சனி பகவான் சஞ்சரிக்கும் போது கெடு பலன்கள் தான் என்று ஜோதிட சாஸ்திரங்களும் ஜோதிட சுவடிகளும் கூறுகின்றது. ஜோதிடக் களஞ்சியம் கூறும் பாடலைக் கீழே காண்போம்.

காரிதான் இரண்டைத் தெட்டேழ் கண்டம் ஈராறு சென்மம்
கூரியகை கால் வாதம் கொடுமைதான் அதிகமாகும்
சீரிய தலையில் பாரம் சினத்த சூனியம் போல் அச்சம்
பாரியயுத்தம் நோவாம் பகைத்திடும் முனிவர் குற்றம்

பொதுவாகவே ஏழரைச் சனியால் ஜென்மச் சனியின் சஞ்சார காலங்களில் இந்த ராசியினருக்கு ஏற்படும் சௌகரிய குறைகள், செயல் சிரமங்களும் அதிகரிப்பதை சாதுர்யமாக சந்தித்து சமாளித்து தான் ஆக வேண்டும். ஆனால் சஞ்சாரங்கள் சங்கடங்களைச் சமாளிக்கவும், முறியடிக்கவும் பக்கபலமாவும், உறுதுணையாகவும் இருக்கும். எனவே கவலைப்படுவதை விட்டுவிட்டு, மனோவியாக் கூலத்தை துரத்திவிட்டு – கடமைகளையும் காரியங்களையும் கவனித்து செய்து கொண்டு வருவது நல்லது. தெய்வ பக்தியும் தன்னம்பிக்கையோடு கூடிய அயராத உழைப்பும் துன்பம் துயரங்களைத் தூள் பரத்தி அடிப்பதற்கு துணையாக இருக்கும்.

இரவி ஐந்தாமிடத்தும் திங்களெட்டும்
மிக்க சனி ஜென்மத்தும் இ…
திரமுடனே இத்தலங்கள் சேருமாகில்
சிறை காவல் வெகுரோகம் சிலுகு சண்டை
உரைத் திடுமானச் சேதம் மரணச்சேதம்.
உற்ற பலம் ஆகாதென்று உரைக்கலாமே

என்ற தனிப்பாடலில் சனி ஜென்மத்தில் வரும் போது சிறை காவல், வெகு ரோகம், சண்டைச் சச்சரவுகள், மரண பயம் மூன்றும் சற்று ஏழரைச் சனியாகி ஆயுள் நிர்ணயப்படி மாரக தெசையும்; நடந்தால் மரணபயமும், மற்றவர்களுக்கு அதற்கு ஒப்பான வியாதி, உடல் நலக்குறைவு, தீமையும் கலந்த எல்லாம் ஆகாத பலன்களாகவே நடக்கும்.

ஸ்ரீராகு-கேது பகவான்களின் சஞ்சார நிலவரம்

மேலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான பாம்பு கிரகங்களான நிழல் கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடமும், தன, குடும்ப வாக்குஸ்தானமுமான விருச்சிக ராசியிலும், ஞானகாரகனான ஸ்ரீ கேது பகவான் உங்கள் ராசிக்கு அஸ்டமஸ்தானமும், எட்டாமிடமுமான ரிஷப ராசியில் தொடர்ந்து சஞ்சாரம் செய்கிறார்கள்.

இந்த ராகு கேது சஞ்சாரத்தினால் அதிக அளவில் அனுகூலங்கள் இல்லை என்றே தான் சொல்ல வேண்டும். இல்லாத டென்ஷன் எதை தொட்டாலும் தோல்வி என இருந்திடக் கூடும். எனவே சிரித்துப் பேசி பழகுங்கள். ஜீவனம் சம்பந்தப்பட்ட செய்தொழில், வியாபாரத்தை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள். எந்தவித புது முயற்சியும்; வேண்டாம். நடப்பதெல்லாம் நல்லதுகென்றே நினையுங்கள். நீங்கள் ஆண்டவனை முழுவதுமான நம்பினால் ஏறுமுகம் தான்.

வாக்கிய பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் கார்த்திகை மாதம் 17ஆம்தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 2ஆம்தேதி 2012 ஆம் ஆண்டு (2-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10-53மணியளவில்; ஸ்ரீ ராகுபகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி துலாம் ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் பெயர்ச்சியாகி ராசிமாறி மேஷ ராசிக்கும் 11-31 நாழிகைக்குள் பிரவேசித்து ஒன்றை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் மார்கழி மாதம் 8ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீராகுபகவானும்,அதேநேரம் ஸ்ரீகேது பகவானும் பெயர்ச்சியாகி ராசி மாறி முறையே துலாம் ராசிக்கும், மேஷ ராசிக்கும் பிரவேசித்து ஒன்னரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

உங்கள் ராசி ராகுவுக்கு, நேர் எதிரான ஏழாமிடத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். ஜென்ம ராகுவும் சரி, 7மிட கேதுவும் சரி, உங்களுக்கு எந்த நன்மைகளையும் செய்ய முடியாது தான். வேறு எதையும் ஒரு மனதான முடிவு எடுத்துச் செய்ய முடியாது. இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமாக இல்லை,அனுசரனையாகவும் இல்லை, ஆதரவாகவும் இல்லை. அதனால் எங்கும் எதிலும் கவனமும், பொறுமையும், நிதானமும் எச்சரிக்கையும் தேவை. இந்த ராகு கேது பெயர்ச்சியினால் இந்த ராசி நேயர்களுக்கு அசுப பலன்களே அதிகரித்திட ஞாயமுண்டு. எனவே இந்த காலகட்டத்திலே எதிலேயும் மிகவும் எச்சரிக்கையான செயல்பாடு அவசியமாகும். உடல் நலமும் அவசியம் கவலைப்ப பட வேண்டியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் இருபஞ்சாங்கங்களின் சித்தாந்தப்படி இந்த ராகு கேது பெயர்ச்சி டோட்டலாக சரிஇல்லை என்று கூறி விட முடியாது. திறந்த கதவு காற்று முந்தித்தள்ளி மீண்டும் மூடிக் கொள்கிற மாதிரியான ஒரு நிலை தான். ஆனால் கதவு பூட்டப்படவில்லை. மூடித் திறந்துக் கொண்டிருக்கும் அதுவரை பொறுமையாக இருந்தால் பீனிக்ஸ் பறவை மாதிரி நீங்கள் மீண்டும் எழுந்து நிற்கலாம். சாதனைகளும், சோதனைகளும் சரிசமமாக இருக்கும்.

ஸ்ரீ குருபகவானின் சஞ்சார நிலவரம்

இதுவரை இருந்த இடத்தை விட்டு ஸ்ரீ குருபகவான் புது இடத்திற்கு மாறலாமா? என்று சிந்தித்துக் கொண்டிருந்த உங்களுக்கு மாற்றமடையும். குருவால் திடீர் மாற்றங்கள் உருவாகும்.அஷ்டமஸ்தானமான எட்டாமிடத்தில் ராசிமாறி உச்சபலத்துடன் ரிஷபராசியில் சஞ்சரிப்பதால் இனி உங்களுக்கு அஷ்டம குருவின் காலமாகும். தேவையில்லாமல் சிந்திக்க – மனோவியாக்கூலம், கவலை, கலக்கம் உண்டாக்கி கூடியவரை டென்ஷனாக்குவார். எட்டாமிட குருவா? கெட்டுப் போச்சு குடி. இப்படி உங்களை யாராவது பயமுறுத்து கிறார்களா? பயப்படா தீர்கள். காரணம் என்ன தெரியுமா? சாதாரணமாக எந்த இடத்திலிருந்தாலும் அளவுக்கு அதிகமான கெடுபலன்களைச் செய்யமுடியாதவரான குரு இப்போது எட்டாமிடத்திலும் எதையும் செய்ய மாட்டார்.பொதுவாக அதிருப்தியான பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். பண விஷயங்களில் அக்கறையாகவும், கவனமாகவும், எச்சரிக்கையாகவும், இருந்துக் கொள்ள வேண்டியது அவசியம். கொடுக்கல், வாங்கலில் சிக்கல், சிரமம், குழப்பம், குளறுபடி, தடை ஏற்படும். குறித்த நேரத்தில் எதையும் செய்து முடிக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தில் குதர்க்கம் குழப்பமான பிரச்சினைகள் ஊடுருவி இருக்கும்.குடும்ப அமைதி கெடும். மனத்தில் நிம்மதி இராது. இருந்து வரும் அடிப்படையான வசதி வாய்ப்புகளைக் கொண்டு அடுத்தடுத்து நேரிடும் இக்கட்டு இடைஞ்சல்கள் பிரச்சினைகள் சமாளித்துக் கொண்டு வரலாம். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் ஏற்படலாம். அதேநேரம் வீண்பழிகளிலிருந்து விடுபட விழிப்புணர்ச்சி தேவை.

ஜோதிட சாஸ்திரங்களும்-ஜோதிடச் சுவடிகளும்

அஷ்டமராசியில் சஞ்சரிக்கும் குருவைப் பற்றி பெரியவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று முதலில் பார்ப்போம்.மார்க்க கிலேசம் அரிஷ்டம் அஷ்டமதே என்று மகான் மந்திரேஸ்வரர் அருள்வாக்கு கூறியிருக்கிறார். எட்டாமிடத்தில் குரு சஞ்சரிக்கும்போது வழிப்பயணத்தில் சஞ்சலங்களும், சங்கடங்களும் உண்டாகும் என்பதே இதன் கருத்து. மார்க்கம் என்கிற சொல் பயணம் என்பதை மட்டுமில்லாமல் பொது வாழ்க் கையின் வழி, செயல்முறைகளின் தத்துவ வழி தவறெல்லாம் கூட அர்த்தமாகும். இந்த வழிகளிளெல்லாம் பிரச்சினைகள் ஏற்படும்.

புலிப்பாணி முனிவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

நாடப்பஜென்மனுக்குநமனால் கண்டம்நலம்தப்பும்பொருள்சேதம்அரசர் தோஷம்
வீடப்பா வேதியனும் மதிக்குஎட்டில் விளங்கவே வெகுபயமாம் விளைவு போமே

இதன் பொருள் உங்கள் ஜெனன ஜாதகத்தில் பிறவி அமைப்பாக வாழ்ந்திருக்க வேண்டும் என்கிற அடிப்படையான விதியின் தீர்மானத்தை எட்டில் குரு வருவது எட்டில் ராகு கேது வருவது முதலான எந்த கோட்சார கிரக நில வரமும் ஒரு போதும் மாற்றிவிட முடியாது. கண்டம் என்றால் நோய் நொடி யிலிருந்து குணமாவது, விபத்தில் சிக்க இருந்து தப்பித்துக் கொள்வது, ஒரு சிலருக்கு இருப்போமோ, சாவோமா என்ற அளவுக்கு கடுமையான கஷ்ட நஷ்டங்கள் நேருவது, பெரும்பாலானவர்களுக்கு என்ன வாழ்க்கை இது என்று விரக்தியும் சலிப்பும் ஏற்படுவது இயற்கை.

ஓங்கவே குருவேதான் ஒன்று மூன்று உகந்தநாலாறெட்டுப் பத்து ஈராறில்
தீங்காக நின்றிடிலோ பலனைக்கேளு தேடியபொருள்பூமி சேதமாகும்
வாங்கவே அகத்தினிலே அலைச்சலோடு வாதபித்த ரோகமது வந்துவாட்டும்
தாங்கவே தந்தையொடு புத்திரர்க்கும் தேடிவரும் தீமையது இடர் உண்டாமே

– என்று கோட்சார சிந்தாமணியும், திகிலும், திக்பிரமையும் ஏற்படும்படி பாடி இருக்கிறது. இன்மை எட்டினிலே வாலி பட்டம் இழந்து போம் படியானதும்-என்ற பழம்பெரும் பாடல்வரிகூட.ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் ஸ்ரீகுருபகவான் சஞ்சரிக்கும் போது தான் வாலி வதைப்பட்டு பட்டம் இழந்தான். இராமா யணத்தில் சுந்தரகாண்டம் புராணக்கதையைச் சொல்கிறது என்ற கவலையைத் தான் கிளறிவிடுகிறது.

மேற்கண்ட ஜோதிடப்பாடலின்படி வாலி தனது ராஜ்யத்தை இழந்தபோது குரு எட்டாமிடத்தில் இருந்தாராம். இந்தக் காலத்தில் ராஜாக்கள் ஏது? நீங்கள் மந்திரியா? அரசியல்வாதியா?அரசாங்க உயர்பதவியில் இருப்பவரா? மதகுருவா? ஆன்மீகவாதியா? சங்கத்தலைவரா? நாட்டாமையா? – அப்படியானால் இந்த காலத்தில் உங்கள் பதவியை அசைத்துப் பார்க்க சிலர் முயற்சிக்கலாம். ஆனால் நீங்கள் விழுந்துவிட மாட்டீர்கள்.

எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் முயற்சிக்கும் காரியங்களில் ஒன்றும் மோசமாகி விடாது. இன்னும் சொன்னால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல் குருட்டு அதிர்ஷ்டம் அடித்திடும் யோகமும் சாதகமாக இருப்பதால் எதிர்பாராமல் ஏற்படும் கெடுபலன்கள் குறைந்திடவும் ஞாயமுண்டு.

பொருளாதார நிலையில் சிறப்பாக உயர்ந்துக் கொண்டிருப்பீர்கள். வருமானம் கணிசமாக பெருகிக் கொண்டே இருக்கும். பணவசதியோடு செலவும் சரளமாகவும், தாராளமாகவும் இருந்து வரும். வராமல் போன முடக்கமான எதிர்பார்த்த எதிர்பாராத வகையில் எல்லாம் பணம் கிட்டிடும். இதனால் மற்றவர்களுக்கு தேவையில்லாமல் வாக்கு கொடுப்பதோ, சிபாரிசு செய்வதோ, ஜாமீன் கொடுப்பதோ, சாட்சி சொல்வது போன்றவை களிலிருந்து ஒதுங்கிக் கொள்வது நல்லது.

செய்தொழில் ஜீவன சம்பந்தப்பட்ட வகையில் எதுவானாலும் சிறப்பான கூடுதலான லாபகரமான வருமானப் பெருக்கத்துடன் நடைபெறும். பதமாகவும், இதமாகவும் வார்த்தை ஜாலங்களில் அழகாக பேசியே அடுத்தவர்களை அசத்தி வருவீர்கள். அலாதியான திறமையைப் பயன்படுத்தி பேரத்தை படியவைத்து கணிசமான ஆதாயம் அடைவீர்கள். பணரொட்டேஷன் பிரமாதமாகவும், தாராளமாகவும் இருப்பதே விசேஷம்.

குடும்பத்தில் சுபீட்சமும், செழிப்பும், இருந்தாலும் குதர்க்கமும், குளறுபடியும் குழப்பமாகி பிரச்சினையாக உருவெடுக்கும். இதனால் குடும்பத்தில் அமைதியும், மனத்தில் நிம்மதியும் கெடவும் கூடும். கணவன், மனைவி உறவிலே கலகலப்புக்குப் பதில் சலசலப்பும் இருந்திடும். எட்டாமிடம் மாங்கல்யஸ்தானம் என்பதால் அங்கு குருபலம் பெறுவதால் பெண்களுக்கு கல்யாண யோகம் அடிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:- நிலையற்ற மனப்போக்கில் நிம்மதி குறைவு ஏற் படுவது தவிர்க்க முடியாது. சிலருக்கு வரவேண்டிய பதவி உயர்வு தள்ளிப் போகும்.

மாணவர்களுக்கு:- கல்வியில் அதிக கவனமும் அக்கறையும் செலத்துதல் வேண்டும். அனாவசியமான விஷயங்களில் ஈடுபடுவதால் சோடை போகவும் கூடும்.

வியாபாரிகளுக்கு:- வியாபாரம் செழித்து பண வரவும் புதிய வாய்ப்புகளும் கிட்டிடும்பணரொட்டேஷனில் தேக்கமும், பிரச்னைகளும் இனிமேல் நீடிக்காது.

தொழிலாளர்களுக்கு:- எந்த வேலையையும் கவனமுடன் எச்சரிக்கையுடன் நிதானத்தை கடைபிடிப்பதால் பணியில் பெரிய தவறுகள் வராது.

கலைஞர்களுக்கு:- உங்கள் திறமை பிரகாசிக்கும். பொதுவாக அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதாலே பேச்சாற்றலில் பேரும்,புகழும் சாமர்த்தியமும், சாதுர்யமும் புலப்படும்.

அரசியல்வாதிகளுக்கு:- இன்றைய சூழ்நிலையில் அரசியல் நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. பதவி பெறும் எண்ணத்தில் சிக்கனம் தேவை.

பெண்களுக்கு:- பொறுப்புகளோடு, போராட வேண்டியிருக்கும். பொறுமையும், நிதானமும், எங்கும் எதிலும் தேவை. சிரமப்பட்டுத்தான் சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.

ஸ்ரீகுருபகவானின் அருட்பார்வைகளினால் ஏற்படும் நன்மைகள்

ஸ்ரீ குருபகவானின் அருள் பார்வைகளில் ஒரு பார்வையான ஐந்தாம் பார்வை உங்கள் ராசியில் பன்னிரெண்டாமிடமும் விரய ஸ்தானமுமான கன்னியில் பதிவதால் வெளியூர் பயணம், சுபகாரிய முயற்சிகளில் விருந்து விசேஷம் போன்றவைகளில் பங்கு கொள்வீர்கள். இதுவரை இருந்து வந்த சுணக்கமான முக்கிய பிரச்சினைகள் தீர்வுகாணும்.சிலருக்கு கடன் தொல்லைகள் குறையும். உடன்பிறந்தவர்களுக்கு சுபகாரியம், திருமணம் போன்றவை அவரவர் வயதுக்கேற்ப நடைபெறும். செய்தொழில் ;எதுவானாலும் மந்த நிலை மாறி அபிவிருத்தியுடன் வருமானப் பெருக்கத்துடன் நடக்கும்.

ஸ்ரீ குரு பகவானின் இன்னொரு அருள் பார்வையான ஏழாம் பார்வை உங்கள் ராசியின் தன குடும்பவாக்குஸ்தானமும் இரண்டாமிடமுமான விருச்சிகத்தில்; பதிவதால் குறிப்பாக பல நன்மைகள் உண்டாகும். முயற்சிக்கும் காரியங்களிலே துணிச்சல், தன்னம் பிக்கை, ஊக்கம், அதிகரிக்கும். பேச்சு வார்த்தைகளால் தடைப்பட்ட சுணக்கமான காரியங்களில் மனஸ்தாபம் மறந்து சமரசம் மூலம் தீர்;வு உண்டாகும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பணத்தைப் புரட்டிக் கொள்ளவும் இந்த குரு பார்வை பெரும் அளவில் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருந்திடவும் ஞாயமுண்டு.

அடுத்ததாக ஸ்ரீ குருபகவானின் இன்னொரு அருள் பார்வையான ஒன்பதாம் பார்வை உங்கள் ராசியான சுகஸ்தானமும் நாலாமிடமுமான மகரத்தில் பார்ப்பதால் உங்களு டைய அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். உத்தியோகம், தொழில் துறைகளில் பதவி உயர்வும் உண்டாகும். முயற்சிக்கும் காரியங்களில் வெற்றி கிட்டிடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வீடுமாற்றம் செய்து வசதியாக வாழ்ந்திடவும் கூடும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வர்களுக்கு செல்வாக்கும், சொல்வாக்குடன் பொருளாதார வசதியும் உயரும். வெட்டித்தனமான செலவின ங்களைக் குறைத்து அவசியத் தேவைகளை மனதில் கொண்டு சிக்கனம் கடைபிடிப்பது நல்லது.

நட்சத்திரப்பலன்கள்

சித்திரை நட்சத்திரம் 3,4 பாதங்களில் பிறந்தவர்களுக்கு

செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் ஒரளவு பயனுள்ளதாக இருக்கும். உங்களை சிந்திக்க வைக்கும். நல்லதையே நினைப்பீர்;கள். செய்வீர்கள். ஒரளவு யோகத்தைத் தருவதாகவே அமைகிறது. நடக்கவே நடக்காது என்று நினைத்திருந்த விவகாரங்கள் தானாகவே நடக்கும். உங்கள் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். செய்தொழில், வியாபாரத்த்ல் சிறு திருப்பங்கள் இருக்கும். குடும்பத்தில் திருமணப் பேச்சு வார்த்தைகள் நடக்கும். தெளிவாகவே இருக்கும். பிடிபடாதிருந்த பல விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

ராகுவின் ஆதிக்கம் பெற்ற சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில்; மீண்டும் உங்களை நிமிர்ந்து நிற்கச் செய்யும். இழந்தைவைகள் திரும்பக் கிடைக்கும். செய்தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் அகலும். சீர்;திருத்தம் செய்யபுதிய ஐடியாக்கள் உருவாகும்.வருமானம் அதிகரிக்கும்.உத்தியோகத்தில் பெரிய தலைவலி தீர்;ந்துவிடும்.இடமாறுதல்கள் கிடைக்கும்.எண்ணியது கைகூடும். சந்தோஷ சம்பவங்கள் நடக்கும். மனக் குழப்பங்கள் குறையும். நல்லவர்கள் உங்களைச் சுற்றி இருப்பார்கள். குடும்பக்குழப்பங்களும் குறைந்துவிடும்.தடைப்பட்ட திருமணப்பேச்சு வார்த்தைகள் மீண்டும் துவங்கும்.விலகிப் போனவர்கள் விரும்பி வருவார்கள்.

விசாகம் நட்சத்திரம் 1, 2, 3-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு

வெற்றிப்படிகட்டின் விளிம்பில் ஏற வைக்கும் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி சோதனையாகத்தான் இருக்குமென்றாலும் சமாளிக்கின்ற வழிவகைகள் தெரியும்.சிறிது ஆறுதலாக இருக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்க்கின்ற உதவிகள் கிடைக்கும். செய்தொழில், வியாபாரம் சீராக நடக்கும். நீச சம்மந்தம் மட்டும் வேண்டாம் உத்தியோகத்தில் சிறிய அளவில் மாறுதல்கள் இருக்கும். சம்பள உயர்வுகள் கிடைக்கும். துரோகிகள் தானாகவே விலகுவார்கள். சுய தொழில் முயற்சி கை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். புதிய வரவொன்றை எதிர்பார்க்கலாம். அது பயனுள்ளதாகவே இருக்கும்.

மாதவாரியாகப்பலன்கள்

மே-17-5-2012 முதல் 31-5-2012 வரை – இந்தக்காலக்கட்டத்தில் நீங்கள் நல்லதையே நினைப்பீர்கள். நல்லதையே செய்வீர்கள். வெளிவட்டார பழக்கவழக்கங் களில் நல்லவர்களுடன் நட்பு ஏற்படும். செல்வாக்கு, சொல்வாக்கு, பேரும், புகழும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டிடும். செய்தொழில், வியாபாரத்தில் நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உற்சாகமான சூழ்நிலையே.

ஜூன்-1-6-2012 முதல் 30-6-2012 வரை- இந்தக்காலக் கட்டத்தில் ஒரு வித பதட்ட நிலை தான் நீடிக்கும். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று பயந்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் எதுவும் நடக்காது. செய்தொழில், வியாபாரத்தை அதன்போக்கில் விட்டுப்பிடிப்பது தான் நல்லது. புதிய முயற்சிகளை இப்போதைக்கு தவிர்ப்பது நல்லது.

ஜூலை – 1-7-2012 முதல ;31-7-2012 வரை – இந்தக்காலக்கட்டம் சோதனை, வேதனை, சிக்கல், சிரமங்கள் நிறைந்திருக்கும். தீவிர முயற்சிகளின் பேரில் தான் எந்த காரியமும் நடைபெறும். எதிலும் யோசிக்காமல் இறங்குவது நல்லதல்ல. செய்தொழில், வியாபாரம், சரியாக நடந்தாலும் ஏதாவது மனக்குறை இருந்துக் கொண்டுதான் இருக்கும். கடன் கவலையைத்தரும். பார்ட்னர்களின் போக்கு கலக்கம் தரும்.

ஆகஸ்ட்-1-8-2012 முதல் 31-8-2012 வரை- இந்தக்காலக் கட்டம் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். முயற்சிக்கும் காரியங்களில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். செய்தொழில், வியாபாரத்தில், போட்டி, பொறாமைகள் அதிகரிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு சுதந்திரம் பறிபோனது மாதிரி இருக்கும். வருமானம் குறையும். புதிய கடன்படவும் கூடும்.

செப்டம்பர்-1-9-2012 முதல் 30-9-2012 வரை- இந்தக்காலக்கட்டத்தில் எதிர் பார்த்ததை விட எதிர்பாராதது தான் நடக்கும். அதுவும் நீங்கள் விரும்பியதாகத் தான் இருக்கும். செய்தொழில், வியாபாரம் வழக்கம்போல்தான் நடைபெறும்.லாபம் கிடைத் ;திருக்கும். ஏதாவது மனக்குறை இருந்துக் கொண்டு தானிருக்கும்.குறுக்கு வழிகளில் இறங்கிட முயற்சிக்ககூடாது.உத்தியோகஸ்தர்களுக்கு மறை முக எதிர்ப்புகள் இருக்கும்.

அக்டோபர் -1-10-2012 முதல் 31-10-2012 வரை- இந்தக்காலக் கட்டம் உங்களை சிந்திக்க வைப்பதாகவே இருக்கும். மிக முக்கிய விவகாரங்களில் கூட முடிவெடுக்க முடியாமல் ஒத்திவைப்பது தான் சிறந்தது. செய்தொழில், வியாபாரத்தை அதன் போக்கில் விட்டுப் பிடிக்க வேண்டும். மந்தமாகத்தான் இருக்கும். லாபம் குறைந்து காணப்படும். எந்த மாறுதலும் கூடாது. எதிலும் யோசனை செய்து இறங்குவது நல்லது.

நவம்பர் 1-11-2012 முதல் 30-11-2012 வரை – இந்தக்காலக்கட்டம் எந்த மாறுதலுமின்றி வழக்கம் போல் சாதாரணமாகத்தான் இருக்கும். திட்டமிட்ட பணிகளும், முயற்சிக்கும் காரியங்களிலும் எதுவும் உடனே நடக்காது. தேவையில்லாத டென்ஷன், மனக்குழப்பம், அலைச்சல், திரிச்சல், அலைக்கழிப்பு கவலை, கலக்கம், இருக்கும். செய்தொழில், வியாபாரம் வழக்கம்போலவே நடக்கும்.

டிசம்பர் -1-12-2012 முதல் 31-12-2012 வரை – இந்தக்காலக்கட்டம் மற்ற கிரகங்கள் சாதகமாக இருப்பதால் பிற்பகுதியில் ஓரளவு காரிய வெற்றி, சரளமான பணவசதி, எதிலும் நிறைவு உண்டாகும். செலவு அதிகரிக்கும். வீடு, மனை, வண்டி, வாகன வகையில் வில்லங்கமும் அதனால் விகல்பமும் ஏற்படுதலுமுண்டாம். புத்திர புத்திரிகளால் கஷ்டமும், நஷ்டமும் அவர்களால் வேதனைகளும் உண்டாகவும் கூடும்.

ஜனவரி -1-1-2013 முதல் 31-1-2013 வரை – இந்தக்காலக்கட்டம் பிரச்னைகள் நிரம்பியதாகவே இருக்கும் என்றாலும் சமாளித்து விடலாம். முயற்சிக்கும் காரியங்கள், மந்தமாகத்தான் இருக்கும். எதையும் யோசிக்காது செய்வது நல்லதல்ல. திட்டமிட்ட பணிகள் தீவிர முயற்சியின் பேரில்தான் நடக்கும்.செய்தொழில்,வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். சிலர் மனைவியைவிட்டு பிரிந்து வாழவும் ஞாயமுண்டு.

பிப்ரவரி -1-2-2013முதல் 28-2-2013 வரை – இக்காலக்கட்டங்களில் நீங்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. உங்களைக் கீழே தள்ளிவிட முயற்சிக்கலாம். புதிய மனிதர்கள், புதிய நட்பு, புதிய தொடர்புகள் எதுவுமே வேண்டாம். தெரியாத விஷயங்களில் மட்டும்தலையிடாமல் இருப்பது நல்லது. செய்தொழில், வியாபாரத்தை அதன்போக்கிலேயே விட்டுப்பிடிப்பது தான் நல்லது.பார்ட்னர்களின் குறுக்கீடுகளும் இருக்கும்.

மார்ச்-1-3-2013 முதல் 31-3-2013வரை – இந்தக்காலகட்டம் தலைநிமிரவேச்செய்யும். இதுவரை இருந்து வந்த சோதனை, வேதனைகள் ஓரளவு நீங்கி சாதனைகள், நிகழ்வதாகவே இருக்கும். தடைபட்ட முயற்சிகள் நடைபெறும். புதிய முயற்சி களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். செய்தொழில்,வியாபாரத்தில் விரும்பத்தக்க மாறுதல்கள் இருக்கும்.

ஏப்ரல் 1-4-2013 முதல் 30-4-2013 வரை – இக்காலக் கட்டத்தில் படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். செய்தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் கெடுபிடிகள் அகலும். தடைகள் நீங்கும். எல்லா வகையிலும் சாதகமாகத்தான் இருக்கும். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். எதிர்கால கனவொன்று நிறைவேறும். கொடுக்கல், வாங்கல் சுறுசுறுப்பாக நடைபெறும்.

மே 1-5-2013 முதல் மே 27-5-2013 வரை- இக்காலக்கட்டம் பயனுள்ளதாகவே இருக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். தீராத பிரச்னைகள் தீரும். வருமானமும் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் தெரியும். வாக்கு, நாணயம் காப்பாற்றப்படும். வருமானம் அதிகரிக்கும். செய்தொழில், வியாபாரங்களில் முயற்சி வெற்றி பெறும். தாராளமாக பணம் புரளும்.

மொத்தத்தில் இந்த குரு மாறுதல் கேள்விக்குறியாகத்தான் இருக்கும் என்றாலும் சில சமயங்களில மிக எளிதாக சமாளிப்பீர்கள்.[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: