பில்லா – 2 வெளிவந்த உண்மைகள்

விளம்பரங்கள்

Thala Ajith in Billa Part 2 Tamil movie

காணொளி:-

தல அஜீத் நடித்து அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் படம் பில்லா-2 , ரஜினி படங்களை திரும்ப இயக்குவதென்பது அதுவும் மற்ற நடிகர்களை வைத்து வெற்றி படமாக உருவாக்குவது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு நல்ல உதாரணம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ன தான் தனுஷ் தேசிய விருது வாங்கிய நடிகராக இருந்தாலும் மாப்பிள்ளை ரீமேக்கில் அவர் டவுசர் கிழிந்தது, ஆனால் அஜீத்தின் பில்லா ரஜினியே பாரட்டும் வகையில் அமைந்ததோடு மட்டும் இல்லாமல் வெற்றி படமாக மாறியுள்ளது. அதனால் பில்லா – 2 படத்தின் தயாரிப்பு செலவுகள் எகிறி விட்டதாக செய்திகள் வெளி வருகின்றன.

பில்லா – 2 படத்தின் பல காட்சிகள் வெளிநாடுகாளில் படமாக்கப் பட்டுள்ளது. ஜார்ஜியா நாட்டின் ஜனாதிபதி ஓய்வெடுக்கும் லிகனி பேலஸ் எனும் மாளிகையில் படமாக்கப்பட்டுள்ள முதல் இந்தியத் திரைப்படம் என்கின்ற பெயரை பில்லா-2 பெற்றுள்ளது. லிகனி பேலஸ் ஷூட்டிங்கின் போது சில காரணங்களால் அங்கு எடுக்கப்பட்ட காட்சிகள் மறுபடியும் படமாக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதை பற்றி பில்லா-2 படக்குழுவில் பணியாற்றியவர் கூறும் போது அது மறக்க முடியாத தருணம். லொக்கேஷன் பார்க்கச் சென்ற போது பச்சைப்பசேல் என இருந்த இடம் ஷூட்டிங்கின் போது பனிப்பொழிய ஆரம்பித்தது தான் கொடுமை. படக்குழுவில் இருந்த அனைவரும் மிகவும் தவித்துப் போனோம். மைனஸ் டிகிரி வெப்பநிலையில் வேலை செய்ய மிகவும் கடினமாக இருந்தது. பனியின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் அந்த காட்சிக்கு பனிப்பொழிவு மேலும் அழகை கூட்டியதால் உற்சாகத்துடன் வேலை செய்தோம் எனக் கூறினார்.

பணத்தை கொட்டி எடுத்திருக்கும் பில்லா 2 நிச்சயம் பணத்தை அல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: