திரையுலகம்,முதன்மை செய்திகள் லட்சுமிராய்யை கரை சேர்ப்பாரா மாஸ்டர் லாரன்ஸ்

லட்சுமிராய்யை கரை சேர்ப்பாரா மாஸ்டர் லாரன்ஸ்

Actress LakshmiRai

காணொளி:-

லாரன்ஸ்,லட்சுமி ராய் இணைந்து நடித்த காஞ்சனா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மற்ற கதாநாயகிகளுடன் இணைந்து நடிக்கும் இரண்டு கதாநாயகிகள் படத்தில் நடிப்பது இல்லை என்ற முடிவில் இருந்தார் லட்சுமி ராய். ஆனால், அவரை நம்பி அந்த ரிஸ்க் எடுக்க யாரும் தயாராய் இல்லை போல் தெரிகிறது.

லாரன்ஸ் மனது வைத்தால் தான் அது நடக்கும் போல் தெரிகிறது அப்படி நடந்தாலும் ஏற்கனவே காதல் அது இதுவென்று பரப்பபடும் வதந்திக்கு உயிர் கொடுத்தது போல் இருக்கும். லாரன்ஸ் அதை செய்வாரா என்று தெரியவில்லை,

அதனால், “மங்காத்தாவில் த்ரிஷா, அஞ்சலியுடன் இணைந்து நடித்தது போல், இப்போது விக்ரம் நடிக்கும், “தாண்டவம் படத்திலும் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார் லட்சுமி ராய்.

முதலில் அனுஷ்கா, எமிஜாக்சனுக்கு இணையான வேடம் தருவதாக பிட்டை போட்ட இயக்குனர், கிட்டத்தட்ட லட்சுமிராயை மூன்றாவது நாயகியாக புறந்தள்ளிவிட்டார். இதனால், எந்த படத்தில் நடித்தாலும் என் ராசி இப்படி ஆகிவிட்டதே என்று புலம்புகிறார் லட்சுமிராய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.