திரையுலகம்,முதன்மை செய்திகள் சிம்புவுக்கு இடம் தருவாரா தல அஜீத்

சிம்புவுக்கு இடம் தருவாரா தல அஜீத்

Ajith in billa-2 movie

காணொளி:-

தல அஜீத்தின் பில்லா 2 திரைபடத்தின் இடைவேளையில் சிம்பு, தனது மற்றும் தல ரசிகர்களுக்காக தனது வாலு படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.

சிம்பு தீவிர அஜீ்த் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே அதனால் தான் நண்பன் திரைபடத்தில் பிரமண்ட இயக்குனர் ஷங்கர் அழைத்தும் அஜீத் ரசிகராக இருந்து கொண்டு எப்படி விஜய் கூட நடிப்பது என்று மறுத்து விட்டார். அஜீத்தின் பில்லா 2 விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது என்பது மிக பழைய செய்தி ஆனால் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தல மற்றும் தனது ரசிகர்களுக்கு ஏதாவது சர்பிரைஸ் கொடுக்க வேண்டுமே என்று நினைத்த சிம்பு பல ஆலோசனைகளுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

அது இது தான்….சிம்பு தற்போது ஹன்சிகாவுடன் சேர்ந்து வாலு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா அந்த படத்தின் டீசர் அண்மையில் தான் எடுக்கப்பட்டது. அந்த டீசரை பில்லா 2 இடைவேளையில் திரையிட அவர் திட்டமிட்டுள்ளாராம்.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம், வி.டி.வி. கணேஷ் நடிக்கும் வாலு படத்தை புதுமுக இயக்குனர் விஜய் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார்.

ஏழாம் அறிவு படத்தின் போது ஒரு கல் ஒரு கண்ணாடி டீசர் வந்து மிரட்டியது போல் வாலும் ஒரு கலக்கு கலக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.