சீமானை கழட்டி விட்ட இளையதளபதி விஜய்

விளம்பரங்கள்

Tamil actor Vijay in Pagalavan

காணொளி:-

சீமான் இயக்கத்தில் உருவாக இருந்த ‘பகவலன்’ படத்தில் இருந்து இளையதளபதி விஜய் விலகிவிட்டார். இதனால், ‘பகலவன்’ படத்தில் யார் நடிப்பார்கள் என்பது குறித்து கோலிவுட்டில் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

இது குறித்து சீமான் கூறுகையில், மத்திய அரசிற்கு எதிராக பேசி நான் சிறைக்கு சென்று விட்டதால் என்னால் ‘பகவலன்’ படத்தினை குறித்த நேரத்தில் தொடங்க இயலாமல் போனது. விஜய்யும் அடுத்த அடுத்த படங்களில் ஒப்பந்தமாகி விட்டார் என்று சீமான் தெரிவித்து இருக்கிறார்.

பகவலன் படத்தின் நாயகன் யார் என்பது குறித்த கேட்ட கேள்விக்கு, “அப்படத்தில் நடிக்க விக்ரமிடம் பேசினேன். வெவ்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் நடிக்க முடியாது என்று தெரிவித்து விட்டார், இதையடுத்து நாயகன் வேடத்திற்கு ஆர்யா, விஷால் மற்றும் ஜீவா உள்ளிட்டவர்களில் ஒருவர் பொருத்தமாக இருப்பார். ஜீவா மிக மிக பொருத்தமாக இருப்பார் என நினைக்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: