திரையுலகம் மர்மமான சூர்யாவின் மாற்றான் கதை

மர்மமான சூர்யாவின் மாற்றான் கதை

Tamil Actor Surya in Maatran tamil movie

காணொளி:-

அயன் மற்றும் கோ படத்தை விட அதிரடியாக இருக்க வேண்டும் என்பதற்காக கே.வி.ஆனந்தும்,சூர்யாவும் இரவு பகல் பாரமால் உழைத்துக் கொண்டிருக்கும் படம் மற்றான். இந்த படத்தின் இறுதி காட்சிகள் இப்பொழுது படமாகி கொண்டிருகின்றன. இயக்குனர் பாலா படங்களை போல இந்த படத்தின் கதையும் பெரும் ரகசியமாக வைக்கப் பட்டிருகிறது.

காஜல் அகர்வால் சூர்யா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் முக்கிய காட்சி இந்தியா, பாகிஸ்தான் பார்டரான பு‌ஜியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியை அலஸ்காவில் படமாக்க படக்குழுவினர் தீர்மானித்திருக்கிறார்கள். அந்த பாடல் கட்சிக்காக, அலஸ்கா பயணம் முடிந்தால் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும். இந்த படத்தின் பாடல்கள் ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் கைவண்ணத்தில் உருவாகி இருக்கிறது சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் கலைஞர்களை பயன்படுத்தி அசத்தி இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.