ஆர்யா – விஷால் அதிரடியில் அக்னி நட்சத்திரம்?

விளம்பரங்கள்

Aarya,Vishal in remake agni natchathiram

காணொளி:-

பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படம் மிகப்பெரும் வெற்றிப் படமாக சக்கைபோடு போட்டது. இப்போது அந்த படம் ரீமேக்காக இருக்கிறது.

படத்தைத் தயாரிப்பவர் பாலாஜி ரியல் மீடியா ரமேஷ். இவர் ஏற்கனவே உத்தமபுத்திரன், ஒஸ்தி போன்ற படங்களைத் தயாரித்தவர்.

இப்போது பிஸியாக அக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக் தயாரிப்பு வேலைகளில் இறங்கியிருக்கிறார் ரமேஷ்.

முன்னணி இயக்குநர் இந்தப் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. ஹீரோவாக நடிக்க ஆர்யா – விஷால் இருவரிடமும் பேசியிருக்கிறார்களாம்.

இவர்களுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

அக்னி நட்சத்திரத்தில் பட்டையை கிளப்பிய மணிரத்தினம், அன்றைய கால கட்டத்தில் அந்த படத்தின் மூலம் ஒரு புதிய ட்ரெண்டை உருவாகினார்.

அனல் கக்கும் பிரபு மற்றும் கார்த்திக்கின் சந்திப்பு காட்சிகள் இன்று திரையில் பார்த்தாலும் புல்லரிக்கும். அதை கட்சிதமாக விஷால் மற்றும் ஆர்யா எப்படி திரைக்கு கொண்டு வர போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: