எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்

விளம்பரங்கள்

kadakam raasi logo

காணொளி:-

பிற ராசிகளுக்கு
1. குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்
2. குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்
3. குருபெயர்ச்சி பலன் 2012 – மிதுனம்
4. குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்
5. குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி
6. குருபெயர்ச்சி பலன் 2012 – துலாம்
7. குருபெயர்ச்சி பலன் 2012 – விருச்சிகம்
8. குருபெயர்ச்சி பலன் 2012 – தனுசு
9. குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்
10. குருபெயர்ச்சி பலன் 2012 – கும்பம்


பேரன்புள்ள கடக ராசி அன்பர்களே! வணக்கம்!! வாழிநலம்!!!

நவக்கிரகங்களில் தைரியம், பிடிவாத குணமும் பிறவிக்குணமாக இருக்கும் புருஷ லட்சணம் என்றழைக்கப்படும் ஸ்ரீ சந்திரபகவானை ஆட்சி கிரகமாகக் கொண்டு வீடாகவும் அமையப்பெற்ற உங்கள் அதிபதியும், ராசியாதிபதியும் 6,9 க்குடைய ரோகாதிபதியும், பாக்ய ஸ்தானாதிபதியுமான ஸ்ரீகுருபகவான் இதுவரையில் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி உங்கள் ராசிக்கு கர்மஸ்தானமும், ஜீவனஸ்தானமும் பத்தாமிடமும் தசம ஸ்தானமுமான மேஷ ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இவர் ஸ்வஸ்;திஸ்ரீ ஸ்ரீநந்தன நாம ஆண்டு வைகாசி மாதம் 4ஆம்தேதி ஆங்கிலம் மேமாதம் 17ஆம் தேதி 2012 ஆம்ஆண்டு (17-5-2012) வியாழக்கிழமை அன்று மாலை 6-18 மணியளவில் பெயர்ச்சியாகி ராசிமாறி உங்கள் ராசிக்கு லாபஸ்தானமும் பதினோராமிடமுமான ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து 27-5-2013 ஆண்டு வரை ஒராண்டு காலம் அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.

குணநலன்கள்

எதிர்ப்பைக் கண்டு எள் அளவும் அஞ்சாதவர்கள் நீங்கள். கோடீஸ்வரராக இருந்தாலும் சரி, கூலித் தொழிலாளியாக இருந்தாலும் சரி, நாடி வந்தால் நன்மைகளைச் செய்து கொடுப்பீர்கள். தேடிச் சென்றும் வலிய உதவி செய்வீர்கள். உதவும் குணம் ஒன்றால் தான் நீங்கள் உயர்ந்தவர்களாக காட்சியளிக்கிறீர்கள்.

திருமண வயதுடைய கடக ராசிக்காரர்களுக்கு பொருத்தம் மிகவும் தேவை. குறிப்பாக, முக்கியமான பொருத்தங்கள் ஆறு இருப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல், தெசா சந்திப்பு இல்லாமல், சஷ்டாஷ்டம தோஷமில்லாமல், வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தால் தான் சுகமான வாழ்க்கையை எதிர்கொள்ளலாம்.

மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் அஞ்சாதவர்களே. யானையின் தும்பிக்கை பலமோ இல்லையோ உங்களின் நம்பிக்கை அசுர பலம் கொண்டது.பார்த்த மாத்திரத்தில் பழக்கம் பிடிப்பவர்கள் நீங்கள். கூட்டமாக இருப்பதும் உங்களுக்குப் பிடிக்கும். கொள்கையை மாற்றிக் கொள்ளவதும் உங்களுக்கு பிடிக்கும். பிறரின் கோபத்தை தாங்கும் சக்தியும் உங்களுக்கு உண்டு. எதிரிகளை தாக்கும் சக்தியும் உங்களுக்கே உண்டு. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகம் பெற்றவர்களாக விளங்குவீர்கள்.

பொதுப்பலன்கள்;

லாபகுருவாலே தனவரவு பெருகும். லட்சியங்கள் நிறைவேறும்
பேரும் புகழும் பெருமையும் பிரபல்ய யோகமும் வந்தே தீரும்
நிழல் கிரகங்களால் தொட்டதெல்லாம் பொன்னாகும் அற்புதங்கள்
அர்த்தாஷ்டமசனியோகச்சனியாகநான்கில்நிற்க ஒரளவு நல்லதே நடக்கும்

இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசியின் முக்கிய கிரகமாக செயல்படப் போவது ஸ்ரீ குருபகவானுடன் நிழல் கிரகங்களான ராகு-கேதுவுடன், பக்கபலமாக இருந்து உங்கள் வளமான வாழ்வு தரப் போகிறார்கள். மே மாதம் 17-ஆம் தேதியன்று உங்கள் ராசிக்கு ஸ்ரீகுருபகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி பதினோறாமிடமான லாபஸ்தானத்திற்கு உச்ச பலத்துடன் வருகின்றார். இது எப்பேர்ப்பட்ட இடம் தெரியுமா? யோகசாலிகளான உங்களுக்கு இக்காலம் அமோகமாக அற்புதமாக இருக்கும். மாபெரும் மாற்றம் தரும். மறக்க முடியாத அளவிற்கு கொடி கட்டி பறக்க வைக்கும் குருப்பெயர்ச்சிக்காலம். கனவில் கூட நீங்கள் நினைத்து பார்த்திராத அளவு இருக்கும். எனவே அதிர்ஷ்டகரமான நன்மைகள் அதிகரித்திடும். பெருத்தயோகம்தான் என்றாலும் போகமிருக்காது பதவி கிடைத்தாலும் பவர் உங்களிடம் இருக்காது. குருபலத்தால் வருமான வசதி வாய்ப்புகள் அதிகரித்து தடைப்பட்ட சுபகாரியங்கள் ஜாம் ஜாம் என்று நடைபெறும்.

தனகாரகனும், உங்கள் ராசிக்கு லாபாதிபதியுமான ஸ்ரீ குரு பகவான் தனக்கு உகந்த இடத்திற்கு வந்திருக்கிறார் இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழக் கூடிய நிகழ்ச்சி. எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்.கவலைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு காரியமாற்ற புறப்படுங்கள். தடங்கலான விவகாரங்கள் இனி தானாகவே நடக்கும்.ஜீவன விஷயங்களில் இருந்த குளறுபடிகள் சரியாகி விடும். லட்சுமி கடாட்சம் என்று சொல்வார்களே, அந்த மாதிரி அதிர்ஷ்ட காலகட்டம் வந்திருக்கிறது. உங்களை நிமிர்ந்து நிற்கச்செய்வார்.அதிர்ஷ்டக்காற்று மெல்லமெல்ல உங்கள் பக்கமாக வீச ஆரம் பிக்கும். எப்படித் தெரியுமா? லாபஸ்தான குருவால் மட்டுமல்ல. நிழல் கிரகங்களான ராகு-கேது,பக்கபலமாக இருந்து உங்களை உயர்த்துவார்கள். ஆக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு லாபகரமாகவே இருக்கும். நீங்கள் இதுவரை அடையமுடியாத சுகபோகங்களை அடைந்து என்றுமில்லாத சந்தோஷத்துடன் இருப்பீர்கள். எனவே லாபஸ்தான குருவால் அதிர்ஷ்டம் தரக்கூடிய நல்ல மாறுதலான திருப்பங்கள் ஏற்படுதலுமுண்டாம்.

ஸ்ரீ சனி பகவானின் சஞ்சார நிலவரம்

முக்கிய கிரகங்களின் சஞ்சார நிலைமைகளை அனுசரித்துப் பார்க்கையில் உங்கள் ராசிக்கு 7,8 ஆகிய இடங்களுக்குரிய சப்தமஸ்தானாதிபதியும், களத்திரஸ்தானாதிபதி யும், அஷ்டமஸ்தானாதிபதியும், ஆயுள்ஸ்தானாதிபதியுமான ஸ்ரீசனிபகவான் இப்போது தொடர்ந்து சுகஸ்தானமெனும் நான்காமிடத்தில் சஞ்சரிக்கிறார். நான்காமிடச்சனியை அர்த்தாஷ்டமச் சனி என்று சொல்வார்கள். அதாவது அஷ்டமச்சனியின் கெடுபலன்களில் பாதியளவு இருக்கும். எனவே நான்காமிடத்துச் சனியால் என்னென்ன பலன்கன் ஏற்படும் சற்று கவனிப்போம்.இந்த ராசியில் ஸ்ரீ சனி பகவானின் சஞ்சாரத்தைப் பற்றி ஜோதிட சாஸ்திர நூலான ஜோதிடக் களஞ்சியம் பாடல்களில் ஒன்றைக் கீழே குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது உண்மை தெளிவாகப் புரியும் இவர்களுக்கு

கண்டங்கள் நான்கில் எட்டில் கடுமையாம் சனி சேய் நிற்கில்
தண்டங்கள் மிக உண்டாம் திரவியம் நாசமாகும்
கொண்டதோர் மனைவி வேறாம் குறைந்திடும் செட்டு நஷ்டம்
பண்டுள நாட்டை விட்டு பரதேசம் போவான் பாரே!

-மேற்கண்ட பாடலில் சொல்லப்பட்ட பயமுறுத்தலான பலன்கள் பொதுவானவையாகும். எனவே நான்காமிடத்துச் சனியால் நல்ல பலன்கள் செய்ய முடியாது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதுதான். அதற்காக நீங்கள் கலக்கமோ, கவலையோ, மனோவியாக்கூலமோ அடைந்து சோர்ந்து அதிர்ந்து-அசந்து போய்விடக்கூடாது. நாலில் சனி என்றால் நாய் படாத பாடுதான். பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும். என்ற வழக்கு மொழி மிகச்சரியாக இருக்கும்.

கண்டஸ்தானமாகிய ஏழு, நான்கு, எட்டு ஆகிய இடங்களில் ஸ்ரீசனிபகவான் சஞ்சரித்தால் முயற்சிகள் அலைக்கழிக்கும். தண்டனைகள் ஏற்படும். பணம், பொன், பொருள்கள் வீணாக விரயமாகும். செய்தொழில் எதுவானாலும் கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும். வேலையை முன்னிட்டு வெளி ஊர்களிலோ, வெளிநாடுகளிலோ சுற்றி அலையவேண்டியிருக்கும் என்பது இப்பாடலின் பொருள்.எனவே அர்த்தாஷ்டம சனி கஷ்டத்தைக் கொடுத்தாலும் சமாளிக்கும் படியாக நல்லதையும் உடன் ஏற்படுத்துவார். ஸ்த்ரீ பந்த் வர்த்த ப்ராணசம் என்று பல தீபிகையின் படி நான்கில் சனி மனைவி இறத்தல், அவரைப் பிரிதல், பந்து நாசம், சேர்த்து வைத்த பொருளழிவு இவற்றை ஏற்படுத்துவார் என்று சொல்லுகிறார். ப்ருகு ஆந்ரத்தில் மாத்ரூ ஹானி சௌக்ய ஹானி நிர்தன என்று ப்ருகு முனிவர் மேற்கண்ட அசுபத்துடன் தாய்க்குக் கண்டம், சௌக்யக் குறைவு தரித்திரம் இவற்றை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்.

எனவே அர்த்தாஷ்டம சனியின் காலக்கட்டத்தில் வருந்த வேண்டிய விஷயமென்றாலும் அதனால் கவலையோ, கலக்கமோ மனோவியாக்கூலமோ அடைந்து ஒரேயடியாக குழம்பிடத் தேவையில்லை. எப்படியோ இவர்கள் சாதுர்யமாக சாமர்த்தியமாக சமாளித்துத்தான் ஆக வேண்டும்.

ஸ்ரீராகு-கேது பகவான்களின் சஞ்சார நிலவரம்

மேலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான பாம்பு கிரகங்களான நிழல் கிரகங்கள் ஐந்தாமிடமான விருச்சிகத்திலும், பதினொராமிடமான ரிஷபத்திலும் தொடர்ந்து சஞ்சரிக்கிறார்கள்.தடம் மாறாத வாழ்க்கைக்கு இது அஸ்திவாரமாகும், தன வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கனிவான வாழ்க்கையும் அமையும். இந்த ராகு-கேது தொடர்ந்து 5,11ல் சஞ்சரிப்பது உங்கள் கனவுகள் நனவாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வாக்கிய பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் கார்த்திகை மாதம் 17ஆம்தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 2ஆம்தேதி 2012 ஆம் ஆண்டு (2-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10-53 மணியளவில் ஸ்ரீ ராகுபகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி துலாம் ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் பெயர்ச்சியாகி ராசிமாறி மேஷ ராசிக்கும் 11-31 நாழிகைக்குள் பிரவேசித்து ஒன்றை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் மார்கழி மாதம் 8ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீராகுபகவானும்,அதேநேரம் ஸ்ரீகேதுபகவானும் பெயர்ச்சியாகி ராசி மாறி முறையே துலாம் ராசிக்கும், மேஷ ராசிக்கும் பிரவேசித்து ஒன்னரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

மொத்தத்தில் இருபஞ்சாங்கங்களின் சித்தாந்தப்படி உங்களுக்கு சரியில்லையென்று சொல்லும் அதே நேரத்தில் சரிவுமில்லை என்று ராகு-கேது பெயர்ச்சி தான் சொல்ல வேண்டும். நாளை நமதே என்ற எண்ணத்தில் காலம் சிறப்பானது-விசேஷமானது. தெய்வ அருளையும், ஆசியையும் பெற்ற நீங்கள் போனால் வராது என்பதைப் புரிந்து செயல்பட்டால் உங்களை எவராலும் அசைக்க முடியாது. எட்டிப்பிடிக்கவும் முடியவே முடியாது.இந்த ராகு-கேது பெயர்ச்ச் அதிகமாக உழைக்க வைத்து உயர்த்துவதுடன் உங்களின் பலம் என்ன என்பதையும் புரிய வைப்பதாக அமையும்.

ஸ்ரீகுருபகவானின் சஞ்சார நிலவரம்

இந்த குருப்பெயர்ச்சியைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாலே உங்களுக்குக் கொண்டாட்டம்தான். யானை வரும் பின்னே, மணி ஓசை வரும்முன்னே என்பது போல, இந்த குருமாறுதலால் யோகம் தரக் கூடிய அதிர்ஷ்டகரமான நன்மை உண்டாகப்போகிறது என்பதற்கு முன் அறிகுறியாகத்தான் உங்கள் முகத்தில் தெம்பும், உற்சாகக்களையும் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டதே. இப்போது ஸ்ரீகுருபகவான் லாபஸ்தானத்துக்கு வருவது பழத்துண்டு நழுவி ஐஸ்க்ரீமில் விழுவது போலத்தான். இனி நீங்கள் சந்தோஷங்களை சந்திக்கும் காலம். பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா மாதிரிதான்.

இப்பொழுது ஸ்ரீகுருபகவானின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு பதினோறாமிடம் என்பது லாபஸ்தானமல்லவா? எனவே பதினோறாமிடமென்பது ஸ்ரீகுரு பகவானுக்கு ராஜ சிம்மாசனம் மாதிரி தான். இது உங்களுக்கு ஆனந்த வருகை என்பதிலே சந்தேகமே இல்லை. எனவே அதிர்ஷ்டகரமான யோகம் தரக்கூடிய நல்ல மாறுதலான திருப்பங்கள் ஏற்படும். அனேக நன்மைகளும் மேன்மைகளும் பொருளாதாரத்தில் உயர்ந்து வளமும் வசதியும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்து வாழ்க்கையில் நல்லமாறுதலான அபிவிருத்தியான திருப்பங்கள் ஏற்பட்டு மனத்தில் தெம்பும், உற்சாகமும், குடும்பத்தில் சந்தோஷமும்-நிறைந்திருக்கும். தொட்ட தெல்லாம் பொன்னாகும் காலம். இனி உங்களுக்கு கொண்டாட்டம்தான். குடும்பத்தில் திருவிழாக்கோலம்தான். இனி நீங்கள் நிமிர்ந்து நிற்கலாம். ராஜநடை போடலாம். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீச ஆரம்பிக்கும்.

ஜோதிடப் பாடல்களும் – ஜோதிடச் சுவடிகளும்

பொதுவாக பதினோறாமிடத்திலே ஸ்ரீகுருபகவான் சஞ்சரிக்கிறபோது என்னென்ன பலன்கள் ;நடைபெறும்? முன்னோர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள். என பாருங்கள்.

மன்னவன் பதினொன்றில் ஒரு மன்னர் சேவை வாகனங்கள் உள்ளோன் –
அன்றும்மாநிலத்தில் பொருள் சேருமே தாயே

-என்று லாபஸ்தான குருவைப் பற்றி இப்படி பிரமாதமாக சொல்கிறார் புலிப்பாணி முனிவர். இனி அதிர்ஷ்டபாதையிலே அடியெடுத்து வைக்கிறீர்கள். பழைய மிடுக்கும். கம்பீரமும் கௌரவமும்,பெருமையும், பேரும், புகழும் உங்களை வந்தடையும்.

வித்வான், தனவான்; பகுஹ_ லாபவான்அஸ்வாரூட கனே ப்ரதிஷ்டா சித்தி

சுஜலாப பாக்கிய விருத்தி நிN~ப லாப- என்கிறது ப்ருகு சூத்திரம். பதினோறாமிடமாகிய லாபஸ்தானத்தில் ஸ்ரீகுருபகவான் சஞ்சரிக்கிற போது அந்த ஜாதகன் கல்வியில் மேம்படுவான். வளமான செல்வம் பெறுவான். வாழ்க்கையில் ஆதாயங்களும், அநேக விருப்பமான காரியங்களும் கைகூடும் என்பது இதன் பொருளாகும்.

ஆமெனவியாழனுமே இரண்டு ஐந்தேழ் அடுத்த ஒன்பது பதினொன்றில் வாழ
தாமெனசெல்வமொடு குதிரைஉண்டாம்தழைக்குமேகுடைதர்மதானம் ஓங்கும்
நாமெனத்தாய்தகப்பன்புதல்வராலேநன்மையாம்அருமையொடுபெருமைஉண்டாம்
போமென அரசர்க்கு நல்லோனாக்கும் புகழ் சோபனம் நடக்கும் பூமி ஆள்வான்

– என்று ஜாதக சித்தி பிரமாதமான பலன்களை எல்லாம் மனம் குளிர குற்றாலத்தில் குளித்தது மாதிரி ஜில்லென்று சொல்லுகிறது.

செல்வமும், வளமும் சேருமாம். குதிரை போன்ற கால்நடைகள் வண்டி, வாகன யோகம் ஏற்படும் என்றும் இதன் பொருள். ராஜமரியாதையுள்ள குடை தழைக்கும் என்பது தகுதி, மதிப்பு, மரியாதை, அதிகார பலமும் கொடி கட்டி பறக்கும் என்பதையே குறிக்கும். தர்ம தானம் அதிகரிக்கும் என்றால் அதற்கேற்றபடி உங்களுக்கு வளமான வசதி வாய்ப்பு வருமானம் பெருகும். தாய் தகப்பனாராலே புத்திர, புத்திரிகளாலே நன்மை, அனுகூலம் ஏற்படுமாம். அரசினர்க்கு உகந்தவனாய் அனுகூலமடைவதும் பேரும், புகழும், பெருமையும், சுபகாரியங்களும் தலைமைத் தகுதியும் உண்டாகுமாம்.

பாரப்பாகுருவேதான்இரண்டுஐந்தேழ்பரிவாகும்நலத்தோடுபலன்செப்பக்கேளும்
சிவிகையோடு கரிபரி கல்யாணம் கூடும் நேரப்பா பூஷணம் மறைவோர் நேயம்
நிலையாகும் அரசருடன்பேட்டிகாணும்கூறப்பாசுகமெல்லாம் கொடுக்கும் மெத்த
குடும்பமது தான் செழிக்கும் கீர்த்தியோங்கும்

– என்று கோட்சார சிந்தாமணி தெம்பும், உற்சாகமும் தரக்கூடிய வகையில் சந்தோஷப் பலன்களைக் கூறுகிறது.சிவிகை என்றால் பல்லக்கு. கரி என்றால் யானை, பரி என்றால் குதிரை, இவையெல்லாம் முடி சூடிய மன்னர்கள் ஆண்ட காலத்திற்கு பொருந்தும். .ஆனால் இன்றைய ஹைடெக் விஞ்ஞான உலகில் வண்டி, வாகன யோகம் அமையும் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். கல்யாணம் கைகூடும். ஆபரணங்கள் சேரும். அரசாங்க அனுகூலத்தினால் ஆதாயம் ஏற்படும். என்றெல்லாம் அந்த பாடலில் மிகவும் அதிகப்படுத்தி சொல்லப்பட்டவை அல்ல. ஸ்ரீகுருபகவான் மனம் வைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கக்கூடிய கருணைக்கடல் அவர்.

லாப குருவாலே முயற்சிக்கும் காரியங்களில் இருந்து வந்த சுணக்கமும், சுற்றலுமான நிலைமை விலகும். இதனால் ஏற்பட்டிருந்த தொல்லைகள், குழப்பங்கள், குளறுபடிகள், பிரச்னைகளால், எற்பட்டிருந்த மனோவியாக்கூலமெல்லாம் மறையும். புதிய திட்டங்களும் கைகூடுவதோடு எல்லாமே சாதகமான வெற்றியாகும். அரசாங்க வகையில் வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரமெல்லாம் அனுகூலமாகும்.

பொருளாதார வகையில் மிகவும் உயர்வாக உற்சாகமாத்தான் காணப்படுவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். எதிர்பார்த்த, எதிர்பாராத வகையில் எல்லாம் பணம் புரளும். கொடுக்கல், வாங்கல் சுலபமாகவும், நேர்மையாகவும் நடக்கும். பேச்சு வார்த்தைகளிலேகூட ஆதாயங்கள் பிரமாதமாக வந்து சேரும். பணம் வந்தால் பலவிதமான பொருள்களும் வந்து சேரும். பொருளாதாரம் உயர்கிறது.

செய்தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாயமாக மறைந்துவிடும். இதன் போக்கில் ஒரு அதிர்ஷ்டகரமான சூழ்நிலை எப்படியும் ஏற்பட்டு விடும். லாபங்கள் அதிகரிக்கும். பாக்கி கள் வசூலாகும். கடன்களை அடைத்து விடுவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளில் துணிந்து ஈடுபடுவீர்கள். எதைத் தொட்டாலும் வெற்றி தான். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் என்ற வழக்கு மொழி சிலருக்கு மிகச் சரியாக இருக்கும்.

குடும்ப சூழ்நிலையில் ஒரு குதூகலமான சூழ்நிலை உணர்வீர்கள். தடைபட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் ஜாம்ஜாமென்று நடக்கும். உங்களை தூற்றிக் கொண்டிருந்தவர்கள் துதி பாட ஆரம்பித்து விடுவார்கள்.கைவிட்டுப் போன பொருட் கள் திரும்பக் கிடைக்கும். சிலருக்குக்கிட்டும். நீங்கள் நினைப்பது யாவும் நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு – இதுவரை ஏற்பட்ட பிரச்னைகளும், தொந்திரவு களும் மறையும். நல்லமாறுதலான போக்கு உண்டாகும்.

மாணவர்களுக்கு – மற்றவர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு புத்தி, சாதுர்யத்தை வெளிக்காட்டுவீர்கள். கல்வியில் அக்கறையும், ஆர்வமும் அதிகரித்திடும்.

வியாபாரிகளுக்கு – வருமானம் அதிகரிக்கும். வளர்ச்சியில் அதிக அபிவிருத்தி உண்டாகும். வாழ்க்கைத்தரத்திலும் உயர்வான நன்மைகள் அதிகரித்திடும்.

தொழிலாளர்களுக்கு – கடும் பாடுபட்டு வந்த கஷ்டங்கள் பெரும்பகுதி குறையும். சுணக்கமாகி வந்த சுய தொழில் முயற்சியும் கைகூடும்.

கலைஞர்களுக்கு – பேரும், புகழும், பெருமையும்,கௌரவமும், அந்தஸ்தும் மேலோங்கும். அருமையான சான்ஸ் எல்லாம் கிடைக்கும். இனிமேல் படுயோகம்

அரசியல்வாதிகளுக்கு – பேச்சாற்றலும், செல்வாக்கும் ஓகோவென்று உயரும். பணமும் சரளமாகவும், புரளும். பட்டம் பதவிகளும் தேடி வரம்.

பெண்களுக்கு – சரளமாக பணம் புழங்குவதாலே அடிப்படைத் தேவைகள் மட்டுமல்ல, அதிகப் படியான சொகுசான சுகசௌகர்யங்கள் செய்து கொள்ளுமளவிற்கு உபரியாகவே பணம் புரளும். குடும்பம் சந்தோஷ சமுத்திரத்தில் மிதக்கும்.

ஸ்ரீகுருபகவானின் அருட்பார்வைகளினால் ஏற்படும் நன்மைகள்

லாப ஸ்தானமான பதினோராமிடத்தில சஞ்சரிக்கும் ஸ்ரீ குருவின் அருள் பார்வைகளில் ஒன்றான ஐந்தாம் பார்வை உங்கள் ராசியில் மூன்றாம் இடமான கன்னியில் பார்ப்பதால் உங்களுடைய தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முயற்சியின் வேகத்தை முடுக்கி விட்டு பல உருப்படியான காரியங்களையெல்லாம் சரளமாகவும். தாராளமாகவும் புரண்டு பொருளாதார நிலை உயரும்.உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையும்.

அடுத்ததாக ஸ்ரீ குருபகவானின் இன்னொரு பார்வையான ஏழாம் பார்வை உங்கள் ராசியின் ஐந்தாமிடமான விருச்சிகத்தின் மேல் பதிகிறது. புத்தி புத்திர பூர்வபுண்ணிய ஸ்தான முமாகையால் புத்தியில் தெளிவான திருப்பங்கள் ஏற்படும். அறிவுக்கூர்;மையான யுக்தி, புத்தி, யோசனை, சிந்தனை, தன்னம்பிக்கை, சாதுர்யம். சாமர்த்தியம் இவைகளால் ஆதயாமும் அனுகூலமும் அடையலாம். போட்டி, பொறாமை எதிர்ப்பை முறியடிப்பீர்கள். வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள்.

அடுத்ததாக ஸ்ரீ குருபாகவனின் மற்றொரு கூர்;மையான ஒன்பதாம் பார்வை உங்கள் ராசியின் ஏழாமிடமான மகரத்தில் பதிகிறது. களத்திர ஸ்தானமானதால் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களும், குளறுபடிகளும் மறையும், சுணக்கமான தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் விருந்து, விசேஷமுடன் நடைபெறும். கணவன், மனைவி உறவில் இணக்கமும் நெருக்கமும் அதிகரித்து தாம்பத்திய சுகமும் மேலோங்கும்.

நட்சத்திரப் பலன்கள்

புனர் பூசம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு

புத்திரக்காரகன் என்று அழைக்கப்படும் குருவின் பலம் பெற்ற நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இக்குருப்பெயர்ச்சி காலத்தில் மிகவும் அனுகூலமாக இருக்கும். நீங்கள் நினைத்தது யாவும் நடக்கும். உங்கள் புத்தி சாதுர்யம் அதிக அளவில் பளிச்சிடும். எதிர்;கால திட்டங்களில் முனைப்பாக செயல்படுவீர்கள். தொழில்,வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். லாபங்கள் அதிகரிக்கும்.விரும்பிய மாறுதல்களைச் செய்வீர்கள். எல்லா நம்பிக்கையளிப்பதாகவே இருக்கும். திட்டமிட்ட பணிகள் விரைவாக நடக்கும். கேள்விக்குறியாக இருந்த பிரச்னைகளுக்கு விடை கிடைக்கும். தெய்வ அருளால் சில அற்புதங்களும் நிகழும். புதிய முயற்சிகளில வெற்றி கிடைக்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

ஆயுள்காரகன் என்றழைக்கப்படும் சனியின் ஆதிக்கப்பலம் பெற்ற பூசம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இக்குருப்பெயர்ச்சி காலத்தில் மிகமிக சாதகமாக இருக்கும்.உங்கள் நீண்ட நாளையக் கனவுகள் நிறைவேறும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயர்ந்து விடும். தொழில், வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டத்திருப்பங்கள் உண்டாகிவிடும். லாபம் இரட்டிப் ;பாக இருக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு இது பொன்னான நேரம். தகுதிக்கு மீறிய உயர்வுகள் தேடி வரும். உங்களை மறுபடியும் நிமிர்ந்து நிற்கச் செய்யும்.

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

வித்யாகாரகன் என்று அழைக்கப்படும் புதனின் ஆதிக்கம் பெற்ற ஆயி;ல்ய நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இக்குருப்பெயர்ச்சி காலத்தில் நல்ல காலமாக சாதகமாகவே இருக்கும். உங்களுக்கு புரியாமலிருந்த பல விஷயங்கள் புரிந்து விடும். மேல் மட்ட மனிதர்களைச் சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் புது சுறுசுறுப்பு ஏற்படும். உத்தியோகத்தில் பழைய நிலைமை திரும்ப வந்து விடும். நீங்கள் நினைத்திராத சில அற்புதங்கள் நடக்கும்.

மாதவாரியாகப்பலன்கள்

மே-17-5-2012 முதல் 31-5-2012 வரை- இக்காலக்கட்டத்தில் உச்சபலத்துடன் வரும் குரு இனி உங்களை பலவகையிலும் உயர்த்துவார். சிறப்பிப்பார். தேவைக்கு அதிகமாக பணவசதி இருக்கும்.வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். செய்தொழில், வியாபா ரத்தில் அதிர்ஷ்டகரமான திடீர் திருப்பம் ஏற்படும். வருமானப்பெருக்கம் கூடுதலாகும். புதிய முயற்சிகள் கைகொடுக் கும். உத்தியோகத்தில் அதிர்ஷ்ட மாறுதல் இருக்கும்.

ஜூன்-1-6-2012 முதல் 30-6-2012 வரை- இக்காலக்கட்டம் முன்னேற்றமாகவே இருக்கும் முயற்சிக்கும் காரியங்களும், ஆரம்பிக்கும் எந்தப்பணியும் உடனுக்குடன் முடிந்து விடும். செய்தொழில், வியாபாரத்தில் நல்லமாறுதலான திருப்பங்கள் ஏற்படும். சில புதிய முயற்சிகளில் ஈடுபாடும் கூடும். கூடுதலான வருமானப் பெருக்கம் ரொட்டேஷனுக்கு பக்கபலமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவியில் உயர்வு இருக்கும்.

ஜூலை – 1-7-2012 முதல ;31-7-2012 வரை- செய்தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளால் பாராட்டுக்கள் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் நட்பும், நன்மையும், கிட்டிடும். பணவசதி, சரளமாக, தாராளமாக புரளுவதால் பணப்பிரச்னை இருந்திடாது. குடும்பத்தில் மங்கள கரமான காரியங்கள் திருமணம் சுபகாரியம் தடபுடலாக இருக்கும்.

ஆகஸ்ட்-1-8-2012 முதல் 31-8-2012 வரை- இக்காலக்கட்டம் சுறுசுறுப்பாகவும் இருக்கும். முயற்சிக்கும் காரியங்களும், எதிர்பார்த்த படி நடக்கும். வருமானங்கள் அதிகரிக்கும். செய்தொழில், வியாபாரம், எதுவானாலும் கணிசமான லாபகரமான பணப் புழக்கம் இருந்து விடும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாறுதல்கள் இருக்கும். சிலர் வெளிநாடு செல்லவும் சான்ஸ் இருக்கும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவர்.

செப்டம்பர்-1-9-2012 முதல் 30-9-2012 வரை- இக்காலக்கட்டம் அளவிட முடியாத அதிர்ஷ்டங்கள் உண்டு. அளவான சோதனைகளும் உண்டு என்றாலும் அவை ஓரளவு சாதகமாகத்தான் இருக்கும். தவறுகளைக் கண்டுபிடித்து விடுவீர்கள். ஓட்டைகளை அடைத்து விடுவீர்கள். இதன்மூலம் செய்தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நீங்கிப் புது சுறுசுறுப்பு-விறுவிறுப்பு ஏற்படும்வீண் பழிகள் விலகும்.

அக்டோபர் -1-10-2012 முதல் 31-10-2012 வரை- இக்காலக்கட்டம் சுறுசுறுப்பாகவும், செயல்களில் விறுவிறுப்பாகவும் இருக்கும். முயற்சிக்கும் காரியங்களில் உடனுக்குடன் நடைபெறும். செய்தொழில், வியாபாரம் சீராக நடைபெறும். உத்தியோகஸ்தர் களுக்கு அனுகூலமான நல்ல மாறுதல் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் கணிசமான தொகை கைக்கு கிட்டிடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நவம்பர் 1-11-2012 முதல் 30-11-2012 வரை- எதையும், தைரியமாக துணிச்சலாக செய்வீர்கள். வெற்றி நிச்சயம். இதற்கு தேவையான ஆதரவும் உதவிகளும், பக்கப்பலமும், உங்களுக்கு கிட்டிடும். உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் பயன்படும் திட்டங்களைத் தீட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகள் முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

டிசம்பர் -1-12-2012 முதல் 31-12-2012 வரை – இந்தக்காலக்கட்டம் சிறிது மந்தமாகதான் இருக்கும். முன்பின் யோசிக்காது எங்கும்,எதிலும் இறங்குவது நல்லதல்ல. எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. செய்தொழில், வியாபாரத்தில் மாறுதல் இருக்கும். போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனதுக்கு பிடிக்காத சம்பவங்கள் நடைபெறும். எந்த பணியை ஆரம்பித்தாலும் இழுபறியாகவே இருக்கும்.

ஜனவரி -1-1-2013 முதல் 31-1-2013 வரை – இக்காலகட்டங்களில் நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும் சுணக்கமான முயற்சிகளும், தடைபட்ட பணிகளும் நடை பெறும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். செய் தொழில், வியாபாரத்தில், கெடுபிடிகள் நெருக்கடிகள் தீர்ந்துவிடும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். எந்த பாதிப்பும் ஏற்படாது.

பிப்ரவரி -1-2-2013முதல் 28-2-2013 வரை – இந்தக்காலகட்டம் தேவை இல்லாமல் குழம்பிக்கொண்டிருந்த உங்களை அதிகமாக சிந்திக்க வைக்கும். நல்லது எது? கெட்டது எது? என்று புரிந்துக் கொண்டு விடுவீர்கள். செய்தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் என்ற பதட்டநிலை இருந்தாலும் அவைகளை சாதுர்யமாக சமாளித்துவிடுவீர்கள். கொடுத்த கடனை கேட்க முடியாது.

மார்ச்-1-3-2013 முதல் 31-3-2013வரை – இக்காலகட்டத்தில் ஓரளவு அனுகூல மாகவே இருக்கும் உங்களுக்கு புரியாமல் தெரியாமல் இருந்த பல விஷயங்கள் புரிந்து விடும். எதிர்காலத் திட்டமொன்று கூடிவரும். செய்தொழில், வியாபாரம் சுறுசுறுப் படையும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்லகாலம் பிறக்கும். புதிய வரவொன்று இக்காலகட்டத்தில் இருக்கும்;. குடும்பத்திலும் உங்களுக்கு பிடித்த சந்தோஷ நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏப்ரல் 1-4-2013 முதல் 30-4-2013 வரை – இக்காலகட்டம் அனுகூல மாகவும் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். விட்டதைப் பிடித்து விடுவீர்கள். அதிர்ஷ்டகாற்று உங்கள் பக்கம் வீச ஆரம்பிக்கும். குருட்டு அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்கலாம். செய்தொழிலில், திடீர் நல்ல மாறுதலான திருப்பம் உண்டாகும். லாபகரமான வருமானப் பெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

மே 1-5-2013 முதல் மே 27-5-2013 வரை – இந்தக்காலக் கட்டங்களில் பிரச்னைகள் இருந்தாலும் சமாளிக்கிற அளவுக்கு சாதுர்யமும் சாமர்த்தியமும் இருக்கும். புதிய குழப்பங்கள், குளறுபடிகள், பிரச்னைகள் வரும். செய்தொழில், வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வரவிருந்த நல்ல செய்திகள் பாதியில் நிற்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி புத்துணர்ச்சியும் செயல் முறைகளில் மறுமலர்ச்சியும் நல்ல மாறுதலான அதிர்ஷ்டகரமாக திருப்பத்தையும் ஏற்படுத்தும். புதுமனிதராகவும், தெளிவும், தெம்பும், உற்சாகமும், தோற்றத்திலே பளபளப்பும், முகத்திலே மலர்ச்சியும் உள்ளத்திலே குளிர்ச்சியும் நிறைந்து காணப்படுவீர்கள்.

குரு வாழ்க! குருவே துணை!![rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: