திரையுலகம் ஹாலிவுட்ல கூப்டாங்க…சொல்லப்போகிறார் அசின்

ஹாலிவுட்ல கூப்டாங்க…சொல்லப்போகிறார் அசின்

Indian actress Asin

காணொளி:-

அசின் புதிதாக டான்ஸ் கற்றுக்கொள்ளுகிறாராம். அது வால்ட்ஸ் எனப்படும் ஒருவகையான டான்ஸ் இந்த டான்ஸை ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம், சில தமிழ்ப் படங்களில் கூட பார்த்திருக்கலாம். பார்ட்டிகளின்போது ஜோடி ஜோடியாக ஆடுவார்கள். அதுதான் வால்ட்ஸ் டான்ஸ்.

அதைத்தான் தற்போது அசின் கஷ்டப்பட்டு கற்று கொண்டுயிருக்கிறார்.தமிழ் சினிமாயுல்கில் நல்ல தரவரிசையில் இருக்கும் போதே பாலிவுட்டிற்கு சென்றவர் நடிகை அசின். அங்கு கஜினி ரீமேக் படத்தில் அமிர்கானுடன் சேர்ந்து நடித்தார். அத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு அசின் நடித்த எந்தப் படமும் பெரியதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடாததால் வித்தியாசமான பல முயற்சிகளை செய்து வருகிறாராம் அசின்.அதில் ஒன்று தான் இந்த வால்ட்ஸ் டான்ஸ்.

ஒரு ஸ்பெஷல் மாஸ்டரை நியமித்து அவருடன் சேர்ந்து இரவு பகல் பாராமல், சற்றும் தாளர்ச்சியாடைமால் கற்றுக் கொண்டிருக்கிறாராம்.சரி எந்தப் படத்திலாவது வால்ட்ஸ் டான்ஸ் ஆடப் போகிறாரா என்று கேட்டால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, கத்து வச்சுக்கிட்டா கூடுதல் தகுதியாக இருக்கும். அதனால்தான் கற்றுக் கொள்கிறார் என்கிறார்கள் ஆசின் தரப்பினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி