செய்திகள்,முதன்மை செய்திகள் இந்த சாமியார்களே இப்படி தான் ரஞ்சிதாவுக்கு வந்த புது பிரச்சனை

இந்த சாமியார்களே இப்படி தான் ரஞ்சிதாவுக்கு வந்த புது பிரச்சனை

Ranjitha nithiyanada scam

காணொளி:-

நித்யானந்தாவுடன் என்னை தேவையில்லாமல் தொடர்புபடுத்துவது ஏன்? என்று சிலிர்த்து எழுந்துள்ளர் நடிகை ரஞ்சிதா. நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பதவி ஏற்றது முதல் ரஞ்சிதா- நித்யானந்தா சர்ச்சை புயலை கிழப்ப ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெயேந்திரர், “நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது. நடிகை ரஞ்சிதா எப்போதும் அவருடன் இருக்கிறார்,” என்று பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். பத்து நாட்களுக்குள் ஜெயேந்திரர் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று கெடு விதித்திருந்தார் நித்யானந்தா. இந்த நிலையில் இன்று காலை 10.00 மணியளவில் நடிகை ரஞ்சிதாவின் வக்கீல்கள் முருகையன் பாபு, சண்முக சுந்தரம், கோபி, அருண்குமார் ஆகியோர் எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் கோர்ட்டுக்கு வந்தனர்.அங்கு அவர்கள் ஜெயேந்திரருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் கொடுத்த மனுவில், “நான் (ரஞ்சிதா) தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்துள்ளேன். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளேன். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். ராகேஷ் ராமச்சந்திராமேனன் என்ற ராணுவ வீரரை நான் திருமணம் செய்துள்ளேன். சமுதாயத்தில் நான் நல்ல பெயருடன் வாழ்ந்து வருகிறேன். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளேன். நித்யானந்தா சுவாமிகளின் ஆசிரமத்துக்கு சென்று வரும் நான் அவரது சீடராகவும் உள்ளேன்.

நித்யானந்தா சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், விழாக்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளித்த ஒரு பேட்டியில் ரஞ்சிதா என்பவர் நித்யானந்தாவுடன் எப்போதும் இருக்கிறார் என்று கூறியுள்ளார். இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ஜெயேந்திரரின் இந்த பேட்டி எனக்கும் நித்யானந்தாவுக்கும் உள்ள குரு- சீடர் உறவை கொச்சைப்படுத்துவது போல உள்ளது. ஜெயேந்திரர் பேட்டியை பார்த்த என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சகோதரி ஜோதி ஆகியோர் என்னை போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஜெயேந்திரர் மீது சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவர் என்னைப்பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 மற்றும் 500 ஆகியவற்றின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்,” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில், “என்னைப்பற்றி ஜெயேந்திரர் கூறிய கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை. எனவே அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர நீதிமன்றத்துக்கு வந்தேன். இது தொடர்பாக நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் திங்கட்கிழமை விரிவாக பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி