திரையுலகம் கோச்சடையானிலிருந்து இது ஏஆர் ரஹ்மான்…வருஷம்….

கோச்சடையானிலிருந்து இது ஏஆர் ரஹ்மான்…வருஷம்….

Popular Tamil musician A.R. Rahman

ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஒரே கொண்டாட்டம் தான்… இந்த ஆண்டு ஆறு புதிய படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் ஏ ஆர் ரஹ்மான், கடந்த ஆண்டு ஒரு தமிழ்ப் படத்துக்குக் கூட அவர் இசையமைக்கவில்லை அதனால் இந்த ஆண்டு ஆறு புதிய படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்!

அவர் இசையில் முதலில் வரவிருக்கும் திரைப் படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான், இந்த திரைபடம் வரும் செப்டம்பர் அல்லது தீபாவளிக்கு வெளிவரும் என்று தெரிகிறது. வெகு விரைவில் இசைத்தட்டு வெளியீடு சம்பந்தமாக செய்தியைகளை எதிர்பார்கலாம்.

மணிரத்னம் இயக்கும் கடல் படம் தான் அடுத்த ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளிவரபோகும் திரைப்படம். இதில் இன்னொரு விசேஷமான செய்தி என்னவென்றால், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் படப்பிடிப்பு நடக்கும் கடல்புரத்துக்கே போய் பாடல்களை உருவாக்கியுள்ளார்.

இந்த இரு படங்களை தவிர, தனுஷ் நடிக்கும் மரியான்,விஜய் நடிக்கும் யோஹன், ரஜினி தொடங்கவிருக்கும் புதிய படம் என ஆறு படங்கள் அவர் இசை மழையில் வெளி வர போகிறது. சின்னதிரையில் கவுதம் மேனனின் சீரியல் ஒன்றிற்கும் இசை அமைத்து தர அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இதைப்பற்றி கூறும்போது, “நான் தமிழில் கடந்த ஆண்டு பணியாற்றாமல் இருந்ததற்கு எந்த காரணமும் இல்லை. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டின் சிறந்த பாடல்களை தந்துவிடுவேன்,” என்கிறார்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி