திரையுலகம் ரஜினிக்காக பார்க்கிறேன்… ஆர்பரிக்கும் அலட்டல் சுந்தரி

ரஜினிக்காக பார்க்கிறேன்… ஆர்பரிக்கும் அலட்டல் சுந்தரி

Dhanush and Shruti Hassan Hot Pics in movie 3

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான தனுஷ் மீது நாளொரு மேனியாக சர்ச்சைகள் பெருகி வருகின்றன.

அவற்றில் ஒன்றாக கொல வெறி பாடலுக்கு தன்னை ஒப்பந்தம் செயது கடைசி நிமிடத்தில் ரத்து செய்ததால் தனுஷின் மீது நடவடிக்கை எடுக்க இருந்த இந்தி நடிகை ராக்கி சாவந்த் ரஜினிக்காக மன்னிப்பதாக கூறியுள்ளார்.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் ஐஸ்வர்யா கணவர் தனுஷ் பாடிய கொலவெறி பாடல் சர்வதேச அளவில் யாரும் எதிர்பார்க்கா வகையில் பிரபலமானது. இச்சூழலில் தனுஷுடன் இந்தியில் கொலவெறி பாடலில் நடனமாட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கடைசி நேரத்தில் ராக்கி சாவந்த் கழட்டி விடப்பட்டதால் கோபத்தில் தனுஷை திட்டி தீர்த்ததோடு சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க போவதாகவும் மிரட்டினார். ஆனால் தீடீரென்று மனம் மாறிய ராக்கி சாவந்த் பத்திரிகையாளர்களிடம் ரஜினியை தான் மிகவும் மதிப்பதாகவும் ரஜினியின் மருமகன் எனும் காரணத்தால் தனுஷை தான் மன்னித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி