இலங்கை போரை முடிந்த வரை மறைத்த சன் டிவிக்கு இலங்கை வைத்த ஆப்பு…

விளம்பரங்கள்

Tamil popular Sun TV

சன் டி.வி. செய்தியாளர்களின் தொலைத்தொடர்பு, செய்மதி உபகரணங்கள் ஆகியவற்றைப் இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது இதனால் கொதிப்படைந்த சன் டி.வி. செய்தியாளர்கள் விமானநிலைய சுங்க அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கை பயணம் குறித்தான செய்திகளையும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் தற்போதைய நிலைவரங்களை குறித்தும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சன் டி.வியின் செய்தியாளர்கள் சிலர் இலங்கை வந்துள்ளனர்.

விமானநிலையத்தில் இவர்களை சோதனைக்குட்படுத்திய சுங்கத் அதிகாரிகள் அவர்கள் கொண்டுவந்த செய்மதிகள், தொலைத்தொடர்புக் கருவிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவற்றை நாட்டுக்குள் எடுத்துச்செல்லக்கூடாது என சொல்லியுள்ளனர். இதன் பின்னணியில் இலங்கை வெளிவிவகார அமைச்சகம் இருபதாக கூறப்படுகின்றது. சுங்க அதிகாரிகளின் இந்தக் கண்டிப்பான உத்தரவால் வெறும் பார்வையாளார்களகவே இந்திய ஊடகவியலாளர்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்குக் ஏதேனும் குந்தகம் ஏற்படும் என்ற காரணத்தை கருத்தியே சன் டி.வியின் தொலைத்தொடர்புக் கருவிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை என இலங்கை அரச தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கையால் சன் டி.வி. தொலைக்காட்சி நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

ஊடக சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழிய அடிக்கடி பேசும் இலங்கை அரசு நடந்துகொள்வது சரியா என்று சன் டி.வி செய்தியாளர்கள் விமானநிலையத்தில் கேள்வி எழுப்பி சுங்க அதிகாரிகளுடன் கடும் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், இல்லாமல் இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் பன்னாட்டு ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: