அரசியல்,முதன்மை செய்திகள் இது எங்க ஏரியா உள்ள வராதே….

இது எங்க ஏரியா உள்ள வராதே….

Raj Thackeray Maharastra political leader

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மும்பையில் பிகார் விழாவில் கலந்து கொள்வதற்கு மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிகார் மாநில நுற்றாண்டு விழா சென்ற மார்ச் மாதம் தான் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் எதற்கு ஒரு விழா? தைரியமிருந்தால் நிதிஷ் வரட்டும் என ராஜ் தாக்கரே கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பிகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்ல விசா தேவையில்லை என்றும், தான் திட்டமிட்ட படி மும்பையில் பிகார் திவாஸில் கலந்து கொள்வேன் என தெரிவித்தார்.

மும்பையில் உள்ள பிகார்வாசிகள், பிகார் மாநிலம் உருவாக்கப்பட்ட 100 வது ஆண்டை பிகார் திவாஸ் என்ற பெயரில் கொண்டாடிவருகின்றனர். இது குறித்த நிகழ்ச்சி சென்ற மார்ச் மாதம் 22ந்தேதி மும்பையில் நடந்தது. தற்போது இது போன்ற நிகழ்ச்சி பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் வரும் 15ந்தேதி அன்று நடக்க இருக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டுமென மஹாராஷ்டிர மாநில அரசை ராஜ் தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார்.

மும்பையில் பிகாரிகள் அதிக அளவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிகாரிகள், மும்பைவாசிகளின் வேலைகளை பிடுங்கி கொள்வதாகவும் இதனால் மும்பையில் மும்பைவாசிகளுக்கு வேலை கிடைப்பதில் என சிவசேன தொடர்ந்து புகார் கூறி வருகிறது. இதனால் பிகாரிகளுக்கும் சிவசேனா தொண்டர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி