சென்னையை சுனாமி தாக்கலாம்….எச்சரிக்கை…

விளம்பரங்கள்

Tsunami in Chennai

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே பாண்டா அசே பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், மேற்கு வங்கம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது.

இந்திய நேரப்படி இன்று பகல் 2 மணிக்கு (இந்தோனேஷிய நேரப்படி இரவு 7 மணிக்கு) இந்தியப் பெருங் கடலில் பூமிக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 8.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும்.

இதையடுத்து அந்தநான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை சுமார் மாலை 5மணிக்கு சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை செய்யபட்டுள்ளது…பொது மக்கள் யாரும் கடக்கரை ஓரம் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: