அரசியல் என்னது!!! இந்தியாவில ராணுவ புரட்சியா…

என்னது!!! இந்தியாவில ராணுவ புரட்சியா…

Inidan-Military

கடந்த ஜனவரி அன்று மத்திய அரசின் உத்தரவின்றி ராணுவப் படைகள் டில்லி வந்ததாக வெளியிடப்பட்ட செய்தி அரசியல் அரங்கில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவத் தளபதி வி.கே.சிங். வயது சம்பந்தமான சர்ச்சையில், அவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 16 அன்று மனு தாக்கல் செய்தார். அதற்கு சில மணி நேரங்கள் கழித்து,இரண்டு ராணுவப் படை பிரிவுகள் டில்லியை நோக்கி விரைந்ததாக ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. உளவுத் துறையின் தகவல்களை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள அந்த நாளேடு, ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்கள், போர் விமானங்களுடன் அந்தப் படைகள் டில்லி நோக்கி வந்ததாக தெரிவித்துள்ளது.

டில்லியிலிருந்து ஏறத்தாழ 150 கி.மீ. தூரம் வரை வந்த அந்தப் படைகள் பின்னர் திரும்பச் சென்றுவிட்டது. இது சம்பந்தமாக பிரதமர் மன்மோகன் சிங் கருத்துக் கூறுகையில், ” இவ்வாறான செய்தி மிகவும் ஆபத்தானது , பெருமைமிக்க அமைப்பான ராணுவத்தின் மதிப்பை சீர்குலைக்கும் இவ்வாறான செய்திகளைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள்,” இவ்வாறான ராணுவப்படைகள் நகர்வு வழக்கமாக நடைபெறும் ஒரு நடவடிக்கைதான்” எனத் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி