திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட முன்னால் அமைச்சரின் தம்பி…

விளம்பரங்கள்

திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ராமஜெயம். திருச்சியில் அரசியல் மற்றும் சொந்தத் தொழில்கள் உள்ளிட்ட பல விவகாரங்களில் அண்ணன் கே.என்.நேருவுக்கு உதவியாகச் செயல்பட்டு வந்தவர் ராமஜெயம்.
திருச்சி அறிவாலய நில மோசடி வழக்கில் கே.என்.நேரு கைது செய்யப் பட்ட பொது ராமஜெயமும் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டார். இந்நிலையில் இன்று காலை வாக்கிங் சென்ற ராமஜெயம் வீடு திரும்ப வில்லை என்றும் அவர் கடத்தப் பட்டு இருக்கலாம் என்று கூறப் பட்டு வந்த நிலையில் ராமஜெயத்தின் உடல் கை, கால் கட்டப் பட்ட நிலையில் கல்லணை அருகே புதரில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. ராமஜெயம் வெட்டப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ராமஜெயத்தின் உடலை அவரது உறவினர்கள் அடையாளம் கட்டியுள்ளனர். ராமஜெயத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. ராமஜெயத்தைக் கொலை செய்தவர்கள் யார் என திருச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமஜெயம் கொலை செய்யப் பட்டுள்ளது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: