பா.மா.க தலைவர் ராமதாஸின் சூப்பர் காமெடி…

விளம்பரங்கள்

anbumaniramadoss

“மத்திய அரசில் உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியை விட எல்லா வகையிலும் என் மகன் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சர் பதவி வகிக்க தகுதி படைத்தவர்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் தற்போதுள்ள நான்கு முறையான கல்வி முறைகளை மாற்றி ஒரே மாதிரியான கல்வித் திட்டம் செயல் படுத்தப் பட வேண்டும் என்றும் அரசே தனியார் பள்ளிகளை ஏற்று நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஜி.கே.மணியின் பேட்டிக்கு அளித்த பதிலில் பாமகவில் குடும்ப அரசியல் நடந்து வருவதாகவும் பாமகவின் முன்னாள் தலைவர்கள் எங்கே என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதில் அளித்துப் பேசிய ராமதாஸ் அழகிரியை விட என் மகன் அன்புமணி எல்லா வகையிலும் மத்திய அமைச்சர் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: