முரசு சின்னம் கிடைக்குமா…விஜயகாந்த்தின் தே.மு.தி.க விற்கு…

விளம்பரங்கள்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

முரசு சின்னத்தை தே.மு.தி.க.வுக்கு நிரந்தரமாக ஒதுக்கக்கோரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அ‌க்கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வழ‌க்கு தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர். இ‌ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரு‌கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் முரசு சின்னத்தில் போட்டியிட்டது. இந்த சின்னம் சுயேச்சை வேட்பாளர்களுக்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் அகில இந்திய அளவில் ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் ஆகும்.

அப்போது, தமிழ்நாட்டில், விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்தால் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் முரசு சின்னத்தை தே.மு.தி.க.வின் நிரந்தர சின்னமாக அறிவிக்கக்கோரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வழக்கு தாக்கல் செய்து‌ள்ளா‌ர். இந்த வழக்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: