அரசியல்,முதன்மை செய்திகள் திருமா முகத்தில் கரி பூசிய ராஜபக்ஷே…

திருமா முகத்தில் கரி பூசிய ராஜபக்ஷே…

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்றச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

இது இந்தியாவுக்கு அவமானம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் இன்று நடக்க இருந்தது.

பொதுமக்களின் அஞ்சலிக்காக தீருவில் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். பார்வதி அம்மாளின் மறைவையொட்டி அப் பகுதியில் தமிழர்கள் கறுப்புக் கொடிகளை வீடுகளில் பறக்க விட்டிருந்தனர். அதை இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவினர் பிடுங்கி வீசினர்.

இந் நிலையில் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க திருமாவளவன் இன்று காலை விமானம் மூலம் கொழும்பு சென்றார். அவரை வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் செல்ல தமிழ் தேச கூட்டமைப்பினர் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்தனர்.

இந் நிலையில் திருமாவளவனை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்த போலீசார், அவர் இலங்கைக்குள் நுழைய தடை விதித்திருப்பதாகக் கூறி, அடுத்த விமானத்திலேயே சென்னைக்கு திருப்பி அனுப்பினர்.

இலங்கையின் இந்தச் செயலை வன்மையாக கண்டித்துள்ள திருமாவளவன், இது இந்தியாவுக்கே அவமானம். இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.